Lemon Pudina Rice Recipe: கடந்த வாரம் instagram கமெண்டில் எங்களை வழக்கமாக பின் தொடரும் ஒரு அம்மா கேட்ட கேள்வி தான் இது. “ஆரோக்கியமான காலை உணவுகள் மற்றும் சிறுதானிய சிற்றுண்டிகளை அதிகமாக எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. எங்கள் குழந்தைகளும் ரெசிபிகளை மிகவும் விரும்பி உண்கின்றார்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதுவரை சிறுதானியத்தை சாப்பிடாத என் குழந்தைகள் நீங்கள் கூறியது போல வித்தியாசமாக செய்து கொடுத்தால் மறுக்காமல் சாப்பிடுகிறார்கள். அதேபோன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்புவதற்கு ஏதாவது வித்தியாசமான ரெசிபி இருந்தால் சொல்லுங்கள்?” என்று கேட்டிருந்தார்
அவர்களது வேண்டுகோளுக்கிணங்க இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் வித்தியாசமான ரெசிபி தான் புதினா லெமன் சாதம். லெமன் சாதம் என்பது நாம் வழக்கமாக வீட்டில் லஞ்ச் பாக்ஸ்க்காக செய்யும் ரெசிபி தான்.
ஆனால் அதே சற்று வித்தியாசமாக மற்றும் ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு எப்படி கொடுக்கலாம் என்று யோசித்து ரெசிபி தான் இந்த புதினா லெமன் சாதம். புதினா மற்றும் லெமன் சேர்ப்பதனால் வேலை சற்று அதிகமாக இருக்குமே… குழந்தைகளுக்கு எப்படி காலையில் செய்து தருவது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டாம்.
லெமன் சாதம் செய்வது போலவே சட்டென்று நிமிடத்தில் செய்து முடித்து விடலாம்.
ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் அடங்கியிருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:
- எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.
- எலுமிச்சையில் இருக்கும் வேதிப்பொருட்கள் உணவு நன்றாக செரிமானம் ஆகுவதற்கு உதவுகின்றது.
- எலுமிச்சையில் இருக்கும் தண்ணீர் சத்துக்கள் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கின்றது.
- ஆன்ட்டி ஆக்சிடெண்ட் கள் அதிகம் என்பதால் செல்கள் சிதைவடையாமல் பார்த்துக் கொள்கின்றது.
- எல்லாவற்றிற்கும் மேலாக எலுமிச்சை உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு பளிச்சென்ற புத்துணர்வை கொடுக்கும்.
- புதினா வயிற்றில் இருக்கும் தேவையில்லாத வாயுக்களை வெளியேற்ற வல்லது.
- புதினாவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், இதில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உடலினை ஆரோக்கியமாக வைக்க வல்லது.
- புதினாவில் உள்ள சத்துக்கள் சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்த வல்லது.
- மேலும் புதினாவில் உள்ள வேதி பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
Lemon Pudina Rice Recipe:
- சாதம்- ஒரு பவுல்
- லெமன் ஜூஸ்- ஒரு பழம்
- நல்லெண்ணெய்-3 டேபிள்ஸ்பூன்
- கடுகு- அரை டீஸ்பூன்
- இஞ்சி (பொடியாக நறுக்கியது)- அரை இன்ச்
- நறுக்கிய மிளகாய்-1
- வத்தல்-1
- முந்திரிப் பருப்பு-10
- பெருங்காயம்- கால் டீஸ்பூன்
- புதினா இலைகள்- ஒரு கைப்பிடி அளவு
- உப்பு-தேவையான அளவு
- கருவேப்பிலை
Lemon Pudina Rice Recipe:
செய்முறை
- கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- நறுக்கி வைத்த இஞ்சி, பச்சை மிளகாய், வத்தல், கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நல்ல மனம் வரும் வரை வறுக்கவும்.
- சாதத்தை அதனுடன் சேர்த்து அடுப்பை அணைக்கவும். அதனுடன் லெமன் ஜூஸ், புதினா, சேர்த்து நன்றாக கிளறவும்.
- குழந்தைகளுக்கான சுவையான புதினா லெமன் சாதம் ரெடி.
- இதுவரை லெமன் சாதத்தை மட்டுமே சாப்பிட்ட குழந்தைகளுக்கு, புதினாவின் வாசமும் சேரும்பொழுது சாப்பிடுவதற்கு மேலும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நல்லெண்ணைக்கு பதிலாக வேறு வகையான எண்ணெய் வகைகளை உபயோகிக்கலாமா?
உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆலிவ் ஆயில், சூரியகாந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உபயோகித்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
சிறு குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது மிளகாய், வற்றல் ஆகியவற்றை குறைத்துக் கொண்டு குறைவான காரம் சேர்த்து கொடுக்கலாம்.
இதனுடன் காய்கறிகள் சேர்க்கலாமா?
இந்த சாதத்துடன் கேரட், பச்சை பட்டாணி, குடைமிளகாய் மற்றும் பேபி கார்ன் போன்றவை சேர்த்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
எலுமிச்சை புதினா சாதம்
Ingredients
- சாதம்- ஒரு பவுல்
- லெமன் ஜூஸ்- ஒரு பழம்
- நல்லெண்ணெய்-3 டேபிள்ஸ்பூன்
- கடுகு- அரை டீஸ்பூன்
- இஞ்சி பொடியாக நறுக்கியது- அரை இன்ச்
- நறுக்கிய மிளகாய்-1
- வத்தல்-1
- முந்திரிப் பருப்பு-10
- பெருங்காயம்- கால் டீஸ்பூன்
- புதினா இலைகள்- ஒரு கைப்பிடி அளவு
- உப்பு-தேவையான அளவு
- கருவேப்பிலை
Notes
- செய்முறை கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும். பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். நறுக்கி வைத்த இஞ்சி, பச்சை மிளகாய், வத்தல், கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நல்ல மனம் வரும் வரை வறுக்கவும். சாதத்தை அதனுடன் சேர்த்து அடுப்பை அணைக்கவும். அதனுடன் லெமன் ஜூஸ், புதினா, சேர்த்து நன்றாக கிளறவும். குழந்தைகளுக்கான சுவையான புதினா லெமன் சாதம் ரெடி. இதுவரை லெமன் சாதத்தை மட்டுமே சாப்பிட்ட குழந்தைகளுக்கு, புதினாவின் வாசமும் சேரும்பொழுது சாப்பிடுவதற்கு மேலும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
Leave a Reply