Samba Ravai Cutlet : சம்பா கோதுமை அல்லது சம்பா ரவை என்ற உணவு வகையினை நாம் தற்பொழுது அதிகமாக கேள்விப்பட்டு வருகின்றோம். நீரிழிவு நோயினை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கும் மற்றும் பலவகையில் உடலுக்கு நன்மை அளிப்பதால் பெரும்பாலானவர் தற்பொழுது காலை மற்றும் இரவு உணவாக இதனை உண்டு வருகின்றனர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
எனவே சம்பாரவையானது நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டுமே உண்ணக்கூடிய ஒரு உணவாக பார்க்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதனை குழந்தைகளுக்கும் தரும் பொழுது ஏராளமான நன்மைகள் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு உப்புமா போன்று செய்து கொடுத்தால் கண்டிப்பாக அதனை உண்ண மாட்டார்கள் எனவே அதனை குழந்தைகளுக்கு எப்படி கொடுக்கலாம் என்று யோசித்துப் பொழுது கிடைத்த ரெசிபி தான் இந்த சம்பா ரவை கட்லெட்.
மாலைப் பொழுது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸாக செய்து கொடுத்தால் ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் செய்து கொடுத்த திருப்தி நமக்கு உண்டாகும்.
பேக்கரிகளில் விற்கும் ஸ்நாக்ஸை காட்டிலும் வீட்டிலேயே செய்து தரும்பொழுது நம் குழந்தைகளுக்கு பிடித்த காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான பொருட்களை சேர்த்து நாம் கொடுக்கலாம்.
Samba Ravai Cutlet
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் சம்பா ரவையில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:

- சம்பாரவையில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் என்பதால் குழந்தைகள் நீண்ட நேரம் ஆற்றலுடன் இருப்பதற்கு தேவையான சக்தியை அளிக்கின்றது.
- சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் மெது மெதுவாக ஆற்றலை வெளிவிடும் தன்மை சம்பா ரவைக்கு உள்ளது என்பதால் பசியும் அவ்வளவு சீக்கிரம் எடுக்காது.
- இந்த ரவையானது எளிதில் செரிமானமாகும் என்பதால் குழந்தைகளுக்கு செரிமான தொந்தரவுகள் ஏற்படாது.
- நார் சத்துக்கள் அதிகம் என்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது மேலும் குடலுக்கும் நன்மை அளிக்கக் கூடியது.
- இதில் க்ளூட்டின் எனப்படும் பொருள் இல்லை என்பதால் க்ளூட்டின் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கும் இதனை தாராளமாக கொடுக்கலாம்.
- பட்டை தீட்டப்படாத அரிசியில் இருந்து இது தயாராகின்றது என்பதால் தானியத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அப்படியே கிடைக்கும்.
- சம்பா ரவை- 1 கப்
- வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு-1
- பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ்- 2 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள்தூள்- கால் டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- கால் டீ.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய் -தேவையான அளவு
Samba Ravai Cutlet
செய்முறை
- ஒரு பவுலில் வேக வைத்த சம்பா ரவை மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கினை எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் நறுக்கிய கேரட் பீன்ஸ் மஞ்சள் தூள் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- எல்லாவற்றையும் ஒன்றாக மாவு பதத்திற்கு பிசையவும்.
- சிறிது சிறிதாக கட்லெட் போன்று தட்டவும்.
- தோசை கல்லினை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி கட்டலட்டினை மிதமான தீயில் வேக விடவும்.
- பொன்னிறமாகும் வரை காத்திருந்து புரட்டி எடுக்கவும்.
- இருபுறமும் பொன்னிறமானால் கட்லெட் தயார்.
- குழந்தைகளுக்கு தயிர் அல்லது வீட்டிலேயே செய்த தக்காளி சாஸ் கொண்டு கொண்டு பரிமாறலாம்.
குழந்தைகளுக்கு காலை உணவு கொடுப்பதற்கும் அல்லது மாலை முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுப்பதற்கும் ஏற்ற ரெசிபி ஆகும்.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் பொழுது ஸ்நாக்ஸ் பாக்ஸில் வித்தியாசமான ஸ்னாக்ஸ் ஆக இதை கொடுத்து அனுப்பலாம். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களும் டீ குடிக்கும் நேரத்தில் இந்த வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம்.
Samba Ravai Cutlet

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எந்த வயதில் இருந்து குழந்தைகளுக்கு இந்த சம்பா ரவை கட்டிலட்டை கொடுக்கலாமா?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு நன்கு மசித்து இதனை கொடுக்கலாம்.
வேறு ஏதேனும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பீட்ரூட்டை துருவியோ அல்லது பச்சை பட்டாணி போன்றவற்றை சேர்த்தோ செய்து கொடுக்கலாம்.
சம்பா ரவை கட்லெட்
Ingredients
- சம்பா ரவை- 1 கப்
- வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு-1
- பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ்- 2 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள்தூள்- கால் டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- கால் டீ.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய் -தேவையான அளவு
Notes
அதனுடன் நறுக்கிய கேரட் பீன்ஸ் மஞ்சள் தூள் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக மாவு பதத்திற்கு பிசையவும்.
சிறிது சிறிதாக கட்லெட் போன்று தட்டவும்.
தோசை கல்லினை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி கட்டலட்டினை மிதமான தீயில் வேக விடவும்.
பொன்னிறமாகும் வரை காத்திருந்து புரட்டி எடுக்கவும்.
இருபுறமும் பொன்னிறமானால் கட்லெட் தயார்.
குழந்தைகளுக்கு தயிர் அல்லது வீட்டிலேயே செய்த தக்காளி சாஸ் கொண்டு கொண்டு பரிமாறலாம்.











Leave a Reply