Rava Dates Laddu in Tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு என்றால் அலாதி பிரியம் தான்.ஆனால், குழந்தைகளுக்கு கடைகளில் வாங்கும் சர்க்கரை சேர்க்கும் இனிப்புகளை கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல.அதற்கு பதிலாக வீட்டிலேயே ஆரோக்கியமான இனிப்பு வகைகளை செய்து கொடுக்கலாம்.சீனிக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை,பனை வெல்லம்,கருப்பட்டி,பனங்கற்கண்டு போன்றவை உபயோகிப்பது உடல் நலனிற்கு நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால்,இவை எல்லாவற்றிலும் முதலானது டேட்ஸ் பவுடர் எனப்படும் பேரீச்சம்பழ பவுடர்.ஏனென்றால், குழந்தைக்கு தேவையான இரும்பு சத்தினை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Rava Dates Laddu in Tamil:
- ரவை – 1 கப்
- ட்ரை டேட்ஸ் பவுடர்– 1 கப்
- ட்ரை புரூட்ஸ் பவுடர்– 4 டே .ஸ்பூன்
- துருவிய தேங்காய் – 4 டே.ஸ்பூன்
- நெய்- 4 டே .ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – இம்மியளவு
- பால்- 500 மி.லி
டேட்ஸ் பவுடரை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
Rava Dates Laddu in Tamil:
செய்முறை:
1) பானை சூடாக்கி 4 டே.ஸ்பூன் நெய் ஊற்றவும்.
2) ரவை போட்டு நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.
3) தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
4) ரவையுடன் பாலை சேர்க்கவும்.
5) கலவை கெட்டியாக ஒட்டாமல் வருமளவிற்கு தொடர்ந்து கிளறவும்.
6) டேட்ஸ் பவுடர் மற்றும் ட்ரை புரூட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
7) மிதமான தீயில் கெட்டிகள் இல்லாமல் கிளறவும்.
8) 1 டே.ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.
9) ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
10) நன்றாக கிளறவும்.
11) கைகளில் நெய் தடவவும்.
12) மாவை சிறிது சிறிதாக எடுத்து பந்துகளாக உருட்டவும்.
13) சர்க்கரை சேர்க்காத ஆரோக்யமான ரவா டேட்ஸ் பால் ரெடி.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு மாலைநேர ஸ்னாக்ஸாக இந்த சத்தான ரவா டேட்ஸ் லட்டுவினை கொடுக்கலாம்.குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் சுவைத்து மகிழலாம்!
டேட்ஸ் பவுடரை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply