Kids cough and cold remedies: குழந்தைகளுக்கு குளிர்காலம் என்று வந்தாலே சளி, இருமல் போன்ற உடல் சம்பந்தமான தொந்தரவு எடுக்கும் சேர்ந்தே தொற்றிக் கொள்ளும். நெஞ்சு சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு நாம் மருத்துவரிடம் சென்றாலும் ஒரு வாரம் வரை வாட்டிவிட்டு தான் செல்லும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் குழந்தைகளை பொறுத்தவரை லேசாக சளி மற்றும் இருமலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே எளிதான சில வீட்டு வைத்தியங்கள் செய்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே அதனை கட்டுப்படுத்தலாம்.
அதில் நாம் பாரம்பரியமாக கடைபிடிக்கும் வீட்டு வைத்தியங்களில் ஒன்றுதான் ஆவி பிடித்தல். கொதிக்கும் தண்ணீரில் மூலிகைகளை போட்டு அந்த ஆவியினை மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளே இழுக்கும்பொழுது மூக்கடைப்பு, சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
அதே போன்ற எளிமையான ஆவி பிடிக்கும் முறையை வீட்டில் இருக்கும் மூலிகைகளை கொண்டு குழந்தைகளுக்கு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் லவங்க பட்டை, பிரியாணி இலை, ஓமம் மற்றும் லவங்கம் இவற்றை வைத்து சளியை போக்கும் எளிமையான முறையை பார்க்கலாம். இவற்றைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் இவற்றில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களை பார்க்கலாம்:
Kids cough and cold remedies:
- இலவங்கப்பட்டை:

- லவங்கப்பட்டையில் இயற்கையாகவே ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டிவைரஸ் போன்ற நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
- இவை மூச்சுக்குழாயில் மற்றும் மார்பு பகுதியில் இருக்கும் சளியை குறைக்க கூடியது.
- மூச்சுக்குழாயை விரிவாக்கி மூச்சு விடுவதை எளிமையாக்குகிறது.
- சளி மற்றும் இருமலால் ஏற்படும் தொண்டை கரகரப்பை போக்குகின்றது.
- தலைவலி மற்றும் சைனஸ் போன்ற தொந்தரவுக்கும் குணமளிக்கின்றது.
- பிரியாணி இலை:

- பிரியாணியில் இயற்கையாகவே ஆண்டி மைக்ரோ பைல் எனப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
- இவை சைனஸ் போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் மூக்கடைப்பை குணமாக்க வல்லது.
- சளியால் மூச்சு குழாய் அடைத்து மூச்சு விட சிரமப்படுபவர்களுக்கு குணமளிக்க உதவுகின்றது.
- கிராம்பு:

- கிராம்பு எனப்படும் லவங்கத்தில் இயற்கையாகவே கிருமிகளை எதிர்த்து போராடும் பண்பு நிறைந்துள்ளது. எனவே இது சளி மற்றும் இருமல் ஏற்படும் கிருமிகளையும் எதிர்த்து போராட வல்லது.
- தொண்டை கரகரப்புக்கு இதமளிக்கின்றது.
- சைனஸ் தொந்தரவால் ஏற்படும் தலைவலிக்கும் தீர்வாக அமைகிறது.
- ஓமம்:

- பொதுவாகவே ஓமம் செரிமான பிரச்சனைக்கு தீர்வளிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்து ஒன்றுதான்.
- ஓமம் சளியை இலகுவாக்கி வெளியேற்ற உதவுகின்றது
- சுவாச தொந்தரவுகளுக்கும் தீர்வாக அமைகின்றது.
Kids cough and cold remedies:
ஆவி தயாரிக்க தேவையான பொருட்கள்
- காட்டன் துணி
- இலவங்கப்பட்டை
- பிரியாணி இலை
- லவங்கம் எனப்படும் கிராம்பு
- ஓமம்
- தண்ணீர்
Kids cough and cold remedies:
செய்முறை
- ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு அதில் இலவங்கப்பட்டை, பிரியாணியிலை, கிராம்பு மற்றும் ஓமம் போன்றவற்றை சேர்த்து பொட்டலமாக கட்டவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதித்ததும் பொட்டலத்தை அதில் போடவும்.
- ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு நன்றாக வாசனை வரும் அளவிற்கு பொட்டலத்தை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- அடுப்பினை அணைக்கவும். குழந்தைகளின் தலையில் துணியை போர்த்தி மிகவும் கவனமாக 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஆவியை சுவாசிக்குமாறு செய்யவும்.
- கொதிக்கும் தண்ணீர் என்பதால் மிகவும் கவனம் தேவை.
- அடுத்த அரை மணி நேரத்திற்கு குழந்தைகளை குளிரான காற்றின் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
Kids cough and cold remedies

மேற்கொண்ட பொருட்களில் உள்ள நோய் எதிர்ப்பு பண்புகள் ஆவியின் மூலம் உள்ளே செல்வதால் சளி மற்றும் இருமலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். ஆறு வயதுக்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு ஓரளவு புரிந்து கொள்ளும் திறன் இருக்கும் என்பதால் அவர்களுக்கு இதனை முயற்சி செய்யலாம். பெற்றோர்கள் மிகவும் கவனமுடன் குழந்தைகளின் அருகிலேயே இருக்க வேண்டியது முக்கியம்.

Kids cough and cold remedies:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஆவி பிடித்தல் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா?
6 வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இது பாதுகாப்பானது என்பதால் இதனை முயற்சிக்கலாம்.
ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஆவி பிடிக்கலாம்?
ஒரு நாளைக்கு 1-2 முறை அவை பிடிக்கலாம்.
வேறு ஏதேனும் பொருட்களை இதனுடன் சேர்க்கலாமா?
யூகலிப்டஸ் இலைகள் மற்றும் வெற்றிலை போன்றவற்றை சேர்க்கலாம். தைலங்களின் வாசனையை மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் அதனை குழந்தைகளுக்கு முயற்சிக்க வேண்டாம்.
ஆஸ்துமா உள்ள குழந்தைகள் ஆவி பிடிக்கலாமா?
ஆஸ்துமா உள்ள குழந்தைகள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து அதன் பிறகு இதனை முயற்சி செய்வது சிறந்தது.











Leave a Reply