Kollu Noodles in Tamil: மைதா,செயற்கை நிறமூட்டிகள் மற்றும் பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்காத ஹெல்தியான நூடுல்ஸ் ரெசிபி!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நூடுல்ஸ் என்றாலே குழந்தைகளுக்கு ஒரே குஷிதான் . அதை அடிக்கடி வீட்டினில் நம்மை செய்து தரும்படி குழந்தைகள் நச்சரிப்பதுண்டு. ஆனால் கடைகளில் வாங்கும் நூடுல்ஸ்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன,
மெழுகுகள் சேர்க்கப்படுகின்றன மற்றும் பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்படுகின்றன என்ற செய்தியானது நாம் செவிகளில் அடிக்கடி விழுவது வழக்கம்.
இதனால் நாம் அதனை செய்து கொடுக்கும் போதே ஒரு வித பயத்துடன் தான் செய்து கொடுப்போம். இனிமேல் அந்தக் கவலை வேண்டாம். ஏனென்றால் குழந்தைகளுக்கு பிடித்தமான நூடுல்ஸினை பிரிசர்வேட்டிவ்ஸ், செயற்கை ரசாயன பொருட்கள் ஏன் மைதா கூட இல்லாமல் ஹெல்தியாக கொடுக்கலாம்.
மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள கொள்ளு நூடுல்ஸ் ரெசிபியானது நம் பாரம்பரிய சிறுதானியமான கொள்ளினை பிரதானமாக கொண்டதால் குழந்தைகளுக்கு மேலும் ஆரோக்கியமளிக்கக்கூடியது.
கொள்ளில் இயற்கையாகவே கால்சியம்,புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.மேலும் இதில் பன்னீர் சேர்த்துள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.
பன்னீரில் குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்குவதற்கு தேவையான கால்சியம் போதுமான அளவில் நிறைந்துள்ளது.மேலும் கேரட் மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மேலும் ஆரோக்கியமளிக்கக்கூடியது.
Kollu Noodles in Tamil:
ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் கொள்ளு மற்றும் பன்னீரில் நிறைந்திருக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்:
- உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும் தன்மை கொள்ளு பயிருக்கு உண்டு.
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைகின்றது.
- எலும்புகள் மற்றும் நரம்புகளுக்கு வலிமை அளிக்கக் கூடியது. இனிமேதான்
- கடினமான பணி செய்யும் குதிரைகளுக்கு இவை உணவாக கொடுக்கப்பட்டன.
- குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொந்தரவிற்கு கொள்ளு சிறந்த மருந்து.
- கொள்ளு பயிரில் புரதச்சத்து அதிகம் என்பதால் தசைகளுக்கு வலிமை அளிக்கக் கூடியது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகின்றது.
- உடலுக்கு தேவையான புரதத்தை போக்குவதில் பன்னீர் முக்கிய பங்கு வைக்கின்றது.மேலும் உடல் செயல்பாட்டிற்கு தேவையான முக்கியமான ஒன்பது அமினோ அமிலங்கள் இதில் நிறைந்துள்ளன.
- ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க பன்னீர் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- வைட்டமின் பி12 எனப்படும் சத்து பன்னீரில் அதிகமாக இருப்பதால் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
சரி இப்பொழுது இந்த சுவையான நூடுல்ஸினை குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுக்கலாம் என படிப்படியாக பார்க்கலாம்.
Kollu Noodles in Tamil:
- கொள்ளு நூடுல்ஸ்– 1 பாக்கெட்
- பன்னீர் -15 (சிறிய துண்டுகள்)
- பூண்டு -2 பல்
- வெங்காயம் நறுக்கியது- 1
- முட்டைக்கோஸ்- 2 டே.ஸ்பூன்
- கேரட் -2 டே.ஸ்பூன்
- தக்காளி சாஸ் -1 டே.ஸ்பூன்
- எண்ணெய் -2 டே.ஸ்பூன்
Kollu Noodles in Tamil:
Kollu Noodles in Tamil:
செய்முறை
1.ஒரு பாக்கெட் நூடுல்சினை ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
2.தண்ணீரை வடிகட்டி ஒரு ஓரமாக வைக்கவும்.
3.கடாய் சூடானதும் பட்டரை ஊற்றவும்.
4.அதனுடன் பன்னீர் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
5.ஒரு ஓரமாக வைக்கவும்.
6.கடாயில் பட்டரை ஊற்றவும்.
7.அதனுடன் பூண்டு சேர்த்து சேர்க்கவும்.
8.வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
9.அதன்பின் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
10.டேஸ்ட் மேக்கர் சேர்த்து நன்றாக கிளறவும்.
11.பன்னீர் சேர்க்கவும்.
12.ஏற்கனவே தயாரித்து வைத்த நூடுல்ஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கவும்.
13.நன்றாக கிளறி 2 முதல் 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
14.இதமாக பரிமாறவும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள டேஸ்ட் மேக்கரை உங்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு கடையில் விற்கும் நூடுல்ஸினை கொடுப்பதைவிட இந்த மாதிரி இயற்கைப் பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்ட உணவுகளை கொடுப்பது உடலுக்கு நலம்.
மேலும் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த மாதிரி நூடுல்ஸினை கொடுப்பது அவர்கள் உடல்நலத்திற்கு மேலும் ஆரோக்கியமளிக்கும். இந்த ரெசிபியானது நம் குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுக்க ஏற்றது.ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இந்த நூடுல்ஸ் ரெசிபியினை கொடுக்கலாம்.
Kollu Noodles in Tamil:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு பன்னீரை எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம்?
குழந்தைகளுக்கு அடிப்படை தின உணவுகளான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்திய பின் எட்டாவது மாதத்தில் இருந்து பன்னீரை அறிமுகப்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு ஒரு வயது வரை பசும்பால் கொடுக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர் ஆனால் பன்னீர் கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு ஒரு வயது வரை பசும்பால் கொடுக்கக் கூடாது என்பது உண்மைதான் ஆனால் பன்னீர் கொடுக்கலாம் . பன்னீரும் பசும்பாலும் ஒன்றல்ல.
பன்னீர் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்குமா?
குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க பன்னீர் உபயோகமாக இருக்கும்.
குழந்தைகளுக்கான கொள்ளு நூடுல்ஸ் ரெசிபி
Ingredients
- 1 பாக்கெட் கொள்ளு நூடுல்ஸ்
- 15 (சிறியதுண்டுகள்) பன்னீர்
- 2 பல் பூண்டு
- 1 வெங்காயம் நறுக்கியது
- 2 டே.ஸ்பூன் முட்டைக்கோஸ்
- 2 டே.ஸ்பூன் கேரட்
- 1 டே.ஸ்பூன் தக்காளி சாஸ்
- 2 டே.ஸ்பூன் எண்ணெய்
Notes
- ஒரு பாக்கெட் நூடுல்சினை ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- தண்ணீரை வடிகட்டி ஒரு ஓரமாக வைக்கவும்.
- கடாய் சூடானதும் பட்டரை ஊற்றவும்.
- அதனுடன் பன்னீர் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- ஒரு ஓரமாக வைக்கவும்.
- கடாயில் பட்டரை ஊற்றவும்.
- அதனுடன் பூண்டு சேர்த்து சேர்க்கவும்.
- வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதன்பின் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
- டேஸ்ட் மேக்கர் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பன்னீர் சேர்க்கவும்.
- ஏற்கனவே தயாரித்து வைத்த நூடுல்ஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கவும்.
- நன்றாக கிளறி 2 முதல் 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
- இதமாக பரிமாறவும்.
Leave a Reply