ulundhu kanji benefits: குழந்தைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய பலவகையான ஆரோக்கியமான கஞ்சி பவுடர் வகைகளை இதற்கு முன் நாம் பார்த்துவிட்டோம்.அந்த வரிசையில் அம்மாக்களுக்கு திருப்தி அளிக்கும் மற்றுமொறு எளிதான கஞ்சி பவுடர் தான் இந்த ஜவ்வரிசி உளுந்தம் பருப்பு கஞ்சி பொடி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பொதுவாக குழந்தைகளுக்கு முதல் கட்டமாக உணவு கொடுக்கும் பொழுது செரிமானம் ஆவதில் சிறிது சிரமம் இருக்கும்.அதற்கான சரியான தீர்வு தான் இந்த ஜவ்வரிசி உளுந்தம் பருப்பு கஞ்சி.
இந்த கஞ்சியானது குழந்தைகளுக்கு எளிதாக செரிமானமாவதோடு அல்லாமல் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வல்லது.
குழந்தைகளுக்கான ஜவ்வரிசி உளுந்து கஞ்சி பொடி
தேவையானவை
- ஜவ்வரிசி -அரை கப்
- உளுத்தம்பருப்பு -அரை கப்
Ulundhu kanji benefits
செய்முறை
1.உளுந்தம் பருப்பை வாணலியில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
2.ஜவ்வரிசியை ஜவ்வரிசியை வெடிக்குமளவிற்கு லேசாக வறுக்கவும்.
3.நன்றாக ஆறவிடவும்.
4.நைசாக அரைக்கவும்.
5.நன்றாக சலித்து எடுக்கவும்.
6.காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
ulundhu kanji benefits
ஜவ்வரிசி உளுந்து கஞ்சி செய்வது எப்படி?
1.வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
2.ஒரு கப் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைக்கவும்.
3.கெட்டியாகும் வரை சூடாக்கவும்.
4.குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.
மேலும் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கும் இந்த ஜவ்வரிசி உளுந்தம்பருப்பு கஞ்சியினை குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முதல் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தைகளுக்கு எளிதில் வயிறு நிரம்பிய உணர்வினை கொடுக்கும் இந்த கஞ்சியானது குழந்தைகளுக்கு தேவையான இரும்புச்சத்து,கால்சியம்,நார்ச்சத்து மற்றும் வைட்டமின்-எ ஆகியவற்றினை அளிக்க வல்லது.இது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து குழந்தைகளை ஆரோக்கியமாக வைக்க உதவும் என்பதில் ஐயமில்லை.
ulundhu kanji benefits
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு ஜவ்வரிசியினை கொடுக்கலாமா ?
ஆம் .குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முதல் ஜவ்வரிசியினை தாராளமாக கொடுக்கலாம்.
உளுந்தினை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது எப்படி ?
குழந்தைகளுக்கு முதல் முதலில் உளுந்தினை கொடுக்கும் பொழுது நன்கு வறுத்து பொடி செய்து கஞ்சியாக கொடுக்கலாம்.
உளுந்தினை குழந்தைகளுக்கு எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம் ?
உளுந்தினை ஆறு மாத காலம் முதல் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்.
ஜவ்வரிசியினை உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன ?
ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேடுகள் அதிகம் இருப்பதால் உடலுக்கு எனர்ஜியினை அளிப்பதோடல்லாமல் எளிதில் செரிமானம் ஆக செய்கின்றது.
உளுந்தில் உள்ள நன்மைகள் என்ன ?
உளுந்தில் கால்சியம் சத்துக்கள் அதிகமிருப்பதால் எலும்புகளை வலுவடைய செய்கின்றது.
குழந்தைகளுக்கான ஜவ்வரிசி உளுந்து கஞ்சி பொடி
Ingredients
- 1/2 கப் ஜவ்வரிசி
- 1/2 கப் உளுத்தம்பருப்பு
Notes
- உளுந்தம் பருப்பை வாணலியில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- ஜவ்வரிசியை வெடிக்குமளவிற்கு லேசாக வறுக்கவும்.
- நன்றாக ஆறவிடவும்.
- நைசாக அரைக்கவும்.
- நன்றாக சலித்து எடுக்கவும்.
- காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
- வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கப் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைக்கவும்.
- கெட்டியாகும் வரை சூடாக்கவும்.
- குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.
Leave a Reply