Paneer recipe in Tamil: அசைவம் சாப்பிடாத சைவ பிரியர்களுக்கென்றே உள்ள ஒரு உணவு பொருள் என்றால் அதில் கண்டிப்பாக பன்னீர் தான். இதை பெரியவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் மிகவும் விரும்பி உண்பர்.நாம் வழக்கமாக பன்னீரை கடையில் வாங்குவது வழக்கம். ஆனால் பன்னீர் செய்வது என்பது மிக மிக எளிது.கடைகளில் வாங்குவதை விட நாம் மாட்டு பாலினைக் கொண்டு ஹெல்தியான பன்னீரை குழந்தைகளுக்கு வீட்டிலேயே பிரஷ்ஷாக செய்து கொடுக்கலாம். மேலும் இதில் சீரகம் மற்றும் இஞ்சி போன்றவை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Paneer recipe in Tamil:
- பால் -1லிட்டர்
- நெய்-1 டீ.ஸ்பூன்
- சீரகம் -1 டே .ஸ்பூன்
- நெய்- 1 டீ .ஸ்பூன்
- தயிர்-1 கப்
இதையும் படிங்க: பனானா சியா புட்டிங்
Paneer recipe in Tamil:
செய்முறை
1.பானை சூடாக்கி நெய் ஊற்றவும்.
2.சீரகம் சேர்த்து வறுக்கவும்.
3.இஞ்சி சேர்க்கவும்.
4.பால் சேர்த்து கொதிக்க விடவும்.
5.அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தயிர் சேர்த்து பால் திரண்டு வரும் அளவிற்கு காய்ச்சவும்.
6.முஸ்லின் துணியினால் வடிகட்டவும்.
7.மீதமுள்ள தண்ணீரை கரண்டியால் அழுத்தி வெளியே எடுக்கவும்.
8.துணியின் மேல் எடையினை வைத்து சிறிது நேரம் காத்திருக்கவும்.
9.சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
10.சீரக பன்னீர் ரெடி.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான பால் சாதம்
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முதல் உணவினில் மெதுவாக மசாலா பொருட்களை சேர்க்க ஆரம்பிக்கலாம்.8 மாதத்திற்கு மேல் பன்னீரினை குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக தர ஆரம்பிக்கலாம்.குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்து அதிகமுள்ளதால் பாலை விரும்பி குடிக்காத குழந்தைகளுக்கு மாற்றாக பன்னீரை நாம் செய்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply