Mango kesari recipe : முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை விரும்பாத மக்களும் உலகில் உண்டோ? என்று கேட்கும் அளவிற்கு அத்தனை சுவை வாய்ந்தது மாம்பழம். வருடம் ஒருமுறை வரும் மாம்பழ சீசனுக்காக வருடம் முழுவதும் ஏங்கும் மக்கள் நம்மில் உண்டு.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
விதவிதமாக வரும் மாம்பழத்தின் சுவையினை நாக்கில் வைத்துக் கொண்டே மீதமுள்ள வருடம் முழுவதும் அதை எண்ணியே நாட்களை ஓட்டி விடலாம்.
மாம்பழத்தை நாம் அப்படியே சாப்பிடுவது தான் வழக்கம். அதற்கு மேலே என்றால் ஜூஸ் அல்லது மில்க் ஷேக் செய்து குடிப்போம். ஆனால் மாம்பழத்தை வைத்து உங்கள் குழந்தைகளுக்கு சுவையான கேசரி செய்து தரலாம்.
ஆம் இந்த சுவையான கேசரியை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் குழந்தைகள் செய்து தரச் சொல்லி கேட்பார்கள்.அதற்கு முன்னால் மாம்பழத்தை குழந்தைகளுக்கு தரலாமா? மாம்பழம் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளுமா? என்று கேட்கும் நபர்கள் நம்மில் ஏராளம்.
நான் சொல்லும் இந்த ரெசிபியை ஏழு மாதத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தாராளமாக தரலாம். குழந்தைகளுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கிய பழம் தான்.
Mango kesari recipe
Mango kesari recipe
மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்:
- மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு துறை புரிவன. மேலும் அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வைட்டமின் சி அதிகம்.
- மேலும் இதில் வைட்டமின் ஏ சத்துக்களும் அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் பார்வை மற்றும் ஆரோக்கியமான தோல் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு உதவுகின்றது.
- மாம்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் செரிமான மண்டலத்தை சீராக வைக்கின்றது. மேலும் குழந்தைகளின் உணவை எளிதில் செரிமானமாக செய்து மலச்சிக்கலை தடுக்கின்றது.
- குழந்தைகள் ஓடி ஓடி விளையாடுவதற்கு தேவையான எனர்ஜி மாம்பழத்தில் அதிகம். மாம்பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் இதனை இயற்கையான எனர்ஜி பூஸ்டர் என்று கூறலாம். பொதுவாகவே வலுவான வேலைகள் செய்வதற்கு தேவையான ஆற்றலை தரவல்லது.
- வெயில் காலத்தில் உடலில் நீர் சத்துக்கள் குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். இன்னும் சொல்லப்போனால் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நீர் சத்தானது மிகவும் அவசியம். மாம்பழத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு தேவையான நீர் சத்தினை அளிக்கின்றது
- குழந்தைகளுக்கு விதவிதமான சுவையுள்ள பழங்களை சுவைக்க கொடுப்பது அவர்களுக்கு உணவின் மீதான நாட்டத்தை அதிகரிக்கும்.
- அதற்கு ஏற்றது தான் மாம்பழம். மாம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி குழந்தைகளுக்கு தட்டில் போட்டுக் கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு உணவின் மீது தான் நாட்டத்தை அதிகரிக்கும்.
- மாம்பழத்தில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம். இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலின் செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. மேலும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
Mango kesari recipe
- ரவை – 1 கப்
- அரைத்த மாம்பழம்- 1 கப்
- வெல்லம் – 1 கப்(ஒரு வயது குழந்தைகளுக்கு மேல்)
- தண்ணீர் – 1 கப்
- ஏலக்காய் தூள்- கால் டீ .ஸ்பூன்
- குங்குமப்பூ- தேவைப்பட்டால்
- வறுத்த நட்ஸ் – மேலே தூவுவதற்கு
Mango kesari recipe
செய்முறை
1.மிக்ஸி ஜாரில் மாம்பழத்தை நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
2.பானில் முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளை நெய்யில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ,
3.ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் ரவையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
4.ரவை அடி பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
5.தண்ணீர் ஊற்றி ரவை வேகும் வரை நன்கு கிளறவும்.
6.அதன் பின் அரைத்து வைத்த மாம்பழம் மற்றும் ஏலக்காய் தூள், சேர்த்து கிளறவும்.
7.இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை கேசரி பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
8.குழந்தைகளுக்கான சுவையான மாம்பழகேசரி ரெடி.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Mango kesari recipe
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
மாம்பழ கேசரியில் சர்க்கரை சேர்க்கலாமா?
இந்த ரெசிபி ஏழு மாத குழந்தையிலிருந்து கொடுக்கலாம் என்பதால் நான் சர்க்கரை சேர்க்கவில்லை. குழந்தைகளுக்கு ஒரு வயது வரை சர்க்கரை சீனி போன்ற எதுவும் கொடுக்க கூடாது. நீங்கள் வீட்டில் பெரியவர்களுக்கு செய்து கொடுக்கும் பொழுது உங்களது சுவைக்கு ஏற்றவாறு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
மாம்பழ கேசரியை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
இந்த கேசரியை ஏழு மாத குழந்தையிலிருந்து நீங்கள் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உணவாக இதனை கொடுக்கலாமா?
நீங்கள் தாராளமாக ஒருவேளை உணவிற்கு பதிலாக இந்த கேசவினை செய்து கொடுக்கலாம். பொதுவாகவே குழந்தைகளின் உணவு பட்டியலில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பது அவர்கள் உடலுக்கு மிகவும் நல்லதாகும். மேலும் வித்தியாசமான சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் ஆர்வத்துடன் வாங்கி விரும்பி உண்பர்.
மாம்பழ ரவா கேசரி
Ingredients
- · ரவை- 1 கப்
- · அரைத்தமாம்பழம்- 1கப்
- · வெல்லம்- 1 கப்(ஒரு வயதுகுழந்தைகளுக்கு மேல்)
- · தண்ணீர்- 1 கப்
- · ஏலக்காய்தூள்- கால் டீ .ஸ்பூன்
- · குங்குமப்பூ- தேவைப்பட்டால்
- · வறுத்த நட்ஸ் – மேலே தூவுவதற்கு
Notes
- மிக்ஸி ஜாரில் மாம்பழத்தை நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
- பானில் முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளை நெய்யில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ,
- ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் ரவையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- ரவை அடி பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- தண்ணீர் ஊற்றி ரவை வேகும் வரை நன்கு கிளறவும்.
- அதன் பின் அரைத்து வைத்த மாம்பழம் மற்றும் ஏலக்காய் தூள், சேர்த்து கிளறவும்.
- இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை கேசரி பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
- குழந்தைகளுக்கான சுவையான மாம்பழகேசரி ரெடி.
Leave a Reply