Dates recipe in tamil: பேரிச்சம் பழமானது உடலுக்கு நன்மை பயக்கும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. எனவேதான் ரத்த சோகை உள்ளவர்கள் முதல் அனைவரும் தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொள்வதை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் குழந்தைகளுக்கு இதை மென்று சுவைத்து தின்பதில் சிரமம் இருக்கும் என்பதால் நாம் குழந்தைகளுக்கு இதை கொடுக்க தயங்குவோம்.
எனவே அதை குழந்தைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு செய்து கொடுக்கலாம் என்பதை தான் நாம் பார்க்கப் போகின்றோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுக்கக் கூடாது என்பதால் பேரீச்சம்பழத்தினை பவுடராக செய்து குழந்தைகளுக்கு சர்க்கரைக்கு மாற்றாக எப்படி கொடுப்பது என்பதை இதற்கு முன்பு நாம் பார்த்துள்ளோம். ஆனால் இன்று நாம் பார்க்கவிருப்பது பேரிச்சை மசியல்.
பேரீச்சம்பழத்தின் மருத்துவ குணங்கள்
- பேரீச்சம்பழமானது உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தினை அளிக்கவல்லது.
- பேரிச்சம்பழத்தில் காப்பர்,பொட்டாசிம்,மாங்கனீசு, வைட்டமின் பி மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன.
- நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது. இயற்கையாகவே இனிப்புச் சத்து நிறைந்துள்ளதால் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை தரவல்லது.
- இதய ஆரோக்கியத்திற்கு பேரிச்சம்பழம் உதவுகின்றது. இதய குழாய்களில் கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுக்க வல்லது எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
- இதிலுள்ள நுண் சத்துக்கள் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- குழந்தைகளின் மூளையானது சுறுசுறுப்பாக இயங்க இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் உதவுகின்றது.
- மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லது.
- பெண்களுக்கு சீரான மாதவிடாய் சுழற்சிக்கு பேரிச்சம்பழம் பயன்படுகின்றது.
- பேரிச்சம் பழத்துடன் நட்ஸ் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Dates recipe in tamil:
தேவையானவை
- பேரிச்சம் பழம்
Dates recipe in tamil:
செய்முறை
1.பேரிச்சம் பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி சதைப்பகுதியை தனியாக எடுக்கவும்.
2.பேரிச்சம் பழத்தை தண்ணீரில் அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
3.பேரிச்சம்பழத்தை மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
4.பேரிச்சம்பழம் ஊற வைத்த தண்ணீரை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
5.ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றது.
குழந்தைகளுக்கு பேரிச்சம் பழத்தை எப்பொழுது கொடுக்கலாம்?
ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை முதன்முதலாக கொடுக்கும்போது மசியலாக கொடுக்க ஆரம்பிக்கலாம். 8 மாத காலத்திற்கு பிறகு டேட்ஸ் பவுடரை பால் மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் இனிப்பு சுவைக்காக கலந்து கொடுக்கலாம்.
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு டேட்ஸ் சிரப் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு முதல் முதலாக பேரிச்சம்பழம் கொடுக்கும் பொழுது முதலில் சிறிதாக கொடுத்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பது சிறந்தது.
குழந்தைகளுக்கு மற்ற உணவுகள் கொடுக்கும் பொழுது பேரீச்சம்பழத்தினை சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.
Dates recipe in tamil:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஆறு மாத குழந்தைகளுக்கு பேரீச்சம்பழ மசியலை கொடுக்கலாமா ?
ஆம்.குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்ததும் இயற்கை இனிப்பூட்டியாக இதனை கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு கீழ் நட்டு சர்க்கரை சேர்க்கலாமா ?
குழந்தைகளுக்கு ஒரு வயது வரை சீனி ,நாட்டு சர்க்கரை போன்ற எதுவும் கொடுக்கக்கூடாது .
குழந்தைகளுக்கு இயற்கை இனிப்பூட்டியாக என்னென்ன கொடுக்கலாம் ?
குழந்தைகளுக்கு எட்டு மாதத்திற்கு மேல் உணவில் இனிப்பு சுவைக்காக டேட்ஸ் பவுடர் சேர்க்கலாம்.மேலும் பழக்கூழ் ,காய்கறி கூழ் போன்றவையும் சேர்க்கலாம்.
பேரிச்சை மலசிக்கலை ஏற்படுத்துமா?
பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமிருப்பதால் மலச்சிக்கல் அண்டாது.
குழந்தைகளுக்கான பேரிச்சம்பழம் மசியல்
Ingredients
- பேரிச்சம்பழம்
Leave a Reply