Senai kilangu varuval: குழந்தைகளுக்கான ஹெல்தியான பிங்கர் ஃபுட்ஸ் ரெசிபிதான் இந்த சேப்பக்கிழங்கு ஃபிரை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

குழந்தைகளுக்கு ஃபிரை என்றாலே அலாதி பிரியம் தான்.லன்ச் பாக்சில் பெரும்பாலான குழந்தைகள் கேட்டு நச்சரிப்பது உருளைகிழங்கு ஃபிரை தான்.ஆனால் அடிக்கடி உருளைக்கிழங்கு ஃபிரை சாப்பிட்டு போரடித்த குழந்தைகளுக்கு உற்சாகமளிக்கும் ரெசிபிதான் இந்த சேப்பக்கிழங்கு ஃபிரை. இந்த கிழங்கானது சேப்பங்கிழங்கு, சோம்பு, சேனை, சாமைக்கிழங்கு, சேமங்கிழங்கு, சேமைக்கிழங்கு போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
இந்த சத்துள்ள சேப்பக்கிழங்கு ஃபிரையினை 8 மாதத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு பிங்கர் புட்டாகவும் கொடுக்கலாம்.
Senai kilangu varuval:
சேப்பக்கிழங்கின் நன்மைகள்:
- சேப்பங்கிழங்கில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகமிருப்பதால் எலும்புகளுக்கு வலுவளிக்க வல்லது.
- நார்ச்சத்துக்கள் அதிகமிருப்பதால் மலசிக்கல் அண்டாமல் தடுக்கிறது.
- இரும்பு ,புரதம்,வைட்டமின் ஏ மற்றும் பி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
- குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.
- தோல் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்க வல்லது.
- ரத்த ஓட்டத்தினை சீராக்குகிறது.
- இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கின்றன.
தேவையானவை
- சேப்பங்கிழங்கு – 8-10
- மிளகுத்தூள் -தேவையானளவு
- உப்பு -தேவையளவு
Senai kilangu varuval:
செய்முறை
1.சேப்பங்கிழங்கில் உள்ள மண் நீங்குமாறு தண்ணீரில் நன்றாக கழுவவும்.


2.குக்கரில் 2-3 விசில் வருமளவிற்கு நன்றாக சூடாக்கவும்.


3.கிழங்கு ஆறியதும் தோலினை நீக்கவும்.

4.சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.


5.வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.பொன்னிறமாகும் வரை கிழங்கினை வறுத்து எடுக்கவும்.

6.மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.


உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.

சேப்பங்கிழங்கு வறுவல்
Ingredients
- · சேப்பங்கிழங்கு– 8-10
- · மிளகுத்தூள்-தேவையானளவு
- · உப்பு-தேவையளவு
Instructions
- 1. சேப்பங்கிழங்கில்உள்ள மண் நீங்குமாறு தண்ணீரில்நன்றாக கழுவவும்.2. குக்கரில்2-3 விஸில் வருமளவிற்கு நன்றாக சூடாக்கவும்.3. கிழங்குஆறியதும் தோலினை நீக்கவும்.4. சிறுசிறு துண்டுகளாக வெட்டவும்.5. வாணலியில்எண்ணெய் ஊற்றவும்.பொன்னிறமாகும் வரை கிழங்கினை வறுத்துஎடுக்கவும்.6. மிளகுத்தூள்மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
Leave a Reply