வேகவைத்து மசித்த சர்க்கரை வள்ளி கிழங்கு
(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
- சர்க்கரை வள்ளிக் கிழங்கு – ஒன்று
- பட்டை தூள் அல்லது ஏலக்காய் தூள் – தேவையெனில்
- வெல்லக்கரைசல் அல்லது பனங்கல்கண்டு – தேவையெனில்
செய்முறை:
- சர்க்கரை வள்ளிக் கிழங்கை எடுத்து நான்கு துண்டுகளாக்கி கொள்ளவும். கிழங்கில் அதிகளவில் நார்கள் இருப்பதால் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டுவது கடினம்.
- எனவே இதனை தண்ணீரில் வேக வைக்கவும் அல்லது ஆவியில் வேகவைத்துக் கொள்ளலாம்.
- பிரஷர் குக்கரில் 2 முதல் 3 விசில் வரை விடவும்.
- ஒருவேளை நீங்கள் மைக்ரோ வேவ் அவனில் பேக் செய்வதாக இருந்தால் 400 பாரன்ஹீட்டில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். இதனை பாயில் கவரில் சுற்றி அதில் சிறு சிறு துளைகள் இட்டு அவனில் வேக விடவும்.
- இதன்பிறகு தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். இத்துடன் பட்டைத்தூளை சேர்த்து வெதுவெதுப்பான நிலையில் பரிமாறவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
- கடைகளில் இதை வாங்கும் போது எந்த வித கீறல்களும் இல்லாமல், அதன் மேல் பகுதியில் எந்த புள்ளிகளும் இல்லாமல் பார்த்து வாங்குங்கள். கிழங்கை கைகளால் தொடும் போது அது கடினமாக இருக்க வேண்டும்.
- இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் சத்துகள் இருக்கிறது.
இதில் உள்ள நார்ச்சத்து குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும்.
“சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் சத்துகள் இருக்கிறது”
“இதில் உள்ள நார்ச்சத்து குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும்”
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply