Dates Laddu Recipe in Tamil: லட்டு என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம்தான்.ஆனால் குழந்தைகள் அடிக்கடி விரும்பி கேட்கும் பொழுது அவர்கள் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா? என்ற கேள்வி நம்முள் எழும்.அப்படியானால் அதை நாம் வீட்டிலேயே செய்து கொடுத்தால் இன்னும் திருப்தியாக இருக்குமல்லவா.இதோ அதற்காகவே உங்களுக்கான ஸ்பெஷல் பேரிச்சம்பழம் எள் லட்டு ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பிரசித்திபெற்ற மகா சங்கராந்தி விழாவின் பொழுது செய்யப்படும் ரெசிபிகளில் ஒன்று பேரிச்சம்பழம் எள் லட்டு ரெசிபி.வழக்கமாக லட்டுகளில் சேர்க்கப்படும் சர்க்கரைக்கு பதிலாக இதில் பேரிச்சம்பழம் சேர்க்கப்படுவதால் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
Dates Laddu Recipe:
- கொட்டை நீக்கிய பேரிச்சம்பழம் – 5 கப்
- வெள்ளை எள்-1/3 கப்
Dates Laddu Recipe:
செய்முறை:
1.வெள்ளை எள்ளை பானில் போட்டு மிதமான சூட்டில் நல்ல நறுமணம் வரும்வரை வறுக்கவும்.பின்பு ஆறவிடவும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு
2 டே.ஸ்பூன் வெள்ளை எள்ளை தனியாக எடுத்து வைக்கவும்.மீதமுள்ள எள்ளை மிக்சியில் போட்டு பொடியாக்கவும்.
3. அதிகமாக அரைக்க வேண்டாம்.ஏனென்றால் பேஸ்டாக மாறிவிடும்.
4.பவுலில் பேரிச்சம்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
5.மசித்த பேரீச்சம்பழத்துடன் அரைத்து வைத்த எள் பவுடரை சேர்க்கவும்.சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். பால்,நெய் மற்றும் தண்ணீரை சேர்க்கக்கூடாது.
6.மாவை உள்ளங்கையில் வைத்து லட்டு போன்று உருட்டவும்.
7.மீதமுள்ள எள்ளை தட்டில் தூவவும்.
8.எள் லட்டின் மீது ஒட்டுமாறு தட்டில் நன்கு உருட்டவும்.
9.லட்டுகளை காற்று புகாத டப்பாவில் அடைக்கவும்.
இதையும் படிங்க: குழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்
பேரிச்சம் பழத்தில் இரும்புசத்து அதிகம் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு பலம் அளிக்கக்கூடியது.மேலும் பொட்டாசியம்,கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மூலபொருட்கள் அதிகம் இருப்பதால் எலும்புக்கு உறுதித்தன்மை அளிக்கின்றது. வெள்ளை எள்ளில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது.எனவே உடலுக்கு தேவையான புரோட்டீனை அளிக்ககூடியது.
அப்பாடா! இனிமேல் வழக்கமாக கடைகளில் வாங்கும் சர்க்கரை கலந்த லட்டுக்கு பை சொல்லலாம் என்று நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்! சரிதானே…
Leave a Reply