Karuvepillai Dosai: வீட்டில் நாம் வழக்கமாக செய்யும் இட்லி, தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுத்தாலும் அதே சற்று வித்தியாசமாக மற்றும் ஆரோக்கியமாக கொடுக்கும் பொழுது நமக்கு ஒரு பெற்றோராக திருப்தி ஏற்படும் அல்லவா?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அவ்வாறு நாம் இன்று பார்க்க போகும் எளிமையான ரெசிபி தான் கறிவேப்பிலை தோசை. கறிவேப்பிலை இரும்பு சத்து நிறைந்தது மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியமானது என்று பலவற்றை நாம் படுத்திருந்தாலும் அதை தாளிப்பதற்கு மட்டுமே நாம் உபயோகிப்போம்.
இவ்வாறு தோசையில் கலந்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு கருவேப்பிலையை சாப்பிட்ட உணவே இருக்காது அதுமட்டுமில்லாமல் சத்தான உணவினை சாப்பிட்ட மாதிரி இருக்கும்.
Karuvepillai Dosai:
Karuvepillai Dosai:
சத்தான கறிவேப்பிலை தோசை:
கருவேப்பிலை தோசை எப்படி செய்வது என்பதை பார்ப்பதற்கு முன்னால் இதில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- இரும்பு சத்து மற்றும் போலிச் சத்து நிறைந்தது. கருவேப்பிலையில் இயற்கையாகவே இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் எனப்படும் அமிலம் நிறைந்துள்ளதால் இவை ரத்தசோகை வராமல் தடுக்கிறது மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
- கருவேப்பிலையை உணவில் சேர்க்கும் பொழுது செரிமான பிரச்சனை எதுவும் இருக்காது. மேலும் உடலில் வாயு இருந்தால் அதனையும் போக்க வல்லது.
- கருவேப்பிலை கூந்தலுக்கு ஆரோக்கியம் அளித்து சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வளர செய்கிறது.
- இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் இ ஆகியவை நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- சில குழந்தைகளுக்கு பசி எடுக்காது அதனால் ஆரோக்கியமான உணவினை சாப்பிடாமல் உடல் ஆரோக்கியம் இன்றி இருக்கும். கருவேப்பிலையை சாப்பிடும் போது பசியை நன்கு தூண்டுவதால் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க வல்லது.
- மேலும் கருவேப்பிலை உடலில் கலந்திருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் என்பதால் உடல் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது.
Karuvepillai Dosai
- கருவேப்பிலை இலைகள்- ஒரு கைப்பிடி
- இட்லி மாவு- 1 கப்
- துருவிய தேங்காய்- 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் -அரை டீ.ஸ்பூன்
- இஞ்சி- சிறு துண்டு
- மிளகு- 2-3
- நெய் அல்லது எண்ணெய் -சமைப்பதற்கு தேவையான அளவு
Karuvepillai Dosai
செய்முறை
- கருவேப்பிலையை நன்கு கழுவி சுத்தமாகி கொள்ளவும்.
- மிக்ஸியில் கருவேப்பிலை, துருவிய தேங்காய், சீரகம், மிளகு, இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
- நன்கு மென்மையாக அரைக்கவும்.
- இந்த பேஸ்ட்டினை தோசை மாவில் நன்கு கலக்கவும்.
- உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
- தோசை கல்லை காய வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- தோசை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும்.
- பொன்னிறமானவுடன் திருப்பிப் போடவும்.
- இதனுடன் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Karuvepillai Dosai:

இந்த ஆரோக்கியமான தோசையை செய்ய மிகவும் எனக்கு என தேவையில்லை என்பதால் நம் சமையலறையில் எப்பொழுதும் இருக்கும் சிறிதளவு கருவேப்பிலையை போதுமானது. இதனுடன் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இஞ்சி, சீரகம், மிளகு போன்றவை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கருவேப்பிலை தோசையை குழந்தைகளுக்கு எப்பொழுது கொடுக்கலாம்?
இந்த கருவேப்பிலை தோசையை குழந்தையை ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்.
வாரம் எத்தனை முறை இந்த தோசையை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
வாரம் இரண்டு முதல் மூன்று தடவை இந்த தோசை ஏம்மா ரெடி எண்ணெய் செய்து கொடுக்கலாம்.
தோசையில் வேறு ஏதேனும் பொருட்கள் சேர்க்கலாமா?
மிகவும் ஆரோக்கியமாக கொடுக்க நினைத்தால் கீரை, துருவிய கேரட், முருங்க இலை போன்றவற்றை சேர்த்தும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
சத்தான கறிவேப்பிலை தோசை
Ingredients
- தேவையானவை
- கருவேப்பிலை இலைகள்- ஒரு கைப்பிடி
- இட்லி மாவு- 1 கப்
- துருவிய தேங்காய்- 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் -அரை டீ.ஸ்பூன்
- இஞ்சி- சிறு துண்டு
- மிளகு- 2-3
- நெய் அல்லது எண்ணெய் -சமைப்பதற்கு தேவையான அளவு
Notes
- கருவேப்பிலையை நன்கு கழுவி சுத்தமாகி கொள்ளவும்.
- மிக்ஸியில் கருவேப்பிலை, துருவிய தேங்காய், சீரகம், மிளகு, இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
- நன்கு மென்மையாக அரைக்கவும்.
- இந்த பேஸ்ட்டினை தோசை மாவில் நன்கு கலக்கவும்.
- உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
- தோசை கல்லை காய வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- தோசை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும்.
- பொன்னிறமானவுடன் திருப்பிப் போடவும்.
- இதனுடன் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.











Leave a Reply