cold and cough remedies in tamil: குழந்தைகளுக்கு மழைக்காலம் வந்து விட்டாலே சளி,இருமல் போன்ற பிரச்சனையும் கூடவே சேர்ந்து வந்துவிடும். என்னதான் மருத்துவரிடம் அழைத்துச் சென்று நாம் ஆன்ட்டிபயாட்டிக்கள் மற்றும் சிரப்கள் போன்றவற்றை கொடுத்தாலும் சளி தொந்தரவு லேசாக ஆரம்பிக்கும் பொழுது வீட்டு வைத்தியங்கள் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆங்கில மருந்து கொடுக்காமல் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய வாய்ப்புண்டு.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
லேசாக ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும் பொழுது இந்த வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சிக்கலாம். ஆனால் அறிகுறிகள் காய்ச்சலுடன் மிக அதிகமாக இருந்தால் குழந்தைகள் நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்தது. நான் தற்பொழுது கூறும் வீட்டு வைத்தியங்கள் எல்லாம் மிகவும் லேசான அறிகுறிகளுடன் கூடிய ஆரம்ப கட்டத்தில் வரும் பிரச்சனைகளுக்கு தான்.
இந்த வீட்டு வைத்தியத்தினை ஆறு மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்யலாம். பொதுவாக சளி இருக்கும் பொழுது பாரம்பரியமாக இருக்கும் சில மூலிகைப் பொருட்களான ஓமம், கிராம்பு போன்றவற்றை வறுத்து பொட்டலமாக கட்டி நாம் நெஞ்சு மற்றும் முதுகு பகுதியில் ஒத்தடமாக கொடுப்போம்.அது போன்று பொட்டலங்களை குழந்தைகள் சுவாசிக்குமாறு தூங்கும் பொழுது அவர்களின் அருகில் வைக்கும் பொழுது அந்த சுவாசம் குழந்தைகளின் உள்ளுறுப்புகளுக்கு சென்று சளியில் இருந்து நிவாரணம் பெற உதவும்.
இவ்வாறு சளி மற்றும் இருமல் பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும் இயற்கையான இன்ஹேலர் எப்படி செய்வது என்று நாம் பார்க்கலாம். நாம் கீழே பார்க்கும் 3 வகையான இன்ஹேலர்களை குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு சளி தொந்தரவு இருக்கும்பொழுது உபயோகப்படுத்தலாம்.
cold and cough remedies in tamil
cold and cough remedies in tamil
ஓம ஒத்தடம் மற்றும் இன்ஹேலர்
குழந்தைகளுக்கு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் ஒரு இயற்கையான பொருள் என்றால் அதனை ஓமம் என்று கூறலாம். அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு அஜீரண பிரச்சனை ஏற்படும் பொழுதும் ஓம தண்ணீரை நாம் வீடுகளில் கொடுப்போம்.
ஓமத்தில் இயற்கையாகவே ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் பண்பு இருப்பதால் அதனை சுவாசிக்கும் பொழுது சளி தொந்தரவு இருந்து விடுபட உதவியாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு சளி இருமல் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கும் பொழுது இந்த பொட்டலத்தை அருகில் வைக்கலாம்.
தேவையானவை
- ஓமம்
- காட்டன் துணி
செய்முறை
- கடாயை சூடாக்கி அதில் ஓமத்தை சேர்த்து நறுமணம் வரும் வரை லேசாக வறுக்கவும்.
- வறுத்த ஓமத்தினை காட்டன் துணியில் நன்கு கட்டவும்.
- ஒத்தடம் வைப்பதற்கு கட்டுவது போல் நன்கு மூட்டையாக கட்டி குழந்தைகளுக்கு நெஞ்சம் மற்றும் முதுகு பகுதிகளில் சூடு பொறுக்கும் அளவிற்கு ஒத்தடம் வைக்கலாம்.
- ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பொட்டலத்தினை குழந்தைகள் தூங்கும் போது சுவாசிக்குமாறு அருகில் வைக்கலாம்.
cold and cough remedies in tamil
ஓமம் பூண்டு ஒத்தடம்
ஓம ஒத்தடம் எப்படி கொடுப்பது என்பதை இதற்கு முன்பாக பார்த்தோம். ஓமத்துடன் பூண்டையும் சேர்த்து ஒத்தலமாக கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் குணமாவதற்கு உபயோகமாக இருக்கும்.
தேவையானவை
- ஓமம்- ஒரு கப்
- பூண்டு- மூன்று பல்
- காட்டன் துணி
செய்முறை
- ஒரு கடாயில் ஓமம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து லேசான தீயில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வறுக்கவும்.
- சூடு பொறுக்கும் அளவிற்கு பொட்டலமாக கட்டி குழந்தைகளுக்கு ஒத்தடமாக கொடுக்கலாம்.
- சிறு குழந்தைகளுக்கு அந்த பொட்டலத்தினை தூங்கும்பொழுது அருகில் வைக்கும் பொழுது சுவாச கோளாறில் இருந்து விடுபட உதவும்.
cold and cough remedies in tamil
ஓமம் பூண்டு மற்றும் கிராம்பு ஒத்தடம்
ஓமம் பூண்டு ஆகியவற்றுடன் கிராம்பு சேர்த்து கொடுக்கும் பொழுது இருமல், சளி மற்றும் மூக்கடைப்புவிடுபடுவதற்கு நன்கு உதவும். இயற்கையாகவே பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஆனது சுவாச பாதையில் இருக்கும் இருந்து விடுபட உதவியாக இருக்கும்.
தேவையானவை
- ஓமம்- ஒரு கப்
- பூண்டு -மூன்று பல்
- கிராம்பு -3
- காட்டன் துணி
செய்முறை
- கடாயை சூடாக்கி அதில் பூண்டு, ஓமம் மற்றும் கிராம்பு சேர்த்து மிதமான சூட்டில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வறுக்கவும்.
- காட்டன் துணியில் இவற்றை போட்டு சூடு பொறுக்கும் அளவிற்கு ஒத்தடம் கொடுக்கலாம் அவ்வாறு இல்லையெனில் குழந்தைகள் தூங்கும் பொழுது பொட்டலத்தை அருகில் வைக்கலாம்.
காய்ச்சலுடன் சளியின் வீரியமும் அதிகமாக இருந்தால் இந்த வீட்டு வைத்தியங்கள் எடுபடாது குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பித்து முறையான மருந்துகள் கொடுத்தால் மட்டுமே சரியாகும். நான் முன்பே கூறியபடி லேசான நோய் அறிகுறிகள் இருக்கும் பொழுது இந்த வீட்டு வைத்தியங்களை நாம் பின்பற்றலாம்.
தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply