Homemade Popcorn Recipe: குழந்தைகளுக்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை பிடித்தமான ஸ்னாக்ஸ் என்றால் அது பாப்கார்ன்தான். மற்ற ஸ்நாக்ஸ் வகைகளை சில குழந்தைகள் விரும்புவார்கள், சில குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் பாப்கார்ன் என்பது அப்படி அல்ல. எல்லா வயதினரும், எல்லா குழந்தைகளும் விரும்பும் ஒரு சிற்றுண்டி வகையாகும்.
இன்றுவரை சினிமா என்றாலே நினைவிற்கு வருவது பாப்கார்ன் தான் என்று சொல்லும் அளவிற்கு நம்மூரில் புகழ்பெற்றது. அத்தகைய பாப்கானை கடையில் தான் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் வீட்டிலேயே நம் குழந்தைகளுக்கு எளிதாக செய்து கொடுக்கலாம்.
கடைகளில் நாம் வாங்கிக் கொடுக்கும் பாப்கான் வகைகளில் செயற்கையான சுவையூட்டிகள், பிரசர்வேட்டிவ்ஸ், மற்றும் அதிகப்படியான உப்பு கலந்து இருக்கும்.
ஆனால் நம் வீட்டிலேயே செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ஏற்றவாறு அதனை ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம். மேலும் இதனை செய்வதற்கு அதிகப்படியாக கணக்கிட வேண்டிய அவசியமும் இருக்காது.

Homemade Popcorn Recipe:
பாப்கார்ன் ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் நிறைந்துள்ள சத்துக்களை பார்க்கலாம்:
- பாப்கார்னில் வைட்டமின் பி, தயாமின், போலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான சத்தாகும்.
- மேலும் இதில் உள்ள நார் சத்துக்கள் குழந்தைகளுக்கு உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு உதவுகின்றது. மேலும் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- மக்காச்சோளம் எனப்படும் கார்னில் நிறைந்துள்ள சத்துக்கள் எலும்புகள் மற்றும் தசைகளுக்கு வலுவினை அளிக்கக்கூடியது.
- மேலும் இதில் நிறைந்துள்ள மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகின்றன.
- மக்காச்சோளத்தில் உள்ள மஞ்சள் நிறத்திற்கு காரணம் அதில் நிறைந்துள்ள சில வேதிப்பொருட்கள் ஆகும் அவை குழந்தைகளின் கண் பார்வைக்கு மிகவும் ஆரோக்கியம் அளிக்கக் கூடியது.
- மேலும் அந்த மஞ்சள் நிறமானது நம் கண்களில் உள்ள அழுத்தத்தை குறைப்பதற்கு மிகவும் இன்றையமையாக ஒன்றாகும்.
- மக்காச்சோளத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகள் நோய் தடுப்பு மண்டலத்தை வலுவாக்கக் கூடியது.
- இதில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட் குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை அளிக்கக்கூடியது.
வீட்டிலே செய்யக்கூடிய பாப்கான் ரெசிப்பியை இனிப்பாகவும் மற்றும் உப்பாகவும் குழந்தைகளுக்கு ஏற்றார் போல் எப்படி செய்து கொடுக்கலாம் என்பதை பார்க்கலாம்:
Homemade Popcorn Recipe:
- பாப்கார்ன் விதைகள்- அரை கப்
- தேங்காய் எண்ணெய் அல்லது நெய்- 1.5 டேபிள்ஸ்பூன்
- உப்பு- இம்மியளவு
- நாட்டு சக்கரை- கால் கப்
- நெய்-1 டீஸ்பூன்
Homemade Popcorn Recipe:
செய்முறை
- நன்கு கனமான அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும்.
- ஒரு மக்காச்சோளத்தை போட்டு பாப்கார்ன் பொரிந்து வருகின்றதா என்பதை சோதனை செய்த பின்பு மீதமுள்ள பாப்கார்னை போடவும்.
- முடியை மேலே மூடி சிறிதளவு இடைவெளி விடவும். மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் குலுக்கி விடவும்.
- வெடிக்கின்ற சத்தம் நின்றவுடன் அடுப்பை அணைக்கவும்.
- பாப்கார்னை பெரிய பவுலில் கொட்டி பாதி பாதியாக பிரிக்கவும்.
- ஒரு பகுதி பாப்கார்னில் உப்பு தேவைப்பட்டால் மஞ்சள் தூள் மற்றும் சீரகத்தூள் ஆகியவை சேர்த்து குலுக்கி விடவும்.
- இனிப்பான பாப்கார்ன் செய்வதற்கு ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் கால் கப் நாட்டுச்சர்க்கரை போட்டு ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றவும்.
- மிதமான தீயில் பாகினை உருக விடவும்.
- மீதமுள்ள பாப்கார்னை போட்டு ஒரு கிளறு கிளறவும்.
குழந்தைகளுக்கு கடையில் வாங்கித் தரும் மற்ற ஸ்நாக்ஸ்களை காட்டிலும் இவ்வாறு வீட்டிலேயே செய்து கொடுப்பது நன்மைகளுக்கும் அல்லவா?
சில குழந்தைகளுக்கு காரமாக சாப்பிட்டால் பிடிக்கும் மற்றும் சில குழந்தைகளுக்கு இனிப்பு சுவையுடன் சாப்பிட்டால் பிடிக்கும் என்பதால் இரண்டும் எப்படி செய்வது என்பதை நான் உங்களுக்கு கொடுத்துள்ளேன்.
குழந்தைகளுடன் வெளியில் எங்காவது செல்லும் பொழுது ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் இதை செய்து ஒரு டப்பாவில் அடைத்து கொண்டு செல்லலாம்.
விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான படத்தினை டிவியில் திரையிட்டு, ஒரு பவுலில் பாப்கான் போட்டு கொடுத்தால் குழந்தைகளும் விடுமுறையை என்ஜாய் செய்வார்கள் அல்லவா?
Homemade Popcorn Recipe
நீங்களும் வீட்டிலேயே பாப்கான் ரெசிபியை செய்து பாருங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Homemade Popcorn Recipe:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தேங்காய் எண்ணெய் சேர்ப்பதற்கு பதிலாக பட்டர் சேர்க்கலாமா?
தேங்காய் எண்ணெய் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது ஆனால் நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் குழந்தைகளின் சுவைக்கு ஏற்றவாறு பட்டர் சேர்த்துக் கொள்ளலாம்.
நாட்டு சக்கரைக்கு பதிலாக இனிப்பு சுவைக்கு வேறு சேர்க்கலாமா?
நீங்கள் விருப்பப்பட்டால் நாட்டு சக்கரைக்கு பதிலாக கருப்பட்டி பால், பிரவுன் சுகர் போன்றவற்றையும் உபயோகித்து கொள்ளலாம்.
காரச் சுவைக்கு வேறு மசாலா பொருட்கள் சேர்த்துக் கொள்ளலாமா?
நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் சுவைக்கு ஏற்றவாறு மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பாப்கார்னை பின்னால் சாப்பிடுவதற்கு சேர்த்துவைத்துக் கொள்ளலாமா
பாப்கார்னை காற்று போகாத டப்பாவில் அடைத்து மூன்று நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஹோம் மேட் பாப்கார்ன் ரெசிபி
Ingredients
- பாப்கார்ன் விதைகள்- அரை கப்
- தேங்காய் எண்ணெய் அல்லது நெய்- 1.5 டேபிள்ஸ்பூன்
- உப்பு- இம்மியளவு
- நாட்டு சக்கரை- கால் கப்
- நெய்-1 டீஸ்பூன்
Notes
- நன்கு கனமான அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும்.
- ஒரு மக்காச்சோளத்தை போட்டு பாப்கார்ன் பொரிந்து வருகின்றதா என்பதை சோதனை செய்த பின்பு மீதமுள்ள பாப்கார்னை போடவும்.
- முடியை மேலே மூடி சிறிதளவு இடைவெளி விடவும். மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் குலுக்கி விடவும்.
- வெடிக்கின்ற சத்தம் நின்றவுடன் அடுப்பை அணைக்கவும்.
- பாப்கார்ன்னை பெரிய பவுலில் கொட்டி பாதி பாதியாக பிரிக்கவும்.
- ஒரு பகுதி பாப்கார்ன்னில் உப்பு தேவைப்பட்டால் மஞ்சள் தூள் மற்றும் சீரகத்தூள் ஆகியவை சேர்த்து குலுக்கி விடவும்.
- இனிப்பான பாப்கார்ன் செய்வதற்கு ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் கால் கப் நாட்டுச்சர்க்கரை போட்டு ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றவும்.
- மிதமான தீயில் பாகினை உருக விடவும்.
- மீதமுள்ள போட்டு ஒரு கிளறு கிளறவும்.
Leave a Reply