Pachai Payaru Kambu Dosai in Tamil : குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக செய்து தரும் டிஃபன் இட்லி மற்றும் தோசை. தினமும் நாம் குழந்தைகளுக்கு இதை செய்து தரும் பொழுது “அம்மா இன்னைக்கும் இதே இட்லி தோசைதானா?” என்று கேட்காத குழந்தைகள் இருக்க மாட்டார்கள். அப்படி கேட்கும் குழந்தைகளுக்கு நாம் ஏதாவது வித்யாசமாக செய்து தர வேண்டாமா ?அதே நேரம் நாம் செய்து கொடுக்கும் ரெசிபி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதற்கான ரெசிபிதான் இந்த பச்சைப்பயறு கம்பு தோசை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பச்சைப்பயறு கம்பு தோசை
- பச்சைப்பயறு -1 கப் ( 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் )
- கம்பு- ½ கப் ( 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் )
- பச்சை மிளகாய் -1 (குழந்தைகளுக்கு தவிர்க்கவும் )
- சீரகம் -1/2 டீ.ஸ்பூன்
- எண்ணெய் -2 டீஸ்பூன்.
இதையும் படிங்க: சத்தான ஹோம்மேட் புரோட்டீன் பவுடர்
Pachai Payaru Kambu Dosai in Tamil
செய்முறை
1.ஊற வைத்த பச்சைப்பயறு மற்றும் கம்பு ஆகியவற்றை மிக்சி ஜாரில் எடுத்து கொள்ளவும். அதனுடன் சீரகம் , மிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும்.
2.தேவையானளவு தண்ணீர் சேர்த்து மாவு போன்று அரைக்கவும்.
3.மாவு புளிக்க தேவையில்லை என்பதால் உடனே தோசை வார்க்கலாம்.
4.தோசை கல்லில் எப்பொழுதும் போன்று தோசை ஊற்றவும்.
5.தோசையை சுற்றியும் எண்ணெய் ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பி போடவும்.
6.மீதமுள்ள மாவினையும் இதே போன்று தோசைகள் வார்க்கலாம்.
- பச்சை பயிரில் குழந்தைகளுக்கு தேவையான பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளன.
- மேலும் வைட்டமின்கள் மற்றும் புரதம் போன்றவையும் நிறைந்துள்ளன.
- கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.
இதையும் படிங்க: 6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply