Rosemilk recipe in Tamil: உடல் சூட்டை தணிக்கும் இயற்கையான ரோஸ் மில்க் சிரப்.மிகவும் எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அன்பை பரிமாறுவதற்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும் அனைத்தையும் தாண்டி முதலிடம் வகிப்பது ரோஜாப்பூக்கள்.பார்க்கும்பொழுதே வண்ண வண்ண நிறங்களால் மனதை கொள்ளை கொள்ளும். அழகோடு பல மருத்துவ குணங்களும் நிறைந்ததால் உடலுக்கு நன்மை அளிக்கின்றது. அவற்றுள் முக்கியமான ஒன்று உடல் சூட்டினை தணிக்க வல்லது.
உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதால் ரோஸ் மில்க் பானம் கோடை காலத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் விரும்பி பருகப்படுகிறது.அதன் மணத்துடன் கூடிய சுவை பானத்தை திரும்ப திரும்ப பருக தோன்றும்ஆனால் கடைகளில் அதனை வாங்கி பருகும்பொழுது ரோஜா பூவிற்கு பதிலாக ப்ரெசெர்வேடிவ்ஸ் கலந்த பவுடர்களே உபயோகப்படுத்தப்படுகின்றன.இதை நாம் வீட்டிலேயே தயாரிக்கும்பொழுது ஆரோக்கியமும்,சுவையும் கூடுதலாக கிடைக்கும்.
ரோஜா இதழ்கள், கற்கண்டு மற்றும் ஏலக்காய் கொண்டு எளிதாக இந்த பானத்தை தயாரிக்கலாம்.வாருங்கள் இப்பொழுது செய்முறையை பார்க்கலாம்.
Rosemilk recipe in tamil

இதையும் படிங்க: குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகள்.
Rosemilk recipe in Tamil:
தேவையானவை
- ஆர்கானிக் ரோஜா பூக்கள் -35-50
- ஏலக்காய்-2-3
- கற்கண்டு-1½ கப்

செய்முறை
1.ரோஜா இதழ்களை தனியாக பிரித்து எடுக்கவும்.

2.சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவவும்.

3.2 கப் தண்ணீரை சூடாக்கி கழுவிய ரோஜா இதழ்களை அதில் போடவும்.

4. ரோஜா மலரின் நறுமணம் மற்றும் கலர் பிரியும் வரை நன்றாக கொதிக்க விடவும்.


5.ரோஜா இதழ்களை வடிகட்டி தண்ணீரை தனியாக பிரித்து எடுக்கவும்.

6.தண்ணீருடன் கற்கண்டை சேர்க்கவும்.

7. மேலும் 20 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.நன்றாக கலக்கவும். கலவை நன்கு சுண்டி பாகு பதத்திற்கு வரும்.


8.அடுப்பிலிருந்து கலவையை இறக்கி ஏலக்காய் பொடியை சேர்க்கவும். நன்றாக கலக்கி கலவையை ஆற விடவும்.

9.ரோஸ் சிரப்பை கற்று புகாத ஜாரில் அடைத்து பிரிட்ஜில் வைக்கவும்.
10.சிரப்பை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து பருகலாம்.

இந்த சிரப்பை 2 முதல் 3 மாதங்களுக்கு பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.நல்ல அடர்ந்த நிறம் வேண்டுமென்று நினைத்தால் பீட்ரூட் சாற்றை சேர்க்கலாம் சுவையோடல்லாமல் பல மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது ரோஜா இதழ்கள்.அதனால் தான் பாரம்பரியமாக இவை பல மருத்துவ காரணங்களுக்காக உபயோகப்படுத்தப்படுகின்றன.
இதையும் படிங்க: வியர்க்குருவை விரட்ட எளிமையான வீட்டு வைத்தியம்
ரோஜா பூவின் மருத்துவ குணங்கள்:
- ரோஜா பூ இதழ்கள் உடல் உஷ்ணத்தை போக்கும்.
- உடலில் ரத்த விருத்தியை அதிகரிக்கும்.
- சரும பிரச்சனைகளை நீக்க வல்லது.
இதை நாம் வீட்டிலேயே செய்யும் பொழுது அனைத்து மருத்துவ குணங்களும் நமக்கு அப்படியே கிடைக்கும்.ரோஸ் மில்க் சிரப் செய்ய தயாராகி விட்டீர்கள்தானே!

Leave a Reply