Sapota Milkshake in Tamil: இயற்கையிலேயே எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த சப்போட்டா பழம் நம்மில் பலருக்கும் பிடிக்காது. அதன் வழவழப்பு தன்மையால் குழந்தைகளும் அதனை விரும்பி உண்ண மாட்டார்கள். என் வீட்டிலும் இதே கதைதான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
என் குழந்தைகளுக்கு சப்போட்டா பழம் என்றாலே பிடிக்காது ஆனால் அதை மில்க் ஷேக்காக செய்து கொடுத்த பொழுது மில்க் ஷேக் சென்ற இடம் தெரியவில்லை ஒரே நிமிடத்தில் காலி.வெயில் காலம் என்பதால் நீங்களும் இந்த சுவையான மில்க் ஷேக்கினை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
சப்போட்டா பழத்துடன் பாலின் நற்குணங்களும் சேரும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது.குழந்தைகளுக்கு எட்டாவது மாதத்திலிருந்து இந்த மில்க் ஷேக்கினை கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கான சப்போட்டா மில்க் ஷேக்
இதையும் படிங்க : சிறுவர்களுக்கான டேட்ஸ் அல்மோன்ட் மில்க் ஷேக்
- பழுத்த சப்போட்டா பழம்-1
- தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் – 50 மி.லி (குழந்தைகளுக்கு)
செய்முறை
- சப்போட்டா பழத்தை தண்ணீரில் நன்றாக கழுவவும்
- இரண்டாக நறுக்கவும்
- கொட்டைகளை நீக்கவும்
- சதை பகுதியினை தனியாக பிரித்தெடுக்கவும்
- தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து நன்றாக மசிக்கவும்
- நன்றாக மசித்ததும் குழந்தைகளுக்கு பரிமாறவும்.
Sapota Milkshake in Tamil
சிறுவர்களுக்கான சப்போட்டா மில்க் ஷேக்
- பழுத்த சப்போட்டா -2
- பசும்பால்- 150 மி.லி
- சர்க்கரை-தேவையானளவு
செய்முறை
1.சப்போட்டா பழத்தை தண்ணீரில் நன்றாக கழுவவும்
2.இரண்டாக நறுக்கவும்.
3.கொட்டைகளை நீக்கவும்
4.சதை பகுதியினை தனியாக பிரித்தெடுக்கவும்.
5.நறுக்கிய சப்போட்டா பழம் , பால் மற்றும் சர்க்கரை போன்றவற்றை மிக்சி ஜாரில் சேர்க்கவும்.
6.பாலுடன் சப்போட்டா நன்றாக கலக்கும் வரை நன்றாக அரைக்கவும்.
7.சப்போட்டா மில்க்க்ஷேக் ரெடி
ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு , டேட்ஸ் பவுடர் ஆகியவை சேர்த்து கொள்ளலாம். ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு மாட்டுப்பால் மற்றும் சர்க்கரை சேர்க்கக்கூடாது.
சப்போட்டா பழத்தின் நன்மைகள்
- நார்சத்து அதிகளவில் உள்ளதால் மலச்சிக்கலுக்கு நல்லது.
- வைட்டமின்-எ மற்றும் வைட்டமின்-சி அதிகளவில் நிறைந்துள்ளது.
- இரும்புச்சத்து,கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்தது.
- சளி மற்றும் இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்க கூடியது.
- குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply