Kulanthaikalukana Carrot Pasiparuppu Soup: ஆறு மாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் இணை உணவாக ஆரோக்கியமான உணவுகள் எவற்றையெல்லாம் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்பதை பற்றி நாம் தெளிவான பல பதிவுகளை பார்த்து விட்டோம். குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபிக்கள் பலவற்றினை இதுவரை நாம் பார்த்திருந்தாலும் காய்கறிகளும், பழங்களுமே அவற்றில் பிரதானம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச் சத்துகளை அள்ளித் தருவது காய்கறிகள் மற்றும் பழங்கள் என்றாலும் அவற்றையே சமைத்து தரும்பொழுது குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படும்.எனவே குழந்தைகளின் நாவிற்கு சற்று இளைப்பாறும் விதமாக இந்த சூப் ரெசிபியினை நாம் இப்பொழுது பார்க்கலாம். குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்களை அள்ளித்தரும் இந்த கேரட் பாசிப்பருப்பு சூப் அருமையான சுவையையும் அளிக்கவல்லது.
Kulanthaikalukana Carrot Pasiparuppu Soup:
கேரட் பாசிப்பருப்பு சூப்பினை 6 மாத காலத்தில் இருந்தே குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம். காலை மற்றும் மதிய உணவாக இந்த சூப்பினை அருந்த கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு முதன்முதலாக கொடுக்கும்பொழுது காய்கறி மற்றும் பருப்பினை நன்றாக மசித்து கொடுக்க வேண்டும்.
கேரட்டில் வைட்டமின் ஏ, பொட்டாசியம்,பயோடின்,வைட்டமின் பி6மற்றும் மினரல்கள் போன்றவை நிறைந்துள்ளன.இது குழந்தைகளின் கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியது.மேலும் பாசிப்பருப்பில் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. எனவே இது குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களை அள்ளித் தரும் என்பதில் ஐயமில்லை.
Kulanthaikalukana Carrot Pasiparuppu Soup:
- கேரட்- 2 டே.ஸ்பூன்
- பாசிப்பருப்பு- 2 டே.ஸ்பூன்
- மஞ்சள்தூள் -இம்மியளவு
- சீரகத்தூள் – 1/4 டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- நெய்- 1 டீ.ஸ்பூன்
Kulanthaikalukana Carrot Pasiparuppu Soup:
செய்முறை
1.பாசிப்பருப்பை நன்கு கழுவி அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
2.கடாயில் நெய் ஊற்றவும்.
3.பருப்பு,கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4.மஞ்சள்தூள் சேர்க்கவும்.
5.ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
6. 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
7.மிளகுத்தூள்,சீரகத்தூள் சேர்க்கவும்.
8.நன்றாக மசித்து பரிமாறவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான கேரட் பாசிப்பருப்பு சூப்
Ingredients
- 2 டே.ஸ்பூன் கேரட்
- 2 டே.ஸ்பூன் பாசிப்பருப்பு-
- இம்மியளவு மஞ்சள்தூள்
- 1/4 டீ.ஸ்பூன் சீரகத்தூள்
- 1/4 டீ.ஸ்பூன் மிளகுத்தூள்
- 1 டீ.ஸ்பூன் நெய்
Instructions
- பாசிப்பருப்பைநன்கு கழுவி அரை மணி நேரத்திற்குஊற வைக்கவும்
- கடாயில்நெய் ஊற்றவும்
- பருப்புகேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்
- .ஞ்சள்தூள்சேர்க்கவும்.
- ஒருகப் தண்ணீர் சேர்க்கவும்.
- ஒருகப் தண்ணீர் சேர்க்கவும்.
- மிளகுத்தூள்,சீரகத்தூள் சேர்க்கவும்.
- நன்றாகமசித்து பரிமாறவும்.
Leave a Reply