How to select baby toys in Tamil?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பாதுகாப்பான விளையாட்டு பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
குழந்தைகளின் உலகில் உயிருள்ள ஒரு ஜீவனாகவும், அவர்களை மிரட்டியும் கொஞ்சியும் விளையாடும் பொருள்தான், பொம்மைகள். பொம்மைகளை பொறுத்தவரை அதில் பல வெரைட்டிகள், பல கேரக்டர்கள் இருக்கின்றன. மரப்பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், ஃபர் பொம்மைகள், ரப்பரால் ஆன பொம்மைகள், மண் பொம்மைகள் என வித விதமாக இருக்கின்றன. அதுபோல குழந்தைகளின் வயதைக் கணக்கில் கொண்டும் அதற்கேற்றதுபோல பொம்மைகள் கடைகளில் விற்கப்படுகின்றன.
இதில் உங்கள் குழந்தைக்கு எந்த பொம்மையை வாங்கிக் கொடுக்க போகிறீர்கள் என்பதை முன்னரே தெரிந்துகொண்டு வாங்கிக் கொடுங்கள்.
பொம்மை என்பது குழந்தைகளைப் பொறுத்தவரை அது அவர்களின் தோழன், தங்கை, தம்பியாக இருக்கலாம். அவர்கள் அதை தேவதைகள் போல நடத்துவார்கள்.
சில குழந்தைகளுக்கு கதாநாயகனும் வில்லனும் அதுவே… பொம்மைகளை கையில் வைத்துக் கொண்டு அதோடு பேசுவது, விளையாடுவது, சாப்பிடும் உணவை அதற்கும் ஊட்டி விட்டு மகிழ்வது, குளிப்பாட்டுவது, அழகுபடுத்துவது எனப் பொம்மைகளை சுற்றியே குழந்தைகளின் உலகமும் இயங்கும்.
அப்படி இருக்க, குழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் பாதுகாப்பு தேவை.
- 0- 3 மாத குழந்தைகளுக்கு, அவர்களை ஈர்க்கக் கூடிய வண்ணமயமான பொம்மைகள், சுழலக்கூடிய தன்மை கொண்ட அல்லது ரம்மியமான இசை எழுப்பும் பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம்.
- அவர்கள் தூங்கும் தொட்டிலுக்கு மேல் சுழன்று கொண்டே ஒலி எழுப்பும் பொம்மைகள்கூட உள்ளன. இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் அழும் நேரங்களில் குழந்தைகளின் முன்பு இந்த பொம்மைகளை ஒலிக்கச் செய்யலாம்.
- 3- 6 மாத காலகட்டத்தில் குப்புற படுத்துக்கொண்டே குழந்தைகள் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயத்தைக் கவனிப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஒலி எழுப்பிக் கொண்டே நகரும் பொம்மைகளை வாங்கி கொடுக்கலாம். மேலும் கைகளால் ஒலி எழுப்பக் கூடிய கிளுகிளுப்பு வகைகளையும், குழந்தைகள் எளிதாக கைகளில் பிடித்துக் கொள்ளும் வகையில் உள்ள மென்மையான பொம்மைகளையும் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் நீங்கள் வாங்கித் தரும் பொம்மைகள் எல்லாம் தரமானதாக இருக்க வேண்டும்.
- 6-9 மாதம் வரை அவர்கள் உட்கார, தவழ முயற்சிப்பார்கள். சில குழந்தைகள் எழுந்து நிற்க முயற்சி செய்வார்கள். எனவே இந்தக் கால கட்டத்தில் அவர்கள் தங்களை சுற்றி உள்ள பொருட்களை எடுப்பது, எறிவது, தள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
- எனவே அவர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் நகரும் தன்மை கொண்ட பொம்மைகளை வாங்கிக் கொடுங்கள். நன்றாக பளிச் தோற்றத்தில் இருக்கும் பொம்மைகளை நீங்கள் வாங்கிக் கொடுப்பதன் மூலம் நிறத்தைக் கூர்ந்து பார்க்கும் தன்மை குழந்தைகளுக்கு ஏற்படும். லைட் பொருத்தப்பட்ட கார், பஸ்கள், ரயில்கள், நடனமிடும் வாத்து, கோழி, விலங்குகள் போன்ற பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
- ஒவ்வொரு பொம்மையின் அட்டையிலும் மாதங்கள், வயது போன்றவை குறிப்பிட்டிருக்கும். அதைப் பார்த்து வாங்குவது நல்லது.
- குழந்தைகளின் 6ம் வயது வரை அவர்கள் வாயில் நுழையாத அளவுக்கு பெரிய பொம்மைகளாக வாங்கி கொடுக்கலாம்.
- குழந்தையின் 9 வது மாதம் முதல் அவர்களின் அறிவாற்றல் திறனும் வளரும். எதையும் கூர்ந்து நோக்கும் திறன் உடையவர்களாக இருப்பார்கள். நடை வண்டி பழக ஆரம்பித்து இருப்பார்கள். அது அவர்களுக்கு பிரதான விளையாட்டு பொருளாக இருக்கும்.
- இதைத் தவிர்த்து குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் தன்மை கொண்ட விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொடுங்கள். வண்ண வண்ண பந்துகள், பிளாக்ஸ், ஒலி எழுப்பும் கார்கள், விலங்குகள் போன்ற பொம்மைகள் ஏற்றது.
* ஒரு வயதைக் கடந்த குழந்தைகளுக்கு செயல்முறை விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கலாம். பிளாக்ஸ் அடுக்குவது, பேட், பால் போன்ற பொம்மை வகைகள் ஏற்றது.
- பொதுவாக, குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை பெற்றோர் வாங்கி கொடுக்க வேண்டும். சிறிய சைஸ் பேட்டரிகள், மணிகள், ரிப்பன், பிளாஸ்டிக் ஸ்க்ரூ போன்றவற்றை குழந்தைகள் விழுங்கி விடக்கூடிய அபாயம் உண்டு.
- அதேபோல கூர்மையான பொம்மைகள், நச்சு பெயின்டிலான பொம்மைகளும் சின்ன சின்ன மணிகள் கொண்ட பொம்மைகளும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. ஃபர் பொம்மைகள் மற்றும் வெல்வெட்டால் செய்த மென்மையான வழுவழுப்பான பொம்மைகளால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வகை பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்.
- ஓரு வயது முடிந்த பிறகு சைக்கிள் ஓட்டுவது, பொம்மை கார் ஓட்டுவது எனத் தொடங்குவார்கள். உண்மையிலே இவர்கள் உடல் அளவில் பெரிய பொருளை வைத்து பழகும் அளவுக்கு தயாராக உள்ளனரா எனப் பெற்றோர் உறுதி செய்துகொள்ளுங்கள்.
- 6 வயது வரை பலூன்களை வாங்கி தரவேண்டாம். ரப்பர் பேண்ட் போன்ற இழுக்கும் விளையாட்டுகளையும் தவிர்க்க வேண்டும்.
*அதிக எடைக் கொண்ட விளையாட்டு பொருட்களைத் தவிர்க்கலாம்.
*ஸ்டிரிங், கார்ட், கயறுகள் கொண்ட விளையாட்டு பொருட்களையும் தவிருங்கள்.
*காந்தம் (சிறிய மேக்னட்) இருக்கும் பொருட்களைத் தவிருங்கள்.
குழந்தைகளுக்காக நீங்கள் வாங்கி வந்தாலோ கிஃப்டாக வந்திருந்தாலோ அதை இருமுறை செக் செய்துவிட்டு குழந்தைகளுக்கு கொடுங்கள். பொம்மைகளின் தரம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்துவிட்டு குழந்தைகளிடம் கொடுங்கள்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply