Home made Tomato Ketchup : பெருகிவரும் துரித உணவின் மோகம் காரணமாக நூடுல்ஸ்களுக்கு மட்டும் சாஸ் என்பதை உபயோகித்து வந்த நம் வீட்டு குட்டிகள் தற்பொழுது இட்லி , தோசைக்கு கூட தக்காளி சாஸை கேட்கும் அளவிற்கு சாஸ் மோகம் அதிகரித்து உள்ளது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மேலும் கடைகளில் விற்கப்படும் சாஸ் வகைகளில் கலந்து இருக்கும் நிறமிகள் மற்றும் பிரசர்வேட்டிவ்ஸ் ஆகியவற்றின் காரணமாக குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதற்கே பயமாக உள்ளது. மேலும் சாசினை ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் வேதிப்பொருட்கள் கலந்துள்ளதன் காரணமாக குழந்தைகள் அதனை அடிக்கடி கேட்டு அடம் பிடிக்கின்றனர்.
அப்படி என்றால் இதற்கான தீர்வு என்ன என்று நீங்கள் யோசித்தால் வீட்டிலேயே சாஸ் செய்து கொடுப்பதுதான். குழந்தைகளை சாப்பிடக்கூடாது என்று சொன்னால் அவர்கள் கேட்கவும் மாட்டார்கள். அதற்கு பதிலாக நாம் வீட்டிலேயே இவ்வாறு செய்து கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை வீட்டிலேயே செய்து கொடுத்த திருப்தி நமக்கு இருக்கும்.

Home made Tomato Ketchup
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் தக்காளியில் நிறைந்திருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:
- தக்காளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றது.
- மேலும் இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் இதுவும் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு சிறந்த ஒரு சத்தாகும்.
- வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் கண்களுக்கு நன்மை புரிகின்றது.
- இதில் நிறைந்துள்ள பொட்டாசியம், போலெட் போன்ற மினரல்கள் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- தக்காளியில் இயற்கையாக நிறைந்துள்ள நார் சத்துக்கள் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- தக்காளியில் நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் உடலை எப்போதும் நீர்ச்சத்து நிறைந்துள்ளதாக வைக்கின்றது.
Home made Tomato Ketchup
- பழுத்த தக்காளி-4
- பூண்டு-2 பல்
- எண்ணெய்- 1 டீ.ஸ்பூன்
- சீரகத்தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
Home made Tomato Ketchup
செய்முறை
- தக்காளியை நன்கு கழுவி மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு தண்ணீரில் வேக வைக்கவும்.
- தக்காளியின் மேல் தோலினை உரித்து எடுக்கவும்.
- மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டினை அதில் நசுக்கி போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
- அரைத்து வைத்த தக்காளி மசியல், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்களுக்கு கலக்கிக் கொண்டே இருக்கவும்.
ஆறியதும் பாட்டிலில் அடைத்து குளிர்சாதன பெட்டியில் அடைத்து குழந்தைகள் கேட்கும் பொழுது நீங்கள் கொடுக்கலாம் அல்லது குழந்தைகளுக்கு தேவைப்படும் போது பிரஷ்ஷாக செய்து கொடுக்கலாம்.
குழந்தைகள் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்களும் சட்னிக்கு பதிலாக இதனை செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.
கடைகளில் விற்கும் டொமேட்டோ சாஸ்களில் என்ன கலந்துள்ளதோ என்ற பயத்தில் குழந்தைகளுக்கு நாம் கொடுக்காமல் இருப்போம் ஆனால் இவ்வாறு வீட்டிலேயே செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு விருப்பமான உணவினை அவர்கள் ரசீது சாப்பிடும் பொழுது பார்க்கும் சந்தோசம் நமக்கு கிட்டும்.
Home made Tomato Ketchup
குழந்தைகளுக்கு விருப்பமான சட்னியுடன் வைத்து சாப்பிடும்பொழுது ஒரு மினி டிபன் போன்ற இருக்கும் என்பதால் இதை உணவாகவும் செய்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எத்தனை நாட்கள் இதனை வைத்து பயன்படுத்தலாம்?
குளிர்சாதன பெட்டியில் இரண்டு நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம். நீங்கள் நீண்ட நாட்கள் வேண்டும் என்று நினைத்தால் சிறு சிறு பகுதிகளாக ஃப்ரீசரில் அடைத்து வைத்து உபயோகிக்கலாம்.
இந்த தக்காளி சாஸினை எதனுடன் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு பாஸ்தா, சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து கொடுக்கலாம்.
குழந்தைகள் சாப்பிடுவதற்கு காரமாக இருக்குமா?
இதில் சிறிதளவு சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்துள்ளதால் காரம் குறைவாக தான் இருக்கும்.
ஹோம் மேட் தக்காளி சாஸ்
Ingredients
- தேவையானவை
- பழுத்த தக்காளி-4
- பூண்டு-2 பல்
- எண்ணெய்- 1 டீ.ஸ்பூன்
- சீரகத்தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
Leave a Reply