Mixed seeds chapathi in Tamil:கோதுமை மாவில் சப்பாத்தி செய்வது என்பது நாம் வழக்கமாக வீடுகளில் செய்யும் ஒன்றுதான். ஆனால் அந்த சப்பாத்தியில் கோதுமையின் சத்துக்களைத் தவிர வேறு எந்த சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்காது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நான் எப்பொழுதும் உங்களுக்கு பரிந்துரை செய்யும் ரெசிபிகளில், நாம் சாதாரணமாக வீடுகளில் செய்யும் ரெசிபிகளையே குழந்தைகளுக்கு பிடித்தவாறு மற்றும் சத்துள்ளவாறு எவ்வாறு செய்து கொடுக்கலாம் என்பதைதான் பார்த்து வருகின்றோம்.
அதேபோன்று இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிப்பியும் அதேபோன்று ஆரோக்கியமான மிக்ஸ்டு சீட்ஸ் சப்பாத்தி ரெசிபி. பொதுவாக வீடுகளில் செய்யும் சப்பாத்தியை விட இதில் என்ன ஸ்பெஷல் என்று தானே கேட்கின்றீர்கள்?
பெயரிலேயே தெரியும் இந்த சப்பாத்தியின் நற்குணங்கள். ஆம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பல்வேறு நட்ஸ்களின் கலவையைக் கொண்டுதான் இந்த சப்பாத்தி செய்ய போகின்றோம்.
சப்பாத்தி மாவில் நாம் சேர்க்கவிருக்கும் சீட்ஸ் பவுடரில் ஆளி விதைகள், எள் விதைகள், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள் போன்ற விதைகள் கலந்திருப்பதால் இவற்றை சப்பாத்தியா செய்து கொடுக்கும் பொழுது இவற்றின் நற்குணங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
Mixed seeds chapathi in Tamil:

இந்த ரெசிபி பார்ப்பதற்கு முன்னால் நட்ஸ் பவுடர் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்:
- ஆளி விதைகளில் குழந்தைகளின் உடலுக்கு நன்மை அளிக்கும் ஒமேகா-3 எனப்படும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சிறந்தது.
- பூசணி விதைகளில் குழந்தைகளுக்கு தேவையான ஜிங்க், மெக்னீசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. இவை குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- எள்ளு விதைகளில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் எலும்புகளுக்கு வலிமை அளிக்கின்றது.
- பொதுவாகவே விதைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை நிறைந்துள்ளதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைவதற்கு இது காரணமாக இருக்கும்.
- மேலும் விதைகளில் நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகள், புரோட்டீன்கள், ஊட்டச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது.
- குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் மனம் மற்றும் உடலாக இரண்டும் சுறுசுறுப்பாக இயங்க இவை உதவியாக இருக்கும்.
- பொதுவாக நட்ஸ் பவுடரை குழந்தைகளுக்கு கொடுக்கும் கஞ்சி, ஸ்மூர்த்தி மற்றும் ஜூஸ் ஆகியவற்றில் எப்படி கொடுக்கலாம் என்பதை இதற்கு முன் நாம் பார்த்திருக்கின்றோம்.
- மேலும் இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கும் ஜூஸ் மற்றும் ஸ்மூத்தி போன்றவற்றில் மேலே தூவி கொடுத்தாலும் அதன் சுவையை கூட்டவல்லது.
- இப்பொழுது சப்பாத்தியில் எப்படி கலந்து கொடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.
Mixed seeds chapathi in Tamil:
- கோதுமை மாவு -1 கப்
- மை லிட்டில் மொப்பட் சீட்ஸ் பவுடர் மிக்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
- ஓமம்- 1 டீ.ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- நெய் – 1 டீஸ்பூன்
- தண்ணீர்
- நெய் அல்லது வெண்ணெய்
Mixed seeds chapathi in Tamil:
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீட்ஸ் பவுடர், ஓமம் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
- சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும்.
- தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு எப்பொழுதும் போல பிசையவும். 15 முதல் 20 நிமிடங்களுக்கு காத்திருக்கவும்.
- சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
- தோசை கல்லை சூடாக்கி சப்பாத்தியை தேய்த்து அதில் போடவும்.
- பொன்னிறமானவுடன் சப்பாத்தியை திருப்பி அதில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.
- நாம் சாதாரணமாக செய்யும் சப்பாத்தியை விட சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் கட்டாயமாக விரும்பி உண்பார்கள்.
- பொதுவாக குழந்தைகளுக்கு பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், எள்ளு விதைகள் மற்றும் ஆளி விதைகள் ஆகியவற்றை வறுத்து கொடுத்தால் வெறும் வாயில் சாப்பிட மாட்டார்கள்.
- ஆனால் இதேபோன்று பொடியாக செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபியாக இது இருக்கும்.
- குழந்தைகளின் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை மிகவும் முக்கியமாகும்.
- இந்த சத்துக்கள் இது போன்ற விதைகள் எல்லாம் அதிகமாக உள்ளது என்பதால் இவற்றை குழந்தைகள் விரும்பும் வடிவில் செய்து கொடுத்தால் அவர்களுக்கு அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Mixed seeds chapathi in Tamil:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த ரெசிபியில் ஓமம் சேர்க்காமல் செய்யலாமா?
ஓமம் சேர்க்கும் பொழுது குழந்தைகளின் செரிமானத்திற்கு மிகவும் உதவும் என்பதால் நான் ஓமம் சேர்த்துள்ளேன். நீங்கள் ஓமம் சேர்க்காமலும் இந்த சப்பாத்தியை செய்யலாம்.
இந்த சப்பாத்தியுடன் எதை தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்?
சப்பாத்தியுடன் வெஜிடபிள் குருமா, பட்டர் மற்றும் தயிர் போன்றவற்றை செய்து சாப்பிட நன்றாக இருக்கும்.
சப்பாத்தி நன்றாக மெதுவாக வரவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
சப்பாத்தியுடன் நெய் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்த பின் சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மிகவும் மெதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
மிக்சடு சீட்ஸ் சப்பாத்தி
Instructions
- கோதுமை மாவு -1 கப்
- மை லிட்டில் மொப்பட் சீட்ஸ் பவுடர் மிக்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
- ஓமம்- 1 டீ.ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 1 டீஸ்பூன்
- தண்ணீர்
- நெய் அல்லது வெண்ணெய்
Notes

Leave a Reply