Summer Tips for Babies in Tamil: அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் முன்பை விட வெயில் அதிகமாக வாட்டி வதைக்கின்றது.குழந்தைகளுக்கும் கோடை விடுமுறை என்பதால் அவர்களை வீட்டில் அதிக நேரம் பூட்டி வைக்க முடியாது.அதற்கு மேல் பூட்டி வைத்தால் அவர்களின் விளையாட்டு மொபைல் போன்களிலும்,தொலைக்காட்சிகளிலும் கழியும். ஆனால்,அது குழந்தைகளின் உடல் நலனை பாதிக்கும்.அதனால் குழந்தைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் விளையாட அனுமதிப்பதே சிறந்தது.அதே நேரம் குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
“வரும் முன் காப்பதே நலம் “ என்ற பழமொழிக்கிணங்க குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் உபாதைகளும் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காணலாம்.
Summer Tips for Babies in Tamil:
உடல் நீர்வறட்சி
குழந்தைகள் பொதுவாக விளையாடும் ஆர்வத்தில் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்துவதை மறக்கின்றனர்.அதே நேரம் விளையாடும் பொழுது உடலில் உள்ள தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறுகின்றது.எனவே உடலுக்குள் செல்வதைவிட அதிக அளவு திரவம் வெளியேறும்போது உடலில் நீர் வறட்சி ஏற்படுகின்றது. அதிக தாகம் எடுத்தல்,சிறுநீர் சிறிது சிறிதாக வெளியேறுதல் மற்றும் அடர்மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு குடிக்க அதிக அளவில் தண்ணீர்,இளநீர் மற்றும் ஓ. ஆர் .எஸ் பவுடர் முதலியவற்றை கொடுக்கலாம். இது உடலுக்கு தேவையான மினெரல் மற்றும் உப்பு ஆகியவற்றை தக்க வைத்துக்கொள்ள உதவும்.
சன் பர்ன்
அதிகளவு வெப்பம் உடலில் படும் பொழுது தோலில் உள்ள மெலனின் பாதிக்கப்படுவதால் சன் பர்ன் ஏற்படுகிறது.சருமத்தில் சூரியக்கதிர்கள் தொடர்ந்து பட்டு, சருமத்தின் நிறம் சிவப்பு கலந்த கருமையாகும். அதுமட்டுமின்றி, சருமம் எரிய ஆரம்பிக்கும்.ஆகவே, சூரியக்கதிர்களால் சருமம் பாதிக்கப்படாமல் இருக்க, சருமத்திற்கு போதிய பாதுகாப்புக்களை வழங்க வேண்டும்.
- காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.அதனால் அந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
- குழந்தைகள் வெளியில் செல்ல நேர்ந்தால் 15 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்கிரீன் பூசி விட வேண்டும்.
- கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்திற்கு தடவி வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெற்று, சூரியக்கதிர்களால் பாதிப்படைந்த சருமம் குளிர்ச்சியடையும்.
Summer Tips for Babies in Tamil
ஹீட் ஸ்ட்ரோக்
கோடை காலத்தில் அதிக நேரம் வெயிலில் இருக்க நேர்ந்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.இந்த பிரச்சனைக்கு டாக்டரிடம் அணுகுவதே சிறந்தது.வெகுவாக ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பிரச்சனை ஏற்படுகிறது. உடலின் வெப்பநிலை திடீரென்று அதிகரித்தல், மயக்கம் வருவது, மூச்சு விடுவதில் சிரமம், சருமம் சிவந்து போவது,சோர்வு மற்றும் பல்ஸ் குறைதல் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். குழந்தைகளை உச்சி வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்ப்பதே இதற்கான சரியான தீர்வாகும்.
இதையும் படிங்க
குழந்தைகளுக்கான தர்பூசணி ஸ்மூத்தி
பூஞ்சை தொற்று
வெயில் காலத்தில் அதிகம் வியர்ப்பதினால் ஏற்படும் ஈரப்பதம் பூஞ்சை தொற்றிற்கு காரணமாகிறது. இதனால் அக்குள் பகுதி, கழுத்து, விரங்களின் இடுக்குகள் ஆகியவற்றில் தொடர்ந்து அரிப்பு ஏற்படும் அரிப்பினால் தோல் சிவப்பாகும்.எனவே, கோடைகாலங்களில் உடலை சுகாதாரமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம்.
பூஞ்சை தொற்றிலிருந்து குழந்தைகளை காப்பதற்கான வழிகள்:
- சுத்தமான மற்றும் உலர்ந்த ஆடைகளை உ டுத்த வேண்டும்.
- விளையாடி முடித்தவுடன் கை மற்றும் கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். அதிகமாக வியர்வை வெளியேறிய உடைகளை உடனடியாக மாற்ற வேண்டும்.
- உபயோகிக்கும் சட்டை மற்றும் ஷூக்களை ஒருவருக்கொருவர் மாற்றி அணிய கூடாது.
வியர்க்குரு
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சனை வியர்குருவாகும்.அதிகப்படியான வியர்வையினால் வியர்க்குரு துவாரங்கள் அடைக்கப்படும் பொழுது வியர்க்குரு ஏற்படுகிறது.பொதுவாக குழந்தைகளுக்கு வியர்வை வெளிப்படுத்தும் சுரப்பிகளின் வளர்ச்சி முழுமையடைந்திருக்காது, அதனால் வியர்க்குரு பிரச்சனை எளிதாக ஏற்படுகிறது.
குழந்தைகளை வியர்குருவிலிருந்து காப்பதற்கான வழிமுறைகள்:
- மெல்லிய பருத்தி துணிகளை அணிவிக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு வியர்க்குரு இருந்தால் வெது வெதுப்பான நேரில் குளிக்க வைத்து சிறிது நேரம் ஆடைகள் உடுத்தாமல் இருக்கலாம். இது வியர்க்குரு குணமாக வழி செய்யும்.
- கெமிக்கல் கலக்காத சந்தானம் , முல்தானி மட்டி மற்றும் வெங்காயச்சாறு போன்றவற்றை வியர்க்குரு மீது தேய்க்கும் பொழுது எளிதில் குணமடையும்.
கொசுத் தொல்லை
கோடை காலத்தில் காற்று ஈரப்பதம் இல்லாமல் இருப்பதால் கொசுக்கள் பறப்பதற்கு ஏதுவாக இருக்கும். குழந்தைகள் வெளியில் அடிக்கடி விளையாட செல்வதால் கொசு போன்றவை எளிதாக கடிக்கலாம். மேலும், காற்றோட்டத்திற்காக ஜன்னல் முதலானவற்றை திறந்து வைப்பதாலும் கொசுக்கள் முதலானவை எளிதில் உள்ளே வரலாம்.மிகவும் பயப்பட தேவையில்லை என்றாலும் கொசுக்கள் மற்றும் ஒரு சில பூச்சிகள் அலர்ஜியை ஏற்படுத்த கூடும்.அப்பொழுது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இதையும் படிங்க:
சாக்லேட் மல்டி கிரெய்ன் பொப்சிக்கல்
கண் எரிச்சல்
கோடை காலத்தில் சூரியனிடமிருந்து வரும் கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் கண்களை பாதிக்ககூடும்.அதிகப்படியான வெப்பத்தினால் கண்ணின் ஈரப்பதமும் குறைய கூடும். கைப்பேசிகள் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பதால் கண்கள் பாதிப்படையக்கூடும்.எனவே, அவற்றை உபயோகிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.வெளியில் செல்லும் பொழுது கண்களை மறைக்குமாறு தொப்பியை அணிய வேண்டும்.புறஊதாக்கதிர்கள் பாதிக்காத வண்ணம் கண்ணாடிகளை அணிய வேண்டும்.
காது வலி
கோடை காலத்தின் வெப்பத்தை தணிக்க நீச்சல் குளத்தில் பெரும்பாலானோர் செலவிடுவார்.அவ்வாறு நீந்தும் பொழுது காதுகளில் தண்ணீர் செல்வதினால் பாக்டீரியா தொற்று அதிகமாகி கடுமையான வலி ஏற்படக்கூடும்.அதனால், காதுகளில் உறை அணிந்து கொள்ள வேண்டும்.
வயிற்று போக்கு
வயிற்றுப்போக்கு என்பது வெயில் காலத்தில் பரவலாக ஏற்படும் ஒன்றாகும். குழந்தைகளின் உடலில் உள்ள தண்ணீர்ச்சத்து இதனால் விரைவில் குறைய கூடும்.சரியாக சுத்தம் செய்யப்படாத தட்டுகள் மேலும் அசுத்தமான நீரினால் செய்யப்பட்ட ஜுஸ்கள் போன்றவற்றை கடைகளில் வாங்கி அருந்துவதால் ஏற்படுகிறது.எனவே,குழந்தைகளுக்கு கடைகளில் உணவுகளை வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க:
Leave a Reply