kulandaikkana 10 pani kulir kaala porutkal:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தை மற்றும் சிறுவர்களுக்கு பனிக் காலத்தின்போது அத்தியாவசியமான 10 பொருட்கள்
உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களைப் பனிக்காலத்திலிருந்து பாதுகாக்கும் 10 பொருட்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்…
1) டயாபர் வகைகள் :
பனிக்காலத்தில் உங்கள் குழந்தை அதிகமாக சிறுநீர் கழிக்கும். இதனால் நீங்கள் அடிக்கடி டயாபர்களை மாற்ற வேண்டியது இருக்கும். ஒருவேளை நீங்கள் துணிகளை பயன்படுத்துவதாக இருந்தால் பனிக்காலத்தில் அந்த துணிகளை காய வைப்பது என்பது கஷ்டமான காரியம்தான். எனவே துணியால் ஆன டயாபர்களை கூடுதலாக வாங்கி வைத்துக் கொண்டு அவற்றை முறையாக துவைத்து காய வைத்து பயன்படுத்துங்கள்.
2) தொப்பி மற்றும் சாக்ஸ்கள் :
குழந்தைகளைப் பனியில் இருந்து பாதுகாக்க வேண்டுமானால் அவர்களை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சரியாக போர்த்தி பராமரிக்க வேண்டும். அதற்கா தான் தலைக்கு குல்லா மற்றும் கால்களுக்கு சாக்ஸ் தேவைப்படுகின்றன. மென்மையான துணியால் ஆன தொப்பி மற்றும் சாக்ஸ் வகைகளைப் பயன்படுத்துங்கள். அதிக தடிமனாக உள்ள குல்லாக்களை உங்கள் குழந்தைக்கு அணிவிக்கும்போது அது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே குல்லா வாங்கும்போது குழந்தைக்கு அணிவித்து வாங்க வேண்டும்.
3) மேலாடைகள் :
தடிமனான துணி அல்லது ஓவெகோட் இருப்பதுபோல இரண்டு ஆடைகளாக வரும் ஆடையை அணிவிக்கலாம். இதனால் அவர்களுக்கு கதகதப்பான சூழலை உருவாக்கும்.
4) ஸ்வெட்டர்ஸ் :
குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு கட்டாயம் ஸ்வெட்டர் உடைகளை அணிவித்து அழைத்து செல்வதால் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் நெருங்காது. மென்மையான உல்லன் துணியால் ஆன ஸ்வெட்டர்களை குழந்தைகளுக்கு அணிவித்து விடுங்கள். ரசாயன கலப்பு இல்லாத உல்லன் துணிகளை கொண்ட ஸ்வெட்டர்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
5) போர்வைகள் :
குழந்தைகளைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதோடு அவர்கள் இரவில் ஆழ்ந்து உறங்க தேவையான போர்வைகளை நீங்கள் தயாராக வைத்திருங்கள். உடலை உறுத்தாமல் மென்மையான துணியால் உருவாக்கப்பட்ட போர்வைகள் உங்கள் குழந்தைகளுக்கு அவசியம் தேவைப்படும்.
6) மாய்ஸ்சரைசர் க்ரீம்கள் :
பனிக்காலத்தில் உங்கள் குழந்தைகளின் சருமம் வறண்டுபோகும். எனவே அவர்களின் சருமத்தை பாதுகாக்க தரமான மாய்ஸ்சரைசர் க்ரீம்களைப் பயன்படுத்துங்கள். கெமிக்கல் கலப்பு இல்லாத நல்ல தரமான க்ரீம்களை பயன்படுத்துவது நல்லது.
7) லாண்டரி டிடர்ஜெண்ட் பொடி :
பனிக்காலத்தில் இது அத்தியாவசியமா? என்ற கேள்வி எழலாம். இது இந்த சீசனில் உங்கள் குழந்தைக்கு தேவையானது தான். ஏனெனில் துணிகளை சுத்தமாக துவைத்து பயன்படுத்துவதால் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் நோய்கள் தாக்கும் அபாயமும் இருக்காது.
8) ஈரப்பதமூட்டிகள் அல்லது ஹியூமிடிஃபையர் :
பனிக்காலத்தில் வீசும் காற்றால் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படலாம். எனவே நீங்கள் இந்த ஈரப்பதமூட்டிகளை பயன்படுத்துவதால் அறையில் சரியான ஈரப்பதத்தை ஏற்படுத்தி சுவாச பிரச்னைகளை சரிசெய்யும்.
9) மருந்துகள் :
பனிக்காலத்தில் உங்கள் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படும் என்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தேவையான மருந்துகளை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். உங்கள் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும்போது உடனே இந்த மருந்துகளைக் கொடுப்பதன் மூலம் விரைவில் நிவாரணம் கிடைக்கும். அதிலும் குறிப்பாக உங்கள் குழந்தைக்கென தனியாக மருந்து பெட்டி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் வாழைப்பழ கஞ்சி, மல்டி கிரெய்ன் ட்ரிங்ஸ், மசாலா பால் போன்ற பொருட்களை குழந்தைக்கு கொடுங்கள்… இதனால் உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply