MULAM PALAM JUICE: பழங்கள் மற்றும் காய்கறிகள் கொடுப்பது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது தான் என்று தெரிந்தாலும் கூட குழந்தைகளுக்கு பழங்களை எப்படி கொடுக்கலாம், எந்த மாதத்தில் இருந்து கொடுக்கலாம் மற்றும் என்னென்ன பழங்களை கொடுக்கலாம்? என்பதுதான் அம்மாக்கள் அடிக்கடி எங்களிடம் கேட்கும் கேள்வி ஆகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்த உடன் உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுதே பழங்களை அறிமுகப்படுத்தலாம். ஆனால் பழங்களை நன்றாக மசித்து கூழ் போன்று கொடுக்கலாம்.
நாம் வழக்கமாக சாப்பிடும் வாழைப்பழம், முலாம்பழம், தர்பூசணி, கிவி, அத்திப்பழம், மாம்பழம், ஆப்பிள், பப்பாளி போன்ற அனைத்தையுமே நன்கு மசித்து சாப்பிட கொடுக்க ஆரம்பிக்கலாம்.
ஆனால் முதல் முதலாக உணவு கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ஏதேனும் அலர்ஜி ஏற்படுகின்றதா என்பதை அறிய மூன்று நாள் விதிமுறையை பின்பற்றுவது அவசியம். MULAM PALAM JUICE
MULAM PALAM JUICE: இப்பொழுது மிகவும் ஆரோக்கியமான முலாம் பழத்தினை குழந்தைகளுக்கு எப்படி ஜூஸாவை செய்து ஊட்டுவது என்பதை பார்க்கலாம். இதைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் முலாம்பழத்தின் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்:
- முலாம்பழத்தில் இயற்கையாகவே வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை நிறைந்து காணப்படுகின்றது. இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையினை மேம்படுத்துகின்றது மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- இப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளின் உடலில் எப்பொழுதும் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
- முலாம்பழத்தில் நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு உணவானது எளிதில் செரிமானமாக செய்கின்றது.
- மேலும் இது நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- மேலும் முலாம்பழத்தில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிகம். இவை நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகின்றது.
- இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகள் வளர்ச்சி அடைய உதவுகின்றது.
- இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வையை மேம்படுத்த உதவுகின்றது.
MULAM PALAM JUICE
MULAM PALAM JUICE
- பழுத்த முலாம்பழம்-1
- நாட்டு சக்கரை- 1-2 டேபிள்ஸ்பூன்( ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டும்)
- தண்ணீர்- தேவையான அளவு.
MULAM PALAM JUICE
செய்முறை
1.முலாம்பழத்தினை பாதியாக வெட்டிக் கொள்ளவும்.
2.பழத்தில் இருக்கும் விதைகளை நீக்கவும்.
3.பழத்தின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
4.வெட்டி வைத்த துண்டுகளை மிக்ஸியில் போட்டு கூழ் போன்று வரும் அளவிற்கு அரைக்கவும்.
5.உடனடியாக பிரஷ்ஷாக குழந்தைகளுக்கு பரிமாறவும்.
6.குழந்தைகளுக்கான ஆரோக்கியமான முலாம் பழ ஜூஸ் ரெடி.
7.ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இனிப்பூட்டிகள் எதுவும் சேர்க்கக்கூடாது.
ஒரு வயதிற்குமேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது தேவைப்பட்டால் சிறிதளவு நாட்டு சக்கரை சேர்த்துக் கொள்ளலாம். தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு இட்லி, சாதம் போன்றவை ஊட்டுவதை காட்டிலும் காய்கறி மற்றும் பழங்களின் மசியல் ஆகியவற்றை இடையிடையே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
MULAM PALAM JUICE:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
முலாம்பழம் ஜூஸினை எப்பொழுது குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் முலாம்பழ ஜூஸினை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
மீதமுள்ள ஜூஸினை குழந்தைகளுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து கொடுக்கலாமா?
ஜூஸ் தயாரித்த உடன் உடனடியாக குழந்தைகளுக்கு கொடுப்பதை சிறந்தது.
முலாம்பழ ஜூஸ் குழந்தைகளுக்கு செரிமானம் ஆகுமா?
முலாம் பழ ஜூஸில் நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் நன்கு செரிமானம் ஆகும்.
குழந்தைகளுக்கான முலாம்பழ ஜூஸ்
Ingredients
- பழுத்த முலாம்பழம்-1
- நாட்டு சக்கரை- 1-2 டேபிள்ஸ்பூன் ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டும்
- தண்ணீர்- தேவையான அளவு
Leave a Reply