Kondakadalai Soup: கொண்டைக்கடலை என்பது நம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் பருப்பு வகைகளில் ஒன்றுதான். வாரம் ஒரு முறை குறிப்பாக வியாழக்கிழமை நாட்களில் கொண்டக்கடலை குழம்பு ஏராளமான வீடுகளில் வைப்பதுண்டு. மேலும், கொண்டை கடலை வைத்து குருமா செய்து சப்பாத்தி மற்றும் பூரிகளுக்கு வைத்து சாப்பிடுவோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் கொண்ட கடலையை வைத்து சூப் செய்து குடிக்கலாம் என்றால் வித்தியாசமாக உள்ளது அல்லவா? உண்மையில் இதில் சூப் செய்து கொடுக்கும் பொழுது நாம் சாதாரணமாக கொடுக்கும் சூப்பினை காட்டிலும் சுவை பல மடங்கு அதிகமாக இருக்கும்.
குளிர்காலத்தில் இதை குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு தேவையான புரோட்டின் சத்து கிடைக்கும். மேலும் இதனுடன் பூண்டு, கொத்தமல்லி இலைகள், சீரகத்தூள், மிளகு தூள் மற்றும் மஞ்சள் ஆகியவை சேர்த்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பாக இது இருக்கும்.
குளிர் காலத்தில் வெதுவெதுப்பாக, சுவையுடன் கூடிய ஊட்டச்சத்து நிறைந்த சூப்பினை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என விரும்பினால் இந்த கொண்டைக்கடலை சூப்பினை தாராளமாக கொடுக்கலாம். நான் இதில் கருப்பு கொண்டை கடலையை பயன்படுத்தி உள்ளேன்.
Kondakadalai Soup:
இந்த சூப் ரெசிப்பியை பார்ப்பதற்கு முன்னால் கொண்டைக்கடலையில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- குழந்தைகளுக்கு தேவையான புரோட்டின் சத்தினை இயற்கையாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கொண்டக்கடலை அதற்கு நல்ல தீர்வாகும்.
- கொண்டைக்கடலையில் இயற்கையாகவே உள்ள புரோட்டின் சத்து குழந்தைகளின் தசைகள் நன்கு வளர்ச்சி அடைவதற்கு உதவுகின்றன.
- கருப்பு கொண்டைக்கடலையில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை அளிக்கக் கூடியது.
- கொண்டைக்கடலையில் நார் சத்துக்கள் அதிகம் என்பதால் உணவினை வேகமாக செரிக்கச் செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க கூடியது.
- கொண்டைக்கடலையில் இருக்கும் இரும்பு சத்தானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கின்றது.
- கொண்டைக்கடலையில் வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் மட்டுமல்லாமல் மக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் சிங்க் போன்றவை நிறைந்துள்ளன.
- மேலும் இவை எலும்புகள் மற்றும் குழந்தைகளின் சிறப்பான மூளை வளர்ச்சிக்கும் உதவுகின்றது.
- கொண்டைக்கடலையில் உள்ள நார் சத்துக்கள் மற்றும் புரோட்டின் போன்றவை சிறிது சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வினை தரும். எனவே உடல் பருமன் ஏற்படாமல் இருக்க கொண்டைக்கடலை சாப்பிடலாம்.
- கொண்டைக்கடலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின் சி போன்றவை ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கு வலிமை தருகின்றது.
இதையும் படிங்க: ஹெல்தியான புரோட்டின் ஸ்மூத்தி
Kondakadalai Soup:
- கருப்பு கொண்டை கடலை- 1 கப்(இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்)
- சமையல் எண்ணெய்- 1 டீஸ்பூன்
- பூண்டு- 7 பல்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்- அரை கப்
- சீரகத்தூள் -அரை டீஸ்பூன்
- மிளகுத்தூள்- அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
- பெருங்காயம்- 1 சிட்டிகை
- தண்ணீர்-1 கப்
- உப்பு- தேவையான அளவு
Kondakadalai Soup:
செய்முறை
- குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஏற்கனவே ஊற வைத்த கொண்டை கடலையை சேர்த்து மூன்று விசில் வரும் அளவிற்கு வேக விடவும். கொண்டைக்கடலையை வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சீரகத்தூள், மிளகு மஞ்சள் தூள் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
- வடிகட்டிவைத்திருந்த கொண்டைக்கடலை வேக வைத்து தண்ணீரை இதனுடன் ஊற்றி சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
- நன்றாக கலக்கி இதனை நன்கு கொதிக்க விடவும்.
- சூப் நன்கு கொதித்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
கொண்டகடலை மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றின் சுவையுடன் ஆரோக்கியமான மசாலா பொருட்களான சீரகத்தூள் மிளகுத்தூள், மஞ்சள் தூள் ஆகவே சேர்த்துள்ளதால் குளிர்காலத்தில் குடிப்பதற்கு நல்ல சுவையாக இந்த சூப் இருக்கும். மீதமுள்ள கொண்டைக்கடலையை வெறும் வாயில் சாப்பிட்டுக் கொள்ளலாம் அல்லது குழம்பு வைத்துக் கொள்ளலாம்.
Kondakadalai Soup:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Kondakadalai Soup:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த சூப்பினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு உப்பு சேர்க்காமல் இந்த சூப்பினை கொடுக்கலாம் ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
முளைகட்டிய கொண்டக் கடலையில் சூப் செய்யலாமா?
முளைகட்டியை கொண்டைக்கடலையில் சத்துக்கள் அதிகம் என்பதால் தாராளமாக முளைகட்டி அதை நீங்கள் சூப் செய்யலாம்.
சூப்பை மேலும் சுவையாக வேறு ஏதேனும் சேர்க்கலாமா?
சூப்பை மேலும் சுவையாக நினைத்தால் சீரகத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சிறிது வறுத்து உடன் சேர்க்கலாம் மேலும் சில சொட்டுக்கள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
Leave a Reply