Pineapple Rice: சிற்றுண்டியாக இருந்தாலும், காலை உணவாக இருந்தாலும், குழந்தைகளுக்கு கொடுக்கும் சாத வகைகள் என்றாலும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது ஏதோ அதை பரிந்துரைப்பதே நான் நோக்கமாக வைத்துள்ளேன்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஏனென்றால் எனக்கும் இரு குழந்தைகள் உள்ளார்கள் என்பதால் ஆரோக்கியமானதை கொடுக்கும் பொழுது குழந்தைகள் மறுத்தால் அதை எப்படி குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுப்பது என்பதை தான் நான் யோசிப்பேன்.
அதற்காகத்தான் நான் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு ரெசிபிகளிலும் ஆரோக்கியம் என்பதே முதன்மையாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு ஆரோக்கியமான ரெசிபி தான்.
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்புவதற்கும், பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதற்கும் ஏற்ற ஒரு சுவையான ரெசிபி தான் இந்த பைனாப்பிள் பிரைட் ரைஸ்.
குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு கலந்த புளிப்புச் சுவையுடன், குழந்தைகளுக்குப் பிடித்த நட்ஸ் வகைகளும் சேர்த்து சுவையாக செய்திருப்பதால் கட்டாயம் குழந்தைகள் இதை விரும்பி உண்பார்கள்.
Pineapple Rice:

Pineapple Rice:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் அன்னாசி பழத்தில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- அன்னாசி பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முதன்மை பங்கு தருகின்றது.
- அன்னாசி பழத்தில் நிறைந்திருக்கும் ஒரு வகை வேதிப்பொருள் உணவு நன்றாக செரிமானம் ஆவதற்கு உதவுகின்றது. இதனால் குழந்தைகளுக்கு செரிமான தொந்தரவு ஏற்படாது.
- மேலும் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, மாங்கனிசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான சத்துக்கள் ஆகும்.
- மேலும் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கும் இவை துணை புரிகின்றன.
- அன்னாசி பழத்தில் காணப்படும் நீர்ச்சத்து குழந்தைகளின் உடலில் தண்ணீர் சேர்த்து குறையாமல் வைப்பதற்கு உதவுகின்றது.
- மேலும் இதில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான கண் பார்வைக்கு உதவுகின்றன.
- அன்னாசி பழத்தில் இயற்கையாகவே காணப்படும் இனிப்பு சுவைகள் குழந்தைகளை எனர்ஜியுடன் வைக்க உதவுகின்றது.
- அன்னாசி பழத்தில் இயற்கையாகவே காணப்படும் ஒரு வகையான வேதிப்பொருள் குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படும்பொழுது அவை இயற்கையாகவே சரி செய்வதற்கு துணை புரிகின்றன.
- எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகள் அனைவருக்கும் பிடித்த சுவையுடன் அன்னாசிப்பழம் இருக்கும் என்பது கூடுதல் நன்மையாகும்.
Pineapple Rice:
- வேக வைத்த சாதம்- 1 கப் (உதிரியாக இருக்க வேண்டும்)
- பட்டர் அல்லது எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு- சிறிதளவு
- முந்திரி பருப்பு- 8-10
- உலர் திராட்சை- சிறிதளவு
- நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் மற்றும் குடைமிளகாய்- அரை கப்
- மசாலா தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு- சுவைக்கு ஏற்ப
- நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள்- 1 கப்
- கொத்தமல்லி இலைகள்-1 டேபிள்.ஸ்பூன்
Pineapple Rice:
செய்முறை
- கடாயை சூடாக்கி அதில் சிறிதளவு பட்டர் அல்லது எண்ணெயை ஊற்றவும்.
- முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- அதற்கு பின்னால் உலர் திராட்சை, நறுக்கிய பூண்டு சேர்த்து நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
- நறுக்கிய குடைமிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும்.
- மசாலா தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.
- வெட்டி வைத்த பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதங்க விடவும்.
- அதற்கு பின்னால் ஏற்கனவே எடுத்து வைத்த சாதத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறி கொத்தமல்லி இலைகளை மேலே தூவவும்.
- இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- சுவையான பைனாப்பிள் சாதம் ரெடி.
- பைனாப்பிள் துண்டுகளும், அதை சேர்த்துள்ள காய்கறிகளும் சேர்த்து வித்தியாசமான சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இதனுடன் வேறு காய்கறிகள் சேர்க்கலாமா?
நீங்கள் விருப்பப்பட்டால் பச்சை பட்டாணி, துருவிய கேரட் போன்றவை சேர்த்தும் செய்யலாம்.
முந்திரி பருப்பு சேர்க்காமல் செய்யலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை என்றால் முந்திரிப்பருப்பு சேர்க்காமல், வேறு ஏதாவது உலர் பழங்கள் சேர்த்தும் கொடுக்கலாம்.
பிரவுன் ரைஸ் உபயோகிக்கலாமா?
நீங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் பிரவுன் ரைஸ் போன்றவை சேர்த்தும் இதனை செய்து கொடுக்கலாம்.
பைனாப்பிள் பிரைட் ரைஸ்
Ingredients
- வேக வைத்த சாதம்- ஒரு கப் உதிரியாக இருக்க வேண்டும்
- பட்டர் அல்லது எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு- சிறிதளவு
- முந்திரி பருப்பு- 8-10
- உலர் திராட்சை- சிறிதளவு
- நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் மற்றும் குடைமிளகாய்- அரைக்கப்
- மசாலா தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு- சுவைக்கு ஏற்ப
- நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள்- ஒரு கப்
- கொத்தமல்லி இலைகள்-1 டேபிள்ஸ்பூன்
Notes
கடாயை சூடாக்கி அதில் சிறிதளவு பட்டர் அல்லது எண்ணெயை ஊற்றவும்.
முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அதற்கு பின்னால் உலர் திராட்சை, நறுக்கிய பூண்டு சேர்த்து நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
நறுக்கிய குடைமிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும்.
மசாலா தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.
வெட்டி வைத்த பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதங்க விடவும்.
அதற்கு பின்னால் ஏற்கனவே எடுத்து வைத்த சாதத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறி கொத்தமல்லி இலைகளை மேலே தூவவும்.
இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
சுவையான பைனாப்பிள் சாதம் ரெடி.
Leave a Reply