Pavakkai Sadham in Tamil: குழந்தைகளுக்கு குடற்புழு தொந்தரவு என்பது தற்பொழுது பொதுவான விஷயமாகிவிட்டது. இந்த குடல் புழுக்கள் ஆனது குழந்தைகளின் வயிற்றில் உள்ள சத்துகளையும் சேர்த்து உறிஞ்ச வல்லது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்று மருத்துவர்களிடம் போனால் கூட குழந்தைகளுக்கு குடல் புழு தொந்தரவு உள்ளதா என்பதை மருத்துவர் கேட்டு அறிந்து கொள்வார்.
எனவே தான், அரசாங்கமும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரைகளை கட்டாயமாக்கி உள்ளது.
ஆனால், மருந்து மாத்திரைகளை கொடுப்பதை காட்டிலும் குழந்தைகளுக்கு குடல் புழு வராமல் தடுக்கக்கூடிய சிறந்த வழிமுறை உணவின் மூலம் இயற்கையாக குடல் புழு நீக்கியை அவர்களுக்கு கொடுப்பதாகும்.
குடலில் உள்ள குடல் புழுக்களை அவற்றும் அற்புதமான காய்கறி தான் பாகற்காய். ஆனால் பாகற்காய் என்றாலே நம் குழந்தைகள் 10 அடி தள்ளி போவார்கள்.
எனவே, அவர்களுக்கு நேரடியாக பாகற்காயை பொறியலாகவோ அல்லது கூட்டாகவோ செய்து தராமல் எப்படி சாப்பிட கொடுப்பது என்று யோசித்தபோது கிடைத்த ரெசிபி தான் இந்த பாகற்காய் முட்டை சாதம்.
இந்த சாதத்தில் பாகற்காயின் கசப்பு தன்மை மற்றும் முட்டையின் புரோட்டின் என இரண்டும் சேர்த்து கிடைப்பதால் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சாதமாக இது இருக்கும்.
Pavakkai Sadham in Tamil
பாகற்காயை சாப்பிடுவதற்கு முன்னால் அதன் நன்மைகளை பார்க்கலாம்.
- பாகற்காயின் கசப்பு தன்மையானது இயற்கையிலேயே குடலில் உள்ள புழுக்களை அழிக்க வல்லது.
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் இந்த காயில் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றது. - பாகற்காயில் இருக்கும் ஒரு வகை வேதிப்பொருளானது உணவு நன்கு செரிமானம் ஆவதற்கு உதவும் என்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் தன்மை உண்டு என்பதால் சர்க்கரை நோயாளிகளின் முதல் தேர்வாக இந்த காய் உள்ளது.
- பாகற்காயில் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்களான பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் நார் சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு தேவையான சரிவிகித சத்துக்களை தருகின்றது.
- உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் குணம் பாகற்காய்க்கு உண்டு.
Pavakkai Sadham in Tamil
- மெலிதாக சீவிய பாகற்காய்-1
- முட்டை -2
- சாதம் – 1 கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1
- நறுக்கிய தக்காளி- 1
- சீரகம்- 1 டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள்- அரை டீ.ஸ்பூன்
- சீரகத்தூள்- அரை டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள் -கால் டீ.ஸ்பூன
- எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கொத்தமல்லி இலைகள்- மேலே தூவ
Pavakkai Sadham in Tamil
செய்முறை
- பாகற்காயை நன்கு மெலிதாக சீவி, அதன் கசப்பு தன்மை நீங்குவதற்காக சிறிது உப்பு சேர்த்து தண்ணீரில் நன்கு கழுவவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- தக்காளி சேர்த்து வதக்கி பின்பு மிளகுத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பாகற்காய் சேர்த்து நன்றாக வதங்கும் வரை வதக்கவும்.
- கடாயில் பாகற்காயை ஒரு பக்கம் ஒதுக்கி முட்டையை தட்டி ஊற்றி நன்கு வதக்கிய பின் பின்பு பாகற்காயுடன் சேர்க்கவும்.
- கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Pavakkai Sadham in Tamil
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பாகற்காய் சாதத்துடன் மற்ற காய்கறிகள் சேர்க்கலாமா?
இந்த சாதத்துடன் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த மற்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
பாகற்காய் குழந்தைகளுக்கு நல்லதா?
இக்காயினை நன்றாக வதக்கி குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான நன்மைகளை அளிக்கக் கூடியது.
வாரத்திற்கு எத்தனை முறை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம்.
குடற்புழு நீக்கும் குழந்தைகளுக்கான பாகற்காய் சாதம்
Ingredients
- தேவையானவை
- மெலிதாக சீவிய பாகற்காய்-1
- முட்டை -2
- சாதம் -1 கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1
- நறுக்கிய தக்காளி -ஒன்று
- சீரகம்- 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
- சீரகத்தூள் -அரை டீஸ்பூன்
- மிளகுத்தூள் -கால் டீஸ்பூன
- எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- கொத்தமல்லி இலைகள்- மேலே தூவ
Notes
பாகற்காயை நன்கு மெலிதாக சீவி, அதன் கசப்பு தன்மை நீங்குவதற்காக சிறிது உப்பு சேர்த்து தண்ணீரில் நன்கு கழுவவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கி பின்பு மிளகுத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். பாகற்காய் சேர்த்து நன்றாக வதங்கும் வரை வதக்கவும். கடாயில் பாகற்காயை ஒரு பக்கம் ஒதுக்கி முட்டையை தட்டி ஊற்றி நன்கு வதக்கிய பின் பின்பு பாகற்காயுடன் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
Leave a Reply