குழந்தைகளுக்கான உடைகளில் கவனிக்க வேண்டியவை
How to select Baby Dress in tamil?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தை பிறந்த தகவல் தெரிந்த உடனே நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வண்ண வண்ண ஆடைகளை வாங்கி பரிசளிப்பார்கள். குழந்தைகளுக்கென கடைகளில் வித விதமான உடைகள் கிடைக்கும். ஆனால் அந்த உடைகள் எல்லாவற்றையும் தங்கள் குழந்தைக்கு அணிந்து பார்த்து, அழகு பார்க்க எல்லா பெற்றோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், உங்கள் குழந்தையின் சருமம் மற்றும் பருவ காலத்தை பொறுத்து உடைகளைப்போட்டு விடுவது அவசியம்.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஆடை அணிவிப்பதைக் கவனமாக கையாள வேண்டும். நாம் குழந்தைகளுக்கு போட்டு விடும் ஆடைகள் அவர்களின் உடலை உறுத்தாத வகையில் இருப்பது அவசியம். உங்கள் ஊரின் தட்ப வெப்பத்திற்கு ஏற்ப சரியான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கான கோடை கால ஆடைகள் :
* கோடை காலத்தில் காட்டன் உடைகள் தான் குழந்தைகளின் சருமத்துக்கு ஏற்றது. வியர்வையால் நனைந்தாலும் காட்டன் துணி ஈரப்பதத்தை உறிஞ்சி, குழந்தைக்கு சளி பிடிக்காமல் பாதுகாக்கும்.
* அதேநேரம் சிறுநீர் கழிக்கும் துணிகளையும் அவ்வப்போது மாற்ற காட்டன் துணிகள் வைத்துக் கொள்ளுங்கள்.
* துணிகளை நன்றாகத் துவைத்து வெயிலில் காய வைத்த பிறகு பயன்படுத்துங்கள்.
* ஜிமிக்கி, மணிகள், கற்கள் ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட உடைகளை வெப்பக் காலத்தில் குழந்தைககளுக்கு போட்டுவிட வேண்டாம்.
* இந்த உடைகள் அவர்களின் சருமத்தை உறுத்துவதோடு பல்வேறு தோலில் சிராய்ப்புகள் ஏற்பட்டு தோல் பாதிக்கலாம். இந்த சின்ன முத்துகள், கற்கள் ஆகியவற்றைத் தெரியாமல் குழந்தைகள் விழுங்கிவிடவும் வாய்ப்புகள் உண்டு.
* குழந்தைகளின் உடைகள் அதிக எடை இல்லாமல் இருக்க வேண்டும். மேலும், சுத்தமானதாகவும், மென்மையானதாகவும் இருப்பது நல்லது.
குழந்தைகளுக்கான குளிர் கால ஆடைகள் :
* குளிர்காலம் என்றால் குழந்தைகளுக்கு மென்மையான கம்பளியால் தயாரிக்கப்பட்ட உடைகள் தான் சரியானத் தேர்வு.
* குழந்தைகளுக்கு குளிர் தாக்காதவாறு, அவர்கள் உடல் முழுவதும் உடைகள் கவர் செய்யும் படி போட்டுவிடுங்கள்.
* குழந்தைகளின் பாதங்களுக்கு சாக்ஸ், கைகளுக்கு மிட்டன்ஸ் எனப்படும் கையுறைகள், தலைக்கு இதமான குல்லா போன்றவற்றை பயன்படுத்தலாம்.
* இந்தக் கால கட்டத்தில் துணிகளை துவைத்து, உலர்த்தி, காய வைப்பது அவசியம்.
* துணிகள் ஈரத்தன்மையுடன் இருந்தால் அதில் பூஞ்சைகள் உருவாகி குழந்தைகளின் சருமத்தைத் தாக்கும் அபாயமும் உண்டு என்பதால் எச்சரிக்கையாகக் கையாளுங்கள்.
பொதுவான டிப்ஸ் :
* பொதுவாக, புதிதாக பிறந்த குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும். எனவே, எளிதாக கழற்றி மாட்டக்கூடிய ஆடைகளை குழந்தைக்கு அணிவிக்க வேண்டும்.
* குழந்தைகளின் உடைகளைப் பொறுத்தவரை அது எப்போதும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.
*மிதமான வாஷ்ஷிங் பவுடரைத் துவைக்க பயன்படுத்துங்கள்.
* அடர் பச்சை, அடர் நீலம், அடர் சிவப்பு போன்ற நிறம் போகும் துணிகள் வாங்குவதைத் தவிர்க்கலாம். மென்மையான நிறங்கள் கொண்ட உடைகள் ஏற்றது.
* கைக் குழந்தையின் உடைகளுக்கு பெற்றோர் அதிக கவனம் கொடுப்பது அவசியம்.
*தலை வழியாக போடும் ஆடைகளைவிட சட்டைப் போல அணியும் ஆடை சிறந்தது.
*தலை வழியாக போடும் ஆடைகளில், பெரிய கழுத்துப் பகுதியாக இருப்பது நல்லது.
*பாலிஸ்டர், சில்க் போன்ற துணி வகைகளை தவிர்க்கவும்.
* அவ்வப்போது உடைகளை மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது. ஒரு நாளுக்கு குறைந்தது 5 முதல் 6 உடைகளையாவது குழந்தைகளுக்கு மாற்ற வேண்டும்.
* குழந்தைகளின் உடைகள் மெல்லிய பருத்தி துணிகளால் தைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
* சேப்டி பின், கொக்கிகள், கழுத்தை இறுக்கும் வகையில் கயிறு, எலாஸ்டிக் போன்றவை இல்லாததாகவும் இருப்பது நல்லது.
* கையில்லாத காட்டன் சட்டைகள் பச்சிளம் குழந்தைகளுக்கு எளிதில் போட்டு விடும் வகையில் இருக்கும் என்பதால் இதனை பெற்றோர் தேர்ந்தெடுக்கலாம்.
* எந்த சீசனாக இருந்தாலும் இறுக்கமான உள்ளாடைகளையோ உடைகளையோ தவிர்ப்பது நல்லது.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply