Homemade Peanut Butter Recipe in Tamil
எவ்வளவு சாப்பிட்டாலும் எனக்கு சலிக்காத ஒன்று என்றால் அது பீனெட் பட்டர். வேர்க்கடலையுடன் உப்பும்,இனிப்பும் கலந்த இதனது சுவை ருசிக்கவே அபாரமாக இருக்கும்.இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உடலுக்கும் நல்லது.ஆனால் நாம் கடைகளில் வாங்கும் வேர்க்கடலை பட்டரில் ப்ரெசர்வேடிவ்ஸ் கலந்துள்ளதால் நன்மைகள் குறைவுதான்,மேலும் குழந்தைகளுக்கும் நல்லதல்ல.எனவே நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் மேட் வேர்க்கடலை ரெசிபியை காணலாம்.இது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியோர்களும் உண்ணலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
வேர்க்கடலை பட்டரை நாம் வீட்டிலேயே செய்யும் பொழுது தரமான பொருட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.மேலும், இதை செய்வதற்கு ஆகும் செலவும் குறைவுதான்.இதனை பிரட்,சாண்ட்விச் மற்றும் டோஸ்ட் போன்றவற்றில் தடவி சாப்பிடலாம்.மேலும், பழங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
தேவையானவை
- வேர்க்கடலை – 1 ½ கப்
- கடலை எண்ணெய் – 2 டே.ஸ்பூன்
- தேன் – 2 டே.ஸ்பூன்
- உப்பு – ¼ டீ.ஸ்பூன்
செய்முறை
1.வேர்க்கடலையினை வெறும் வாணலியில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் 8-10 நிமிடங்களுக்கு நன்றாக வறுக்கவும். வேர்க்கடலை கருகாமல் இருக்க இடைவிடாமல் வறுக்கவும்.
2.வேர்க்கடலை சூடாக இருக்கும்பொழுதே டவலால் நன்றாக உரசி தோலை அகற்றவும்.கம்பி சல்லடையை பயன்படுத்தி மீதமுள்ள தோலினை அகற்றவும்.
3.வேர்க்கடலை வெது வெதுப்பாக இருக்கும் பொழுதே அதனை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராகும் வரை நன்றாக அரைக்கவும்.
4.மிக்ஸியில் மேலும் ஒரு நிமிடத்திற்கு பவுடரை நன்றாக அரைக்கவும்.பக்கவாட்டில் ஒட்டியுள்ள பவுடரை ஒதுக்கி விடவும்.இப்பொழுது கலவை ட்ரையாகவே இருக்கும்.
5.மிக்ஸியை மேலும் ஒரு நிமிடத்திற்கு தொடர்ந்து அரைக்கவும். நிறுத்தி கலவையை ஒதுக்கவும். இப்பொழுது பட்டர் ஓரளவு ரெடியாகி இருக்கும்.
6.இப்பொழுது மிக்சியை மேலும் ஒரு நிமிடத்திற்கு அரைக்கவும்.இப்பொழுது கலவை பட்டர் பதத்திற்கு வந்து இருக்கும்.அதில் எண்ணெய் ,உப்பு மற்றும் தேனை சேர்க்கவும்.
7.மேலும் 1 முதல் 2 நிமிடத்திற்கு பட்டர் பதத்திற்கு வரும்வரை அரைக்கவும்.இப்பொழுது வேர்க்கடலை பட்டர் ரெசிபி ரெடி.
8.இதை நீங்கள் கற்று புகாத டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைக்கலாம்.1 மாதம் வரை கெடாமல் இருக்கும்.
சக்தி, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின், காப்பர் வைட்டமின்-இ ஆகிய முக்கிய சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது வேர்க்கடலை. பல தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை இது அளிக்கிறது. இதில் உப்பு மற்றும் தேன் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு 1 வருடத்திற்கு பிறகு கொடுக்க ஆரம்பிக்கலாம்.
Leave a Reply