Instant Mix for Babies in Tamil: நாம் குழந்தைகளுடன் வெளியில் செல்ல நேர்ந்தால் முதல் கவலை உணவினை பற்றித்தான் இருக்கும்.ஏனென்றால் அதுவரை குழந்தைகளுக்கு எந்த உணவு ஆரோக்கியமானது,குழந்தைகளுக்கு எப்படி கொடுத்தால் பிடிக்கும் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்து கொடுத்திருப்போம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் ஹோட்டல்களில் அப்படியல்ல.குழந்தைகளுக்கு இட்லியினை தவிர வேறு உணவு கிடைப்பது அரிது.அந்த மாதிரியான இக்கட்டான சூழலில் அம்மாக்களுக்கு கை கொடுப்பதுதான் இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸ் வகைகள்.
இதற்கு முன் நாம் அரிசி கஞ்சி பொடி,நிலக்கடலை அவல் கஞ்சி,அரிசி பொரி கஞ்சி,கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் என பலவைகையான இன்ஸ்டன்ட் மிக்ஸ்களை பார்த்திருக்கின்றோம்.அந்த வகையில் மற்றொமொரு ஆரோக்கியமான ரெசிபிதான் இந்த இன்ஸ்டன்ட் கம்பு பாசிப்பருப்பு பவுடர்.
சத்தான சிறுதானியமான கம்பு உடலுக்கு வலிமையளிக்கக்கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்க வல்லது.நார்சத்துக்களும் மிகுந்திருப்பதால் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. மேலும் பாசிபருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன.
மேலும் குழந்தைகளுக்கு தேவைப்படுகின்ற முக்கியமான சத்தான புரோட்டின் அதிகப்படியாக உள்ளது. இந்த பொடியினை நாம் ரெடியாக தயார் செய்து வைத்துக்கொண்டால் பயன் செய்யும் பொழுது மட்டுமல்லாமல் வீட்டிலேயும் குழந்தைகளுக்கு தேவையான ஆரோக்யமான உணவினை நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.
Instant Mix for Babies in Tamil:
தேவையானவை
- கம்பு – 6 டே.ஸ்பூன்
- பாசி பருப்பு -2 டீஸ்பூன்
- எள்-1 டீ.ஸ்பூன்
இன்ஸ்டன்ட் கம்பு பாசிப்பருப்பு பவுடர்
செய்முறை
1.கம்பு,பாசிபருப்பு,எள் ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
2.ஆறவிடவும்.
3.மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
4.மாவினை சலித்து எடுக்கவும்.
5.இன்ஸ்டன்ட் கம்பு பாசிப்பருப்பு பவுடர் ரெடி.
6.காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து 3-4 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
கஞ்சி செய்வது எப்படி?
1. 2 டே ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
2.சுடு தண்ணீரை சேர்க்கவும்.
3.கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைக்கவும்.
4.இன்ஸ்டன்ட் கஞ்சி ரெடி.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply