Ginger Milk in Tamil: முன்பெல்லாம் மழைக்காலத்தில் மட்டும் தான் இருமல், சளி தொந்தரவு போன்றவை இருக்கும். அப்பொழுதும் கூட ஹாஸ்பிடலுக்கு செல்வதை விட வீட்டில் நம்ம அம்மாக்கள் செய்து தரும் கசாயம் தான் முதல் மருந்தாக இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இப்பொழுது வரும் பல்வேறு ஆன்ட்டிபயாட்டிக் கொடுப்பதற்கு முன்னால் இயற்கையான ஆன்ட்டிபயாட்டிக் தான் நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாத்தன. அந்த மருந்து தான் ஒருமுறை வந்த நோய் அடிக்கடி வராமல் நம்மை பாதுகாத்தது.
இன்னும் சொல்லப்போனால் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறையில் தான் காய்ச்சல், சளி போன்றவை பிடிக்கும். ஆனால் இப்பொழுது அப்படி அல்ல. ஒரு வருடத்திற்கு எத்தனை தடவை நோய் வரும் என்று நம்மால் கணிக்க முடியவில்லை.
நம் குழந்தைகளுக்கு நோய் வந்தவுடன் பாதுகாப்பதை விட நோய் வரும் முன்பாகவே ‘வருமுன் காப்போம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அவ்வப்போது இயற்கையான ஆன்ட்டிபயாட்டிக் கொடுத்தால் கவலைப்பட தேவையில்லை.
அப்படி இயற்கையாகவே சளி வராமல் தடுக்கக்கூடிய பொருளை தினமும் குழந்தைகள் உணவில் எப்படி சேர்ப்பது என்ற கேள்விக்குரிய சுலபமான தீர்வுதான் இந்த இஞ்சி பால்.
இஞ்சியில் இயற்கையாகவே சளி வராமல் காக்கக்கூடிய வேதி பண்புகள் உள்ளது என்பதால் இரவு தூங்குவதற்கு முன்னால் இந்த பாலை கொடுக்கும் பொழுது குழந்தைகளின் உடலில் பல மேஜிக் நடக்கும்.
Ginger Milk in Tamil
தினமும் குடித்தால் வயிற்றில் புண் ஏற்படும் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு இரு முறை அல்லது மூன்று முறை இந்த பாலினை கொடுக்கலாம்.
- இஞ்சி உடல் செரிமானத்திற்கு உதவக் கூடியது. இதை குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது வாயுத் தொல்லை, அஜீரண கோளாறு போன்றவை இருந்தால் உடனடியாக சரியாகும்.
- மேலும், உணவு செரிமானம் இல்லாததன் காரணமாக வயிற்றுப்போக்கு வாந்தி போன்றவை இருந்தாலும் இஞ்சி நல்ல பலன் அளிக்கும்.
- இஞ்சியில் இயற்கையாகவே ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கின்றது. மேலும், மைக்ரோபைல் எனப்படும் வேதிப்பொருட்கள் இதில் அதிகமாக இருப்பதால் இயற்கையாகவே உடலை குணப்படுத்தும் பண்பு இஞ்சிக்கு உண்டு.
- மூச்சுக்குழாய் சம்பந்தமான பிரச்சனை, இருமல், தும்மல் போன்ற அலர்ஜி தொந்தரவுகளில் இருந்து இயற்கையாகவே விடுபட இஞ்சி உதவுகின்றது.
- ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதில் இஞ்சி முதன்மையான பங்கு வைக்கின்றது. எனவே, உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடல் முழுவதற்கும் கிடைக்க உதவுகின்றது.
- குழந்தைகளுக்கு பல் ஈறுகளில் உள்ள பாக்டீரியா போன்றவற்றை விரட்டி சொத்தை பல் போன்ற தொந்தரவுகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
Ginger Milk in Tamil
Ginger Milk in Tamil
- பால் – 1 கப்
- துருவிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
- தேன்- 2 டேபிள் ஸ்பூன்.
Ginger Milk in Tamil
செய்முறை
1.இஞ்சியின் தோலை நீக்கி நைசாக துருவி அல்லது சீவி வைக்கவும். எவ்வளவு பால் உள்ளதோ அதற்கு ஏற்றார் போல் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.
2.பாலை மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து சீவி வைத்த இஞ்சியை சேர்க்கவும்.
3.இஞ்சியின் சாறு பாலில் இறங்கும் அளவிற்கு மிதமான சூட்டில் சூடு படுத்திக் கொண்டே இருக்கவும்.
4.பால் நன்றாக சூடானதும் தேனை சேர்க்கவும்.
5.இஞ்சி பாலினை குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியோர்களும் குடிப்பதன் மூலம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கும்.
6.இஞ்சி போலவே பூண்டு சேர்த்து பூண்டு பால் குழந்தைகளுக்கு கொடுத்தால் அதுவும் நல்ல பலன் அளிக்கும்.
இஞ்சி மிகவும் காட்டமானது என்பதால் வாரம் இருமுறை கொடுத்தால் போதுமானது. அதேபோன்று இஞ்சியை பாலில் சேர்க்கும் பொழுது நன்கு தோல் சீவி சேர்க்க வேண்டும்.
பெரியவர்களுக்கு கொடுக்கும் பொழுது, வயிற்றுப்புண், அல்சர் போன்ற தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பு இஞ்சி பாலினை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது என்பதால் இந்த பாலினை கொடுக்க வேண்டாம். அதேபோல், தேன்க்கு பதிலாக நீங்கள் பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் சளிக்கு இன்னும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பெரியவர்களுக்கு கொடுக்கும்பொழுது பனங்கற்கண்டு இல்லையென்றால் நாட்டு சக்கரை போன்றவை சேர்த்தும் கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Ginger Milk in Tamil
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இஞ்சி பாலை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு, இந்த இஞ்சி சேர்த்த பாலை வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.
இஞ்சி பாலை தினமும் கொடுக்கலாமா?
அளவுக்கு அதிகமாக கொடுத்தாலும் வயிற்றுப்புண் ஏற்பட்டு விடும் என்பதால் வாரம் இருமுறை கொடுத்தாலே போதுமான அளவு பலன் கிடைத்து விடும்.
சளி தொந்தரவு இருக்கும் பொழுது இந்தப் பாலை கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு சளி இருக்கும் பொழுது இஞ்சி பாலை கொடுத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி பால்
Ingredients
- பால்- 1 கப்
- துருவிய இஞ்சி- 1 டேபிள் ஸ்பூன்
- தேன்- 2 டேபிள் ஸ்பூன்
Leave a Reply