PUMPKIN PANCAKE IN TAMIL: குழந்தைகளுக்கு காலையில் தரும் உணவு மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், நம் ஊர்களில் காலை உணவு என்றாலே பெரும்பாலும் இட்லி தோசை என்பதை முதல் தேர்வாக உள்ளது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
எனவேதான் இட்லி மற்றும் தோசை ஆகியவற்றை சிறுதானியங்கள் மூலம் எவ்வாறு ஆரோக்கியமாக தரலாம் என்பதைப் பற்றி நாம் அடிக்கடி பதிவிட்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது குழந்தைகளுக்கான ஆரோக்கியமான காலை உணவு தான் பூசணிக்காய் பான் கேக்.
பூசணிக்காய் என்றாலே பொங்கல் போன்ற விசேஷ காலங்களில் மட்டுமே நாம் செய்யும் ஒரு காய்கறியாக இருக்கின்றது. உண்மையில் பூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
நம்ம ஊர்களில் பெரியவர்கள் பலரும் பூசணிக்காயை விரும்பாத பொழுது, குழந்தைகளுக்கு அதை கொடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயம்தான். எனவே குழந்தைகளுக்கு பூசணிக்காயை எப்படி கொடுப்பது என்ற யோசித்தபோது கிடைத்த ரெசிபி தான் இந்த பூசணிக்காய் பான் கேக். PUMPKIN PANCAKE IN TAMIL:
PUMPKIN PANCAKE IN TAMIL:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால், பூசணிக்காயில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- பூசணிக்காயில் பீட்டா கரோட்டின் எனப்படும் சத்துக்கள் அதிகம். இந்த சத்து வைட்டமின் ஏ எனப்படும் சத்தாக உடலில் தெரிகின்றது தெளிவான பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் ஏ எனப்படும் சத்து அவசியமாகும்.
- வைட்டமின் சி இதில் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றது. நம் உடல் இரும்பு சத்தினை கிரகித்துக் கொள்வதற்கும் இந்த சத்து அவசியமாகும்.
- இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் தசை மற்றும் இதயங்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.
- பூசணிக்காயில் நார் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உணவினை எளிதில் செரிமானமாக செய்கின்றது. எனவே மலச்சிக்கல் வராமல் தடுக்கக் கூடியது.
- இதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் கள் அதிகம் இருக்கின்றது. உடன் வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை இணைந்து செல்கள் சிதைவுராமல் பார்த்துக் கொள்கின்றது.
- உடலில் நாள்பட்ட நோய்கள் வருவதையும் தடுக்கும் சக்தி பூசணிக்காய்க்கு உண்டு.
- கலோரிகளும் இதில் குறைவு என்பதால் உடல் எடை அதிகரிக்காமல், வயிறு நிரம்ப உண்ண வேண்டும் என்று நினைத்தால் பூசணிக்காய் சரியான தீர்வாகும்.
- பூசணிக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் கள் தோலினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றது. இதனால் சருமம் மினுமினுப்பாகும்.
- பூசணிக்காயில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலின் கொழுப்பு சத்தினை சீராக வைப்பதன் மூலம் ரத்த கொதிப்பு வராமல் தடுக்க கூடியது.
- இத்தனை சத்துக்கள் உள்ள இந்த பூசணிக்காயினை குழந்தைகளுக்கு பான் கேக், ஸ்மூத்திகள் மற்றும் ஜூஸ் ஆகவே தயாரிக்கும் பொழுது சேர்த்து கொடுக்கலாம்.
- முட்டை-1
- பட்டர்- 2 டேபிள் ஸ்பூன்
- நாட்டு சர்க்கரை-2 டேபிள் ஸ்பூன்
- பால்- அரைக்கப்
- பூசணிக்காய் மசியல்-1/3 கப்
- கோதுமை மாவு- 3/4 கப்பல்
- லவங்கத்தூள்-1/4 டீஸ்பூன்
PUMPKIN PANCAKE IN TAMIL
செய்முறை
- பவுலில் ஒரு முட்டையை உடைத்து நன்றாக அடிக்கவும்.
- அதனுடன் உருக்கிய வெண்ணையை சேர்க்கவும்.
- பின்பு பால் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.
- அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கி கொள்ளவும்.
- அரைத்து வைத்த பூசணிக்காய் விழுதை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
- மற்றொரு பவுலில் கோதுமை மாவு மற்றும் லவங்கப்பட்டை தூள் சேர்த்து கிளறவும்.
- இதனுடன் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த முட்டை மற்றும் பூசணிக்காய் கலவையை சேர்த்து மெதுவாக கிளறவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து பட்டர் தடவவும்.
- தயாரித்து வைத்திருந்த மாவை தோசை போன்று ஊற்றாமல், ஊத்தாப்பம் போன்று சிறிய வட்டமாக ஊற்றவும்.
- தோசை வெந்ததும் திருப்பி போடவும்.
- குழந்தைகளுக்கான சத்தான பூசணிக்காய் பான் கேக் ரெடி.
இதனை ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது நாட்டுச் சர்க்கரை சேர்க்காமல் கொடுக்கலாம். எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு விரல்களால் உண்பதற்கு தக்க பிங்கர் புட்ஸ் கொடுக்கும் பொழுது, பூசணிக்காயை நீளவாக்கில் வெட்டி கடாயில் நெய் சேர்த்து சிறிது மிளகுத்தூள் தூவி ரோஸ்ட் செய்து கொடுக்கலாம்.
PUMPKIN PANCAKE IN TAMIL
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை கொடுக்கலாமா?
சேர்த்துள்ள அனைத்து பொருட்களும் குழந்தைகளுக்கு ஏற்றது தான் என்பதால் சர்க்கரை தவிர மற்ற பொருட்களை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
மீதமுள்ள மாவினை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சுட்டுக் கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவினை பொருத்தவரை அவ்வப்பொழுது பிரஷ்ஷாக செய்து இருப்பது தான் சிறந்தது.
சிறுவர்களுக்கு எப்படி பரிமாறலாம்?
சிறுவர்களுக்கு பிடித்தவாறு மேலே தேன் ஊற்றியோ, அவர்களுக்கு பிடித்தமான பழங்களை நறுக்கி மேலே தூவியோ பரிமாறலாம்.
பூசணிக்காய் பான் கேக்
Ingredients
- முட்டை-1
- பட்டர்- 2 டேபிள் ஸ்பூன்
- நாட்டு சர்க்கரை-2 டேபிள் ஸ்பூன்
- பால்- அரைக்கப்
- பூசணிக்காய் மசியல்-1/3 கப்
- கோதுமை மாவு- 3/4 கப்பல்
- லவங்கத்தூள்-1/4 டீஸ்பூன்
Leave a Reply