No Bake Carrot Cake in Tamil: என்னதான் குழந்தைகளுக்கு நாம் பார்த்து பார்த்து வீட்டில் ஹெல்தியான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தாலும் பேக்கரி மற்றும் ரெஸ்டாரண்டுகளில் விற்கும் ஸ்னாக்ஸ் மீது தான் குழந்தைகளுக்கு ஆர்வம் செல்லும். அதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் செய்முறை மற்றும் பரிமாறும் விதம் போன்றவை குழந்தைகளை கவரும் வண்ணம் இருப்பதே ஆகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதனால்தான் நாம் வழக்கமாக செய்து கொடுக்கும் சிற்றுண்டிகளின் மீது குழந்தைகளுக்கு நாட்டம் குறைகின்றது. ஆனால் அதே போன்று பேக்கரி சுவையில் வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் குழந்தைகள் துள்ளி குதித்து மகிழ்ச்சி அடைவார்கள். அதற்காகவே நான் அறிமுகப்படுத்தப் போகும் வித்தியாசமான ரெசிபி தான் இந்த ஈஸி கேரட் கேக்.
இந்த ரெசிபியின் விசேஷம் இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் தான். அதற்கு மேல் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் மற்றொரு விஷயம் இந்த கேக்கை செய்வதற்கு நீங்கள் பேக் செய்ய தேவை இல்லை. எனவே பேக் செய்யும் பொழுது கேக் நன்றாக வரவில்லை என்று டென்ஷன் உங்களுக்கு தேவையில்லை.
மேலும் குழந்தைகளை கவரும் வண்ணம் இதன்டேஸ்ட் இருப்பதால் எப்பொழுதாவது குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ரெசிபியை வீட்டிலேயே ட்ரை செய்யுங்கள். இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்.
No Bake Carrot Cake in Tamil
No Bake Carrot Cake in Tamil:
கேரட்டின் நன்மைகள்
- கேரட்டில் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
- கேரட்டில் உள்ள சத்து நிறைந்த பொருளான பீட்டா கரோட்டின் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ யை வழங்குவதில் துணை புரிகின்றது. இதனால் குழந்தைகளின் கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றது.
- இப்பொழுது உள்ள குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போனை பார்ப்பதினால் கேரட்டினை உணவில் சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே குழந்தைகளுக்கு பிற்காலத்தில் ஏற்படும் கண் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் ஏற்படாமல் கேரட் தடுக்க வல்லது.
- கேரட்டில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள்,வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கவல்லது. எனவே தற்போது ஏற்படும் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு எதிராக குழந்தைகள் போராடுவதற்கு இது துணை புரிகின்றது.
- கேரட்டில் நார்ச்சத்துக்கள் அதிகமாகும்.எனவே குழந்தைகள் உண்ணும் உணவினை எளிதில் செரிமானம் அடைய செய்கின்றது இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சனை வராமல் தடுக்கின்றது.
- கேரட்டில் உடலுக்கு தேவையான கால்சியம்,பாஸ்பரஸ் போன்ற மினரல்ஸ்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் எலும்புகளை வலுவடைய செய்கின்றன.
- கேரட்டில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் பீட்டா கரோட்டின் போன்றவை உடலில் உள்ள செல்களை சிதைவடையாமல் பார்த்துக் கொள்வதால் பளபளப்பான சருமத்தினை வழங்கவல்லது. எனவே ஒட்டுமொத்த சரும பாதுகாப்பிற்கு கேரட் துணை புரிகின்றது.
- கேரட்டில் இனிப்பு சுவை அதிகமாக இருந்தாலும் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாகும். எனவே ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் கேரட் துணை புரிகின்றது.
- கேரட் எண்ணெய் குழந்தைகள் மென்று சாப்பிடும் பொழுது பற்களுக்கும் ஈறுகளுக்கும் வலிமை அளிக்கின்றது. எனவே ஒரு வயதிற்கு மேலே நன்கு பால் முளைத்த குழந்தைகளுக்கு அவ்வப்போது வெறும் வாயில் கேரட்டினை கடித்து சாப்பிட கொடுப்பது நன்மை அளிக்கும்.
- கேரட்டில் வைட்டமின் ஏ மட்டுமில்லாமல் வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் பி போன்றவையும் நிறைந்துள்ளன.
- கேரட்டில் இவ்வளவு சத்துக்கள் நிறைந்திருந்தாலும் இதில் கலோரிகள் குறைவு என்பதால் நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கவே செய்யுமே தவிர உடல் பருமனுக்கு வாய்ப்பளிக்காது.
No Bake Carrot Cake in Tamil:
கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள்
- துருவிய கேரட்-2 கப்
- பேரிச்சம்பழம்- 1 கப் (சுடு தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்ட வேண்டும்)
- ரோல்டு ஓட்ஸ்- 1 கப்
- டெசிகேட்டட் கோகனட்- 1 கப்
- வறுத்த பாதாம்- 1 கப்
- லவங்கப்பட்டை- 2 டீ.ஸ்பூன்
- ஜாதிக்காய்-கால் டீ.ஸ்பூன்
- இஞ்சி- கால் டீ.ஸ்பூன்
- வெண்ணிலா எசன்ஸ்- ஒரு டீ.ஸ்பூன்
- முந்திரி பருப்பு- ஒரு கப் (சுடு தண்ணீரில் 10 நிமிஷம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்)
- பேரிச்சம்பழம்- 3
- வெண்ணிலா எசன்ஸ்-1 டீ.ஸ்பூன்
- ஓட்ஸ் மில்க்- 1/2 கப்
மேலே தூவுவதற்கு
- நொறுக்கிய வால்நட்
- துருவிய கேரட்
மேலே தடவுவதற்கு
- க்ரீம் சீஸ்- 1 கப்
- பொடியாக்கிய பிரவுன் சுகர்- 1/2 கப்
- வெண்ணிலா எசன்ஸ்-1 டீ.ஸ்பூன்
No Bake Carrot Cake in Tamil:
செய்முறை
- கேக் செய்வதற்காக மேலே கொடுக்கப்பட்ட எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- மிகவும் தண்ணீராக இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.
- கேக் பேக் செய்யும் டின்னில் இந்த கலவையை ஊற்றி நன்கு பரப்பவும். அதற்கு மேல் கிரிமை தடவி அதற்கு மேல் துவ வேண்டியவற்றை தூவ வேண்டும்.
- ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஃப்ரீசரில் வைக்க வேண்டும். சிறு சிறு துண்டுகளாக வெட்டி மூன்று முதல் நான்கு நாட்களுக்கு வைத்து உபயோகிக்கலாம்.
No Bake Carrot Cake in Tamil
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கேக்கின் மேலே தூவுவதற்கு வால்நட்டிற்கு பதிலாக மற்ற நட்ஸ் வகைகளை உபயோகிக்கலாமா?
உங்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முந்திரி பாதாம் பிஸ்தா போன்றவற்றையும் நொறுக்கி மேலே தூவி விடலாம்.
ஃப்ரீசரில் கண்டிப்பாக வைக்க வேண்டுமா?
கிரீம் சீஸ் மேலே தடவியுள்ளதால் ஃப்ரீசரில் வைக்கும் பொழுது சுவை நன்றாக இருக்கும்.
ஈஸியான நோ பேக் கேரட் கேக்
Ingredients
- துருவிய கேரட்-2கப்
- பேரிச்சம்பழம்-1 கப் (சுடு தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்ட வேண்டும்)
- ரோல்டு ஓட்ஸ்-1 கப்
- டெசிகேட்டட் கோகனட்- 1 கப்
- வறுத்த பாதாம்-1 கப்
- லவங்கப்பட்டை-2 டீ.ஸ்பூன்
- ஜாதிக்காய்-கால்டீ.ஸ்பூன்
- இஞ்சி- கால்டீ.ஸ்பூன்
- வெண்ணிலா எசன்ஸ்-ஒரு டீ.ஸ்பூன்
- பேரிச்சம்பழம்-3
- முந்திரி பருப்பு-ஒரு கப் (சுடு தண்ணீரில் 10 நிமிஷம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்)
- ஓட்ஸ் மில்க்-1/2 கப்
- வெண்ணிலா எசன்ஸ்-ஒரு டீ.ஸ்பூன்
மேலே தூவுவதற்கு
- நொறுக்கிய வால்நட்
- துருவிய கேரட்
மேலே தடவுவதற்கு
- க்ரீம் சீஸ்- 1 கப்
- பொடியாக்கிய பிரவுன் சுகர்- 1/2 கப்
- வெண்ணிலா எசன்ஸ்-1 டீ.ஸ்பூன்
Leave a Reply