Homemade Banana Ice cream: ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை கேட்ட உடனே நம் வீட்டில் உள்ள குழந்தைகளின் கோழி முட்டை கண்கள் கண்டிப்பாக விரியும். ஏனென்றால் ஐஸ்கிரீமை விரும்பாத குழந்தைகளே எங்கும் இருக்க முடியாது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இப்பொழுதெல்லாம் ஐஸ்கிரீம் சாப்பிட்டாலே சளி பிடிக்கும் என்று எல்லா அம்மாக்களும் நோ சொல்கிறோம் என்பதற்காகவே வெயில் காலம் எப்பொழுது வரும் என்று எல்லார் வீட்டிலும் குழந்தைகள் காத்துக் கிடப்பார்கள்.
பொதுவாகவே அம்மாக்கள் ஐஸ்கிரீமை வாங்கி கொடுப்பதற்கு தயங்குவதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் வித விதமான கலர்களும், பிரசர்வேட்டிவ்ஸ் மற்றும் சர்க்கரை போன்றவை தான்.
இதனால் குழந்தைகளின் உடலுக்கு பல்வேறு உபாதைகள் வருவதை அறிந்த பெற்றோர்கள் தற்பொழுது வாங்கி கொடுப்பதற்கு யோசிக்கின்றார்கள். இதற்கு மாறாக குழந்தைகளுக்கு என்ன செய்யலாம் என்று தற்பொழுது எல்லா பெற்றோர்களும் சிந்தித்து வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்ய ஆரம்பிக்கின்றனர்.
அதே வரிசையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி தான் ஹோம் மேட் பனானா ஐஸ் கிரீம். இதற்கு வீட்டில் இருக்கும் வாழைப்பழம் மற்றும் பால் இரண்டு மட்டும் இருந்தாலே போதும் நம் குழந்தைகளுக்கு பிடித்தமான ஐஸ்கிரீமை ஈசியாக செய்துவிடலாம்.
Homemade Banana Ice cream:

Homemade Banana Ice cream:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் வாழைப்பழத்தை நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- வாழைப்பழத்தில் இயற்கையாகவே நிறைந்துள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன.
- இது நிறைந்துள்ள வைட்டமின் பி6 குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்குகின்றன.
- மேலும் வாழைப்பழத்தில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால் இதயத்தின் சீரான வளர்ச்சிக்கும், தசைகளின் சீரான இயக்கத்திற்கும் உதவுகின்றது.
- இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.
- வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க வல்லது.
- வாழைப்பழம் இயற்கையாகவே குழந்தைகள் சாப்பிடும் வண்ணம் மென்மையான பழம் என்பதால் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றது.
Homemade Banana Ice cream:
- பழுத்த வாழைப்பழம்-2
- கொழுப்பு நிறைந்த பால்- ஒரு கப்
Homemade Banana Ice cream:
செய்முறை
- வாழைப்பழத்தின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு இதனை சரிசரில் வைக்கவும்.
- மிக்ஸி ஜாரில் வாழைப்பழத் துண்டுகளை போட்டு நன்றாக அரைக்கவும்.
- அதனுடன் பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- மேலும் 1-2 மணி நேரத்திற்கு ஃப்ரீசரில் வைக்கவும்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான வாழைப்பழ ஐஸ்கிரீம் ரெடி.
கடைகளில் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிதாக பால் மற்றும் வாழைப்பழத்தை வைத்து ஐஸ்கிரீம் செய்து கொடுக்கலாம். என்னுடன் நீங்கள் விருப்பப்பட்டால் குழந்தைகளுக்கு பிடித்தவாறு நட்ஸ் போன்றவற்றை தூவி பரிமாறலாம்.
Homemade Banana Ice cream:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இதனுடன் வேறு ஏதேனும் பழங்கள் சேர்க்கலாமா?
உங்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாம்பழம், ஸ்ட்ராபெரி, சப்போட்டா ஆகிய பழங்களை கொண்டும் ஐஸ்கிரீம் செய்து கொடுக்கலாம்.
இந்த ஐஸ்கிரீமினை எத்தனை நாள் வரை வைத்து பயன்படுத்தலாம்?
இரண்டு நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
வேறு பொருள்கள் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாமா?
பாலுடன் சேர்த்து அரைக்கும் பொழுது உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தவாறு பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை சேர்த்து அரைத்துக் கொடுக்கலாம்.
ஹோம் மேட் பனானா ஐஸ் கிரீம்
Ingredients
- தேவையானவை
- பழுத்த வாழைப்பழம்-2
- கொழுப்பு நிறைந்த பால்- ஒரு கப்
Notes
- வாழைப்பழத்தின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு இதனை சரிசரில் வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் வாழைப்பழத் துண்டுகளை போட்டு நன்றாக அரைக்கவும். - அதனுடன் பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- மேலும் 1-2 மணி நேரத்திற்கு ஃப்ரீசரில் வைக்கவும்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான வாழைப்பழ ஐஸ்கிரீம் ரெடி.
Leave a Reply