Malasikkal Juice for Babies
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு பொதுவாக தாய்ப்பால் தருவதை நிறுத்திய உடனே மலச்சிக்கல் பிரச்சனை ஆரம்பித்து விடும். குழந்தைகள் மலம் கழிக்காமல் கஷ்டப்படுவதை பார்ப்பதற்கே வேதனையாக இருக்கும். எல்லா வீட்டிலும் தாய்மார்கள் பரவலாக சந்திக்கும் பிரச்சனை இது.இதற்கு ஒரு தீர்வு இருந்தால் நல்லா இருக்குமே என்று அனைவரும் ஏங்கி கொண்டு இருப்போம். இதோ உங்களுக்கான சுலபமான தீர்வு. வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய மலச்சிக்கலை போக்கும் ஹோம் மேட் ஜூஸ்!
உங்கள் செல்ல குழந்தைகள் மலம் கழிக்க கஷ்டப்படுவதை தடுக்க எளிமையாக வீட்டில் கிடைக்கும் மூன்றே பொருட்களை வைத்து நீங்கள் ஜூஸ் தயாரிக்கலாம். இந்த ஜூஸை குழந்தைகளின் 8 மாதத்திலிருந்து கொடுக்கலாம். இதற்கு ஸ்பெஸலாக ஜூஸர் எதுவும் தேவை இல்லை. வேறு எந்த செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்க தேவை இல்லை. இதில் சேர்க்கப்படும் இயற்கையான பழங்களே குழந்தைகள் விரும்பும் பிங்க் கலர் ஜூஸை கொடுக்கும்.
குழந்தைகளுக்கான மலச்சிக்கலை போக்கும் ஹோம் மேட் ஜூஸ்
Malasikkal Juice for Babies
- ஆப்பிள் சராசரி அளவு -1
- உரித்த மாதுளம்பழம்-1/4 கப்
- உலர் திராட்சை-2 டே.ஸ்பூன்
- தண்ணீர்
இதையும் படிங்க:குழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்
Malasikkal Juice for Babies
செய்முறை
- உலர் திராட்சையை ஒரு பவுலில் எடுத்து கொண்டு அதனுடன் ½ கப் சுடுதண்ணீரை சேர்க்கவும். இதை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஆப்பிளை நன்றாக கழுவி தோலை நீக்கவும். நடுவில் உள்ள பகுதியை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டவும்.
- அரை மணி நேரத்திற்கு பிறகு உலர் திராச்சை நன்றாக உப்பி இருக்கும்.
- உலர் திராட்சையை அதில் உள்ள தண்ணீருடன் மிக்சி ஜாரில் போடவும்.அதனுடன் வெட்டி வாய்த்த ஆப்பிள் மற்றும் மாதுளம்பழத்தையும் சேர்க்கவும்.
- இத்துடன் 1-2 கப் சூடான தண்ணீர் அல்லது குளிர்ந்த தண்ணீர் சேர்க்கவும்.
- பழத்தில் உள்ள ஜூஸ் வெளிவருமாறு பலமுறை நன்றாக அரைக்கவும்.
- ஜூஸை நன்றாக வடிகட்டி குழந்தைக்கு கொடுக்கவும்.தேவையானால் இதனுடன் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
இந்த ரெசிபியில் கூறப்பட்ட ஆப்பிள், மாதுளை மற்றும் உலர் திராட்சை முதலியவை மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக பெரியோர்களால் கூறப்பட்டவை. உலர் திராட்சையை அரை மணி நேரம் சூடான நீரில் ஊற வைத்தால் அரைப்பதற்கு எளிதாக இருக்கும்.இந்த ஜூஸினை உங்கள் குழந்தைக்கு கொடுத்து மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.
இதையும் படிங்க:6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்
Leave a Reply