ஐந்து நிமிடங்களில் செய்யகூடிய இளநீர் வழுக்கை ரெசிபி
Ilaneer kool for babies
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
6 மாத குழந்தைகள் முதல் சாப்பிட ஏற்ற ரெசிபி இது. அடுப்பில்லாமல் சமைக்கலாம். நேரம் குறைவாக தேவைப்படும் ரெசிபியும் கூட… சத்தும் சுவையும் அள்ளித் தரும்… 100% இயற்கையானது…
*6 மாத குழந்தை முதல் 3 வயது குழந்தைகள் வரை சாப்பிடலாம்.
தாய்ப்பாலுக்கு இணையான சத்துடைய இளநீர் வழுக்கை ரெசிபி
பழங்கள், காய்கறிகளை அரைத்து கூழாக இதுவரை குழந்தைக்கு கொடுத்திருப்போம். தாய்ப்பாலுக்கு இணையான உணவாக இளநீரும் தேங்காயும் இருக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம்… தாய்ப்பாலில் உள்ள சத்து இளநீரிலும், தேங்காயிலும் உள்ளது. 6 மாதம் முதல் இளநீரையும் அதன் வழுக்கையும் குழந்தைக்கு கொடுக்க பழகுங்கள். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவது கண்கூடு. இளசான தேங்காய் (இளநீர் வழுக்கை), இதைக் குழந்தைக்கு அப்படியே கொடுக்காமல் அதை ஒரு ரெசிபியாக செய்து தந்தால் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். இதை சமைக்க உங்களுக்கு அடுப்பு தேவைப்படாது. தயாரிக்கும் நேரமும் குறைவுதான். 5 நிமிடங்களிலே இந்த ரெசிப்பியை உங்கள் குழந்தைக்கு உங்களால் செய்து தர முடியும். செய்வது எப்படி? பார்க்கலாமா…
இளநீர் வழுக்கை ரெசிபி
- இளநீர் வழுக்கை – 1 கப்
- இளநீர் – 1 டம்ளர்
- ரைசின் ஜாம் – 2 டீஸ்பூன்
- லிட்டில் மொப்பெட் ட்ரை ஃப்ரூட்ஸ் பவுடர் – 3 டீஸ்பூன்
செய்முறை
- இளநீர் வழுக்கையை இளநீர் மட்டையிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு கப் அளவுக்கு வழுக்கையை சேகரித்துக் கொள்ளுங்கள்.
- இந்த வழுக்கை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். லேசாக இளநீர் சேர்த்தால் போதும். அதிகமாக ஊற்ற வேண்டும்.
- அரைக்கும் விழுது, கூழ் போல இருக்க வேண்டும். தண்ணீராக அரைக்க கூடாது.
- கூழ் போல அரைத்த வழுக்கையை எடுத்து, பாத்திரத்தில் போடுங்கள்.
- அதில் 3டீஸ்பூன் லிட்டில் மொப்பெட் ட்ரை ஃப்ரூட்ஸ் பவுடரைச் சேர்த்துக் கலக்குங்கள்.
- பின், இதை பவுலில் போட்டு, அதன் மேலே ரைசின் ஜாமை ஊற்றி, அலங்கரித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
- *தயாரித்த 20 நிமிடங்களுக்குள்ளே கொடுத்து விடுவது நல்லது. உடனடியாக சாப்பிடுவதால் சத்துகள் அப்படியே கிடைக்கும்.
பலன்கள்
- இளநீர் குடிக்க எனர்ஜி கிடைக்கும். உடலில் நீர்ச்சத்தின் தேவைப் பூர்த்தியாகும்.
- குழந்தைக்கு செரிமான கோளாறு இருந்தால் உடனடியாக நீங்கும்.
- மலம் கழிக்க அவதிப்படும் குழந்தைகளுக்கு பெஸ்ட் உணவு.
- வயிற்றில் உள்ள பாக்டீரியா நீங்கும்.
- சிறுநீர் கழிக்கும்போது அழும் குழந்தைகளுக்கு இந்த உணவு தீர்வைத் தரும். சிறுநீர் தொற்றை நீக்கும்.
- இளநீர் வழுக்கை குழந்தைகளுக்கான சிறந்த திட உணவு.
- தாய்ப்பால் போல இளநீரிலும் லாரிக் அமிலம் உள்ளதால், நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
- விட்டமின், மினரல் போன்ற சத்துகள் நிறைந்த ஊட்டச்சத்து ரெசிபி எனச் சொல்லலாம்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply