Herbal Tea for cough and cold : குளிர்காலம் என்றாலே ஜில்லென்ற காற்றும், சாரலும் நம்மை உற்சாகப்படுத்தினாலும் அனைவரும் அச்சம் கொள்ளும் பொதுவான விஷயம் ஒன்று உண்டு என்றால் அது நோய் தொற்றுக்கு தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஏனென்றால் யாரைப் பார்த்தாலும் சளி தொந்தரவு, இருமல், தும்மல் என்று முகமே வீங்கி போயிருக்கும். என்னதான் மருந்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்பெயரில் நாம் எடுத்துக் கொண்டாலும் வீட்டிலேயே சிறு சிறு கை வைத்தியங்களை செய்வது கூடுதல் பயனளிக்கும்.
அதற்காக நான் உங்களுக்கு பரிந்துரைக்கும் ஒரு சிறுவீட்டு வைத்தியம் தான் இந்த மூலிகை டீ. நம் முன்னோர்கள் சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதற்காகவே பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி வந்தனர்.
அவற்றுள் சிலவற்றை நாம் அன்றாட உணவுகளில் பயன்படுத்தும் மசாலாவுடன் சேர்த்து மறைமுகமாக நோய் தொற்றிலிருந்து விடுபடும் சூத்திரத்தை வகுத்தனர். அதனால்தான் நம்மால் ஓரளவு நோயிலிருந்து விடுபட முடிகின்றது.
கொரோனா நோய் தொற்றுக்காலத்தில் பெரும் சவாலில் இருந்து மீண்டு வந்ததே அதற்கு உதாரணம். அந்த கடும் சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் மருந்து மாத்திரைகளை காட்டிலும் வீட்டு வைத்தியங்களை தான் கையில் எடுத்தனர்.
இப்பொழுது நாம் எளிதாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே டீயினை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். இந்த டீயினை செய்வதற்கு மஞ்சள் தூள், ஓமம் மற்றும் இஞ்சி வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை நான் சேர்த்துள்ளேன். இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இந்த மூன்று பொருட்களில் அடங்கியுள்ள நன்மைகளை முதலில் நாம் பார்க்கலாம்.
Herbal Tea for cough and cold:
Herbal Tea for cough and cold
ஓமம்
- பொதுவாகவே நமக்கு ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கும், வாயு தொல்லையினை சரி செய்வதற்கும் நாம் ஓமத்தை பயன்படுத்தி இருப்போம்.
- வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் இருக்கும் பொழுது ஓம தண்ணீரை பயன்படுத்த நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் ஓமம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மட்டுமல்லாமல் சளியையும் குணமாக்குவதற்கும் உதவும்.
- ஓமத்தில் இயற்கையாகவே ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சையை எதிர்கொள்ளும் ஆன்ட்டிபங்கல் போன்ற பண்புகள் நிறைந்திருப்பதால் எந்த வகை தொற்றாக இருந்தாலும் அதிலிருந்து விரைவில் குணமடைய உதவுகின்றது.
- மேலும் ஓமத்தை உபயோகப்படுத்தும் பொழுது சுவாச குழாயை சீராக்கி ஆஸ்துமா போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமத்தை குறைக்க உதவுகின்றது.
- இயற்கையாகவே வலி நிவாரணியாகவும் இது பயன்படுகின்றது.
Herbal Tea for cough and cold
மஞ்சள்
- இயற்கை நமக்கு அளித்த சிறந்த ஆண்ட்டிபயாட்டிக் மஞ்சளாகும். மஞ்சளில் இயற்கையாகவே நிறைந்துள்ள குர்க்குமின் எனப்படும் பொருள் இயற்கையாகவே நிவாரணத்திற்கு உதவுகின்றது.
- மஞ்சளில் மேலும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளதால் செல்களுக்கு புத்துணர்வு அளித்து நோய்களில் இருந்து விடுபட துணை புரிகின்றது.
- மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி பல்வேறு தொற்றுகளில் இருந்து விடுபட உதவுகின்றது.
- செரிமான பிரச்சினைகள் இருந்தாலும் அதை குணப்படுத்தும் பண்பு மஞ்சளுக்கு உண்டு.
- உடல்ரீதியாக மட்டுமல்லாமல் வெளிப்புற சருமத்திற்கும் மஞ்சள் புத்துணர்வு அளிக்கும் தன்மை உடையது. எனவே தான் விதவிதமான கிரீம்கள் வருவதற்கு முன்பாகவே நம் முன்னோர்கள் மஞ்சளை கிருமி தொற்றிலிருந்து விடுபடுவதற்காகவும், சருமத்தை பாதுகாக்கவும் பயன்படுத்தினர்.
Herbal Tea for cough and cold
இஞ்சி
- சளி போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கும், தொண்டை கரகரப்பு போன்றவற்றை நீக்குவதற்கும் இஞ்சி இயற்கை நிவாரணியாக செயல்படுகின்றது.
- மூக்கடைப்பு ,நெஞ்சுசளி போன்றவற்றையும் இஞ்சி விரைவாக குணப்படுத்த வல்லது.
- சுவாச பாதையில் சளி அதிகமாக இருப்பின் அவற்றை மெதுவாக வெளியேற்றும் பண்பு இஞ்சிக்கு உண்டு.
- சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் வைரஸ் மட்டும் பாக்டீரியா ஆகியவற்றிற்கு எதிராக போராடும் தன்மை இஞ்சியில் உள்ள மருத்துவ பொருளுக்கு உண்டு.
- மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
- இஞ்சி மட்டுமல்லாமல் இஞ்சியை காய வைத்தால் கிடைக்கப்படும் சுக்கு எனப்படும் பொருளும் சளிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் தன்மை உடையது.ஆனால் நான் இங்கு இஞ்சியை பயன்படுத்தியுள்ளேன்.
Herbal Tea for cough and cold
- தண்ணீர்- 2 கப்
- ஓமம்- 1 டீ.ஸ்பூன்
- மஞ்சள்- கால் டீ.ஸ்பூன்
- இஞ்சி – 2-3 துண்டுகள் அல்லது துருவிய இஞ்சி- அரை டே.ஸ்பூன்.
Herbal Tea for cough and cold
செய்முறை
- கடாயில் ஓமத்தினை லேசாக மணம் வரும் வரை வறுக்கவும்.
- இரண்டு கப் தண்ணீரை ஊற்றவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி சேர்க்கவும்.
- இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விடவும்.
- வடிகட்டி அருந்தவும்.
Herbal Tea for cough and cold
லேசான சளி தொந்தரவு, இருமல் போன்றவை இருக்கும் பொழுதே இந்த வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். தொந்தரவு அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்தது. இருப்பினும் காலை எழுந்தவுடன் டீ, காபி போன்றவை பருகுவதற்கு முன்பாகவே இது போன்ற மூலிகை டீ பருகினால் தொற்றிலிருந்து விரைவில் குணமாக துணை புரியும்.
குந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த மூலிகை டீயினை எப்பொழுது அருந்த வேண்டும்?
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு டீ காபி போன்றவை பரகுவதற்கு முன்பாகவே இந்த டீ குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு நாளைக்கு எத்தனை வேளை இந்த டீ இனை பருக வேண்டும்? ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று தடவை இந்த டீ குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த டீயுடன் வேறு ஏதேனும் பொருட்கள் சேர்த்துக் கொள்ளலாமா?
இதில் இஞ்சிக்கு பதிலாக சுக்கு சேர்த்துக் கொள்ளலாம். மேலும் லவங்கப்பட்டை அல்லது கிராம்பு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் துளசி, கற்பூரவல்லி போன்ற இலைகளை வேகவைத்து அதனுடன் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் சேர்த்து கசாயமாக பருகலாம்.
சளி மற்றும் இருமலை விரட்டும் மூலிகை டீ
Ingredients
- தண்ணீர்- 2 கப்
- ஓமம்- 1 டீ.ஸ்பூன்
- மஞ்சள்- கால் டீ.ஸ்பூன்
- இஞ்சி 2-3 துண்டுகள் அல்லது துருவிய இஞ்சி- அரை டே.ஸ்பூன்.
Leave a Reply