Chocolate milk for babies in tamil: சாக்லேட் மில்க் என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம்தான்.நாம் வெளியில் எங்காவது குழந்தைகளை அழைத்து செல்லும் பொழுது அவர்களை கை காண்பிப்பது முதலில் சாக்லேட் மில்க் தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி.சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதில் ப்ரெசெர்வேட்டிவ்ஸ்,நிறமூட்டிகள் போன்றவை கலந்திருந்தாலும் எப்பொழுதாவதுதானே வாங்கிக்கொடுக்கின்றோம் என நாம் மனதை தேற்றிக்கொள்வதுண்டு.
ஆனால் அதை நாம் வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் குஷியாக இருப்பதோடல்லாமல் நமக்கும் மனதிற்கு திருப்தியாக இருக்கும்..இந்த சாக்லேட் மில்க் ஆனது ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றதாகும்.

குழந்தைகளுக்கான ஹாட் சாக்லேட் மில்க்
தேவையானவை
- பால் – 2 கப்
- கோகோ பவுடர் – 3 டீஸ்பூன்
- வெல்லம் – 3 டீஸ்பூன்
- இலவங்கப்பட்டை தூள் – இம்மியளவு.
Chocolate milk for babies in Tamil
செய்முறை
1.ஒரு பாத்திரத்தில் கோகோ பவுடர், வெல்லம் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
2.சிறிது பால் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு கிளறவும்.
3.மீதமுள்ள பாலையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
4.மிதமான தீயில் பால் நுரை வரும் வரை கொதிக்க வைக்கவும்.
5.சிறிது நேரம் கிளறவும்.
6.சூடான சாக்லேட் மில்க் ரெடி.
சாக்லேட் மில்க்கில் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம்,புரோட்டீன், வைட்டமின் ஏ,வைட்டமின் சி மற்றும் அயன் போன்றவை நிறைந்துள்ளன.
மேலும் இது எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாகின்றன. கோடை காலங்களில் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்கும் இந்த சாக்லேட் மில்க் சிறந்த மூலமாகும்
நீங்கள் இந்த சாக்லேட் மில்கினை ஒருமுறை செய்து பாருங்கள் குழந்தைகள் அடிக்கடி இதை செய்யச்சொல்லி நச்சரிப்பார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான ஹாட் சாக்லேட் மில்க்
Ingredients
- 2 கப் பால்
- 3 டீ.ஸ்பூன் கோகோ பவுடர்
- 3 டீ.ஸ்பூன் வெல்லம்
- இம்மியளவு இலவங்கப்பட்டை தூள்
Notes
- ஒரு பாத்திரத்தில் கோகோ பவுடர், வெல்லம் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- சிறிது பால் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு கிளறவும்.
- மீதமுள்ள பாலையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- மிதமான தீயில் பால் நுரை வரும் வரை கொதிக்க வைக்கவும்.
- சிறிது நேரம் கிளறவும்.
- சூடான சாக்லேட் மில்க் ரெடி.
Leave a Reply