MultiMillet Paneer Paratha in Tamil: பன்னீருடன் பலவகையான தானியங்கள் கலந்த சத்தான ரெசிபிதான் மல்டி மில்லெட் பன்னீர் பரோட்டா. குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் இட்லி,தோசை போன்ற பிரேக் பாஸ்ட் கொடுத்து அவர்களுக்கு போர் அடித்திருக்கும்.இந்த வித்யாசமான சத்தான ப்ரேக்பாஸ்ட் ரெசிபியை கொடுத்து பாருங்கள்.சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள். லிட்டில் மொப்பெட்டின் மல்டி மில்லெட் பான்கேக் மிக்ஸுடன் பன்னீர் மற்றும் ஆரோக்கியமளிக்கும் மசாலா பொருட்களும் கலந்துள்ளது. இந்த பான்கேக் மிக்ஸ் சோளம், கோதுமை, கேழ்வரகு, திணை போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்டது.ப்ரெசெர்வேட்டிவ்ஸ் மற்றும் கெமிக்கல் கலக்காத ஆர்கானிக் உணவு என்பதால் குழந்தைகளுக்கு ஹெல்தியான ப்ரேக்பாஸ்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
MultiMillet Paneer Paratha in Tamil:
தேவையானவை
- மை லிட்டில் மொப்பெட் மல்டி மில்லெட் பேன்கேக் மிக்ஸ் – 1 கப்
- துருவிய பன்னீர் ( ¼ கப்)
- ஓமம் – ¼ டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ¼ டீ .ஸ்பூன்
- நெய் -¼ ஸ்பூன்
- உப்பு -தேவையானளவு
- மிளகு -¼ டீ .ஸ்பூன்
- சாட் மசாலா -¼ டீ.ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள் -¼ கப்
மை லிட்டில் மொப்பெட் மல்டி மில்லெட் பான்கேக் மிக்ஸை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம். நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
மல்டி மில்லட் பன்னீர் பரோட்டா
செய்முறை
1.ஒரு பவுலில் மல்டி மில்லெட் பான்கேக் மிக்ஸ்,துருவிய பன்னீர்,உப்பு ,ஓமம்,மஞ்சள் தூள்,மிளகு தூள்,சாட் மசாலா,கொத்தமல்லி இலைகள் மற்றும் நெய் சேர்க்கவும்.
2.நன்றாக பிசையவும்.
3.சிறிது தண்ணீர் சேர்த்து மாவை மிருதுவாக பிசையவும்.
4.மாவை நான்கு பாகங்களாக சரி சமமாக பிரிக்கவும்.
5.உள்ளகையில் வைத்து உருண்டையாக பிசைந்து சப்பாத்தி போன்று உருட்டவும்.
6.பரோட்டாவை தவாவில் போட்டு இரண்டு பக்கமும் ப்ரவுன் நிறமாக வரும் வரை சுட்டு எடுக்கவும்.
7.இரண்டு பக்கமும் நெய் தடவவும்.
8.மீதமுள்ள மாவை அதே போன்று சுட்டு எடுக்கவும்.
9.பரோட்டாவுடன் தயிர்,ஊறுகாய் மற்றும் பருப்பு சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு
- மல்டி மில்லெட் பான்கேக் மிக்ஸை சப்பாத்தி கல்லில் உருட்டும் பொழுது ஒட்டலாம்.தேய்க்கும் பொழுது சிறிது மாவு சேர்த்து தேய்க்கலாம்.
- நீங்கள் விருப்பப்பட்டால் கோதுமை மாவு மற்றும் பான்கேக் மிக்ஸ் சமஅளவில் எடுத்து கொண்டு பரோட்டா செய்யலாம்.
குழந்தைகளுக்கு தேவையான புரோட்டின்,நார்ச்சத்துக்கள்,இரும்பு சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அடங்கிய சத்தான காலை உணவாக இந்த ப்ரேக்பாஸ்ட் அமையும் என்பதில் ஐயமில்லை. உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும். குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள். குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply