Poosanikai Masiyal for Babies: குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித்தரும் பூசணிக்காய் பாசிப் பருப்பு மசியல்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆறு மாத குழந்தைகளுக்கு காய்கறி மசியல், பழக்கூழ் ஆகியவற்றை கொடுத்த பின்பு அடுத்த கட்டமாக இந்த ஆரோக்கியமான பூசணிக்காய் பாசிப்பருப்பு மசியலை நீங்கள் கொடுக்கலாம்.
பூசணிக்காயில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி தரும் வைட்டமின் சி மற்றும் இ ஆகியவை அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.
மேலும் பாசிப்பருப்பில் புரோட்டின் அதிகம் உள்ளது எனவே குழந்தைகள் சிறிதளவு இந்த உணவினை எடுத்துக் கொண்டாலே போதும் வயிறு நிரம்பியது போன்ற உணர்வினை தருவது மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும். உண்பதற்கு சுவையாக இருப்பதால் குழந்தைகள் கட்டாயம் விரும்பி உண்பார்கள்.
பூசணிக்காய் நன்மைகள்
- பூசணிக்காயில் தாது உப்புக்கள்,கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அதிகம் உள்ளன.
- குறைந்த பட்சம் வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் ப்லம் அளிக்கும்.
- பூசணிக்காயை தினமும் உணவில் சேர்த்து வரும் போது குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க வல்லது.
- பூசணிக்காயில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
- கடைகளில் பூசணிக்காய் வாங்கும்பொழுது நாட்டுப்பூசணிக்காய் வாங்குவது சிறந்தது.
Poosanikai Masiyal for Babies:
- பூசணிக்காய் துண்டுகள்- கால் கப்
- பாசிப்பருப்பு (தோல் நீக்கியது)- 2 டீ.ஸ்பூன்
- நெய்-1 டீ.ஸ்பூன்
- பூண்டு- ஒரு பல்
- வெங்காயம் பொடியாக நறுக்கியது
- மல்லித்தூள்- இம்மியளவு
Poosanikai Masiyal for Babies
செய்முறை
- பூசணிக்காயின் தோலினை நீக்கி அதில் உள்ள விதைகளை நீக்கவும்.
- பாசிப்பருப்பினை நன்றாக கழுவி தண்ணீரில் 10 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
- குக்கரில் நெய்யை ஊற்றவும்.
- நறுக்கிய பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- பின்பு வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- வெட்டிவைத்த பூசணித் துண்டுகள் மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.
- 2 விசில் வரும் வரை காத்திருக்கவும்.
- அடுப்பினை அணைக்கவும்.
- குக்கரை திறந்து மல்லித் தூள் தூவவும்.
- கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
- குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply