Makhana Sweet Recipe for Babies: குழந்தைகளுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் அள்ளி தரும் மக்கானா ஸ்வீட் ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
தாமரை பூவினை நாம் அனைவரும் அறிவோம் ஆனால் தாமரை விதை பற்றி நாம் அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. மக்கானா எனப்படும் தாமரை விதை குழந்தைகளுக்கு எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.
ஆம் உண்மையிலேயே மக்கானா எனப்படும் தாமரை விதையில் குழந்தைகளுக்கான கால்சியம், புரோட்டீன் மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளது.
மேலும், இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக இதன் சுவையும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் வித்தியாசமாக இருக்கும்.
சொல்லப்போனால் கிட்டத்தட்ட பாப்கார்ன் சுவையில் இது இருக்கும் .எனவே இந்த மக்கானாவினை வைத்து குழந்தைகளுக்கான எளிமையான ஸ்வீட் ரெசிபி எப்படி செய்யலாம் என்பதை காணலாம்.
இதில் மை லிட்டில் மொப்பெட்டின் ஆர்கானிக் வெல்லத்தூளினை பயன்படுத்தியுள்ளேன்.அதேபோன்று நீங்கள் பயன்படுத்தும் வெல்லம் சுகாதாரமானது தானா என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
Makana Sweet Recipe for Babies:
தேவையானவை
- நெய்- 2 டீ.ஸ்பூன்
- மக்கானா விதைகள் -2 கப்
- வெல்லத்தூள்- 125 கிராம் அல்லது அரை கப்
- ஏலக்காய்த்தூள் -கால் டீ.ஸ்பூன்.
Makhana Sweet Recipe for Babies:
செய்முறை
1.கடாயில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
2.மக்கானாவினை போட்டு மொறுமொறுப்பாக வரும் அளவிற்கு கிளறவும்.
3.பொறித்த விதைகளை ஆறவிடவும்.
4.கடாயை மிதமான தீயில் வைத்து ஒரு டீ.ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
5.அதில் வெல்லத்தூளையும்,சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
6.ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
7.கம்பி பதத்திற்கு வரும் அளவிற்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
8.ஆறவைத்த விதைகளை போட்டு வெல்லம் ஒட்டும் அளவிற்கு நன்றாக கிளறவும்.
9.அகலமான தட்டில் போட்டு சிறிது நேரம் காயவிட்டு மக்கானா விதைகளை தனித்தனியாக உதிர்த்து விடவும்.
10.குழந்தைகளுக்கான சிம்பிள் ஸ்வீட் ரெடி.
இந்த மக்கானா ஸ்வீட்டானது ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்றது. குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள்,மினரல்ஸ்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான மக்கானா ஸ்வீட் ரெசிபி
Ingredients
- 2 டீ.ஸ்பூன் நெய்
- 2 கப் மக்கானா விதைகள்
- 125 கிராம் வெல்லத்தூள்
- கால் டீ.ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
Notes
- கடாயில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
- மக்கானாவினை போட்டு மொறுமொறுப்பாக வரும் அளவிற்கு கிளறவும்.
- பொறித்த விதைகளை ஆறவிடவும்.
- கடாயை மிதமான தீயில் வைத்து ஒரு டீ,ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
- அதில் வெல்லத்தூளையும்,சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- கம்பி பதத்திற்கு வரும் அளவிற்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
- ஆறவைத்த விதைகளை போட்டு வெல்லம் ஒட்டும் அளவிற்கு நன்றாக கிளறவும்.
- அகலமான தட்டில் போட்டு சிறிது நேரம் காயவிட்டு மக்கானா விதைகளை தனித்தனியாக உதிர்த்து விடவும்.
- குழந்தைகளுக்கான சிம்பிள் ஸ்வீட் ரெடி.
Leave a Reply