ராகி வாழைப்பழ புட்டு எப்படி செய்வது?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆறு மாத குழந்தைக்குகூட கொடுக்க கூடிய உணவு, கேழ்வரகு. குழந்தைகளின் முதல் உணவாக ராகி (கேழ்வரகு) இருப்பதால் ராகி மாவால் பலவித உணவுகளைச் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆவியில் வேகவைத்த உணவு மிக சிறந்தது. அதுவும் ராகி மாவை வேகவைத்து செய்யப்பட்ட ரெசிப்பி ‘தி பெஸ்ட்’ உணவு என்றுகூட சொல்லலாம். அவ்வளவும் ஆரோக்கியம். இந்த ராகியை சூப்பர் ஃபுட் என்றும் சொல்வார்கள். குழந்தைகளின் மிகச்சிறந்த உணவுப் பட்டியலில் ராகியும் ஒன்று. 6 மாத குழந்தைகள் முதல் வளரும் குழந்தைகள் வரை, பள்ளி செல்லும் மாணவர்கள், பெரியவர்கள், முதியவர்களுக்குகூட சிறந்த உணவாக ராகி இருக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கிறார்கள்.
ராகி வாழைப்பழ புட்டு செய்வது எப்படி?
- ராகி மாவு – 1 கப்
- ஏலக்காய்ப்பொடி – 1 சிட்டிகை
- வாழைப்பழம் – 1
- உலர் தானியப் பொடி – 2 டேபிள்ஸ்பூன்
- நெய் -1 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- நைசாக அரைத்த உலர் தேங்காய்ப்பொடி – 2 டீஸ்பூன்
செய்முறை
1.பாத்திரத்தில் ராகி மாவு, உப்பு போட்டு, லேசாக தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிரட்டிக்கொள்ள வேண்டும்.
2.இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, சூடேற்றவும்.
3.மெல்லிய துணியை நீரில் நனைத்து நன்றாக பிழிந்து, இட்லி தட்டில் விரித்து, பிரட்டி வைத்துள்ள ராகி கலவையை பரப்பிவிட வேண்டும்.
4.மூடி போட்டு 20 – 25 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.
5.பிறகு, அகலமான பாத்திரத்தில் மாற்றி, சூடாக இருக்கும்போதே நைசாக அரைத்த உலர் தேங்காய்ப்பொடி, நெய், ஏலக்காய்ப்பொடி, உலர் தானியப் பொடி சேர்த்து கிளறவும்.
6.குழந்தைக்கு கொடுக்கும் முன் வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்து, ராகி புட்டுடன் கலந்து கொடுக்கவும்.
7.இந்த ராகி வாழைப்பழ புட்டை சிறிது சிறிதாக குழந்தைக்கு கொடுக்கலாம்.
8.காலை உணவாக கொடுத்து வருவது மிகவும் நல்லது.
9.வாரம் இருமுறை கொடுப்பது சிறப்பு.
பலன்கள்
- இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து நிறைந்துள்ளன.
- எலும்புகள் வலுப்பெறும்.
- தேவையான கால்சியம் சத்து ராகியிலிருந்து கிடைக்கும்.
- பசியின்மையைப் போக்கும்.
- வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- செரிமானம் எளிமையாக நடக்கும்.
- ரத்தசோகை நீங்கும். ரத்தசோகை பிரச்னை வராமலும் தடுக்கப்படும்.
- குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.
- எனர்ஜி, சுறுசுறுப்பு ஆகியவை கிடைக்கும்.
- சமச்சீர் உணவு (Balanced Meal) என்று சொல்ல கூடிய உணவாக ராகி வாழைப்பழ புட்டு இருப்பதால் இதை உண்ணும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.
Leave a Reply