Channa Rice for 6 Months Babies in Tamil:குழந்தைகளுக்கு புரோட்டீனை அள்ளித் தரும் ஒரு சுவையான மதிய உணவுதான் இந்த கொண்டைக்கடலை சாதம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு மதிய உணவாக நான் பெரும்பாலும் தருவது பருப்பு சாதம்,கீரை சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவை தான். இவற்றை சாப்பிட்டு அலுத்துப் போன குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமாக,ருசியாக அதேசமயம் ஆரோக்கியமாக செய்து கொடுக்கக்கூடிய ரெசிபி தான் இந்த கொண்டைக்கடலை சாதம்.
குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய உணர்வினை கொடுக்கும் இந்த கொண்டைக்கடலை சாதத்தினை 10 மாத காலத்தில் இருந்து நாம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்.கொண்டைக்கடலையில் புரோட்டின்,வைட்டமின், மினரல்ஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.
மேலும் அரிசி மற்றும் கொண்டைக்கடலை போன்றவை குழந்தைகளுக்கு நன்கு விளையாடுவதற்கான எனர்ஜியை அளிப்பதோடு குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்கின்றது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்க கூடியது.

Channa Rice for 6 Months Babies in Tamil:
- கொண்டைக்கடலை- 2 டே.ஸ்பூன்
- அரிசி -2 டே.ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு -ஒரு பல்
- சீரகத்தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள் -1/4 டீ.ஸ்பூன்
- மஞ்சள்தூள் -இம்மியளவு
- நெய் -2 டீ.ஸ்பூன்
Channa Rice for 6 Months Babies in Tamil:
செய்முறை
1.கொண்டைக்கடலையை நன்றாக அலசி 2 முதல் 3 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.
2.அரிசியை நன்றாக கழுவி 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
3.குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
4. அதில் நறுக்கி வைத்த பூண்டினை போட்டு வதக்கவும்.
5.அதனுடன் சீரகத்தூள்,மிளகுத்தூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
6.ஒரு கிளறு கிளறவும்.
7.கொண்டைக்கடலை மற்றும் அரிசி சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
8.தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
9.குக்கரில் 3 முதல் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
10.நன்றாக மசித்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.
குழந்தைகளுக்கு சாதமானது எளிதில் செரிமானமாவதற்கும்,நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்கும் சில அடிப்படையான மசாலா பொருட்களை சேர்த்துள்ளேன் .குழந்தைகளின் உணவு பட்டியலில் நாம் 6 மாத காலத்திற்கு பிறகு மசாலா பொருட்களை படிப்படியாக உபயோகிக்க ஆரம்பிக்கலாம். ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சாதத்தில் உப்பு சேர்த்து கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான கொண்டைக்கடலை சாதம்
Notes
- கொண்டைக்கடலை 2 டேபிள்ஸ்பூன்
- அரிசி 2 டேபிள்ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு ஒரு பல்
- சீரகத்தூள் கால் டீஸ்பூன்
- மிளகுத்தூள் கால் டீஸ்பூன்
- மஞ்சள்தூள் இம்மியளவு
- நெய் 2 டீஸ்பூன்
- கொண்டைக்கடலையை நன்றாக அலசி 2 முதல் 3 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.
- அரிசியை நன்றாக கழுவி 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
- அதில் நறுக்கி வைத்த பூண்டினை போட்டு வதக்கவும்.
- அதனுடன் சீரகத்தூள்,மிளகுத்தூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
- ஒரு கிளறு கிளறவும்.
- கொண்டைக்கடலை மற்றும் அரிசி சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- குக்கரில் 3 முதல் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- நன்றாக மசித்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.
Leave a Reply