Ragi Sweet Potato Kanji : குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் எந்த உணவு கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அம்மாக்களின் கேள்வியாக உள்ளது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளின் உடல் எடையை பற்றி நான் அடிக்கடி கூறும் பதில் ஒன்றுதான். குழந்தைகள் சுறுசுறுப்பாக இருந்தால் நீங்கள் உடல் எடையை பற்றி கவலைப்பட தேவையில்லை. மேலும், எந்த வயதிற்கு குழந்தைகள் எந்த எடையுடன் இருக்க வேண்டும் என்ற தெளிவான விளக்கமும் நான் ஏற்கனவே கொடுத்துள்ளேன்.
அதில் குறிப்பிட்ட எடையை விட குறைவாக இருந்தால் நீங்கள் உடனடியாக குழந்தைகளின் எடையை கவனிக்க வேண்டும். அதேநேரம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உணவு பொருளானது குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
Ragi Sweet Potato Kanji :
குறிப்பிட்ட உணவுப் பொருட்களை கொடுக்கும் பொழுது குழந்தைகளின் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும் என்பதால் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளை நான் உங்களுக்கு பட்டியலாக கொடுத்து வருகின்றேன்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி சர்க்கரைவள்ளிக் கிழங்கு ராகி கஞ்சி. பொதுவாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் ராகி ஆகிய இரண்டுமே குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஒன்றுதான்.
இந்த இரண்டையும் தனித்தனியாக குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக செய்து தருவது எப்படி என்ற ரெசிபியை ஏற்கனவே நான் பார்த்து விட்டோம். இன்று இந்த இரண்டையும் வைத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக எப்படி காலை உணவு செய்து தருவது என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் ராகியில் நிறைந்துள்ள நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.
Ragi Sweet Potato Kanji
சர்க்கரைவள்ளிக் கிழங்கின் நன்மைகள்:
- சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் பார்வை திறனை அதிகரிக்க கூடியது.
- வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளதால் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.
- சர்க்கரைவள்ளி கிழங்கு மலச்சிக்கலை கட்டுப்படுத்தி உணவை எளிதில் செரிமானமாக செய்கின்றது.
- சர்க்கரைவள்ளி கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் ஒரு நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது.
- சர்க்கரைவள்ளி கிழங்கில் கலோரிகள் அதிகம் என்பதால் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்கின்றது.
Ragi Sweet Potato Kanji
ராகியில் நிறைந்துள்ள நன்மைகள்:
- ராகியில் கால்சியம் அதிகம் என்பதால் எலும்புகளுக்கு வலிமை தருகின்றது.
- இதில் இரும்பு சத்து அதிகம் என்பதால் ரத்தசோகை வராமல் தடுக்க கூடியது.
- ராகியில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உணவினை எழுத செரிமானமாக செய்கின்றது.
- இதில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை அளிக்கின்றது.
- இதில் குளூட்டோன் இல்லை என்பதால் குளூட்டோன் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு ஏற்ற எளிமையான உணவாகும்.
Ragi Sweet Potato Kanji
- முளைகட்டிய ராகி மாவு- ஒரு டேபிள்ஸ்பூன்
- சர்க்கரைவள்ளி கிழங்கு மசியல்
- டிரை ஃப்ரூட்ஸ் பவுடர்(8 மாத குழந்தைகளுக்கு மேல்)
- தண்ணீர் அல்லது பால்(ஒரு வயது குழந்தைகளுக்கு மேல்)
- நெய்- ஒரு டீஸ்பூன்.
Ragi Sweet Potato Kanji
செய்முறை
1.சர்க்கரைவள்ளி கிழங்கினை நன்றாக கழுவி குக்கரில் வேக வைக்கவும்.
2.கிழங்கின்தோலை நீக்கி கிழங்கினை நன்றாக மசிக்கவும்.
3.கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் ராகி மாவுடன் ஒரு கப் தண்ணீர் அளவு பால் சேர்த்து நன்றாக கிளறவும்.
4.கட்டிகள் இல்லாமல் இருக்க கலவையை நன்றாக கலக்கி கொள்ளவும்.
5.அடுப்பினை சிம்மில் வைத்து சர்க்கரைவள்ளி கிழங்கு மசியலை சேர்த்து நன்றாக கிளறவும்.
6.சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் ராகியாகவே இரண்டும் ஒன்றாகும் வரை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
7.அடுப்பினை ஆப் செய்த பின்பு ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும்.
வளரும் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவாக இந்த ராகி சர்க்கரைவள்ளி கிழங்கு கஞ்சி இருக்கும். ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு இந்த கஞ்சியினை கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Ragi Sweet Potato Kanji:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1.குழந்தைகளுக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் ராகியை எப்பொழுது அறிமுகப்படுத்தலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் முதல் உணவு கொடுக்க ஆரம்பிக்கும் போதே சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் ராகி ஆகிய இரண்டையும் கொடுக்கலாம்.
2. இந்த கஞ்சியில் சர்க்கரை சேர்க்கலாமா?
ஒரு எதற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்க்கக்கூடாது. அதற்கு பதிலாக கஞ்சியை இனிப்பாக நினைத்தால் வாழைப்பழம்,ஆப்பிள் மற்றும் பேரிச்சை ஆகியவற்றை சேர்த்து இனிப்பாக மாற்றலாம்.
3. வாரத்திற்கு எத்தனை தடவை இந்த கஞ்சி கொடுக்கலாம்?
இந்த கஞ்சியினை வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை கொடுக்கலாம். எனக்கு அமெரிக்கா
Leave a Reply