வேகவைத்து மசித்த சுரைக்காய் (அல்லது) சுரைக்காய் கூட்டு
Suraikkai kool or kootu for babies
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
(குழந்தையின் 7 வது மாதத்தில் இருந்து தரலாம்)
- சுரைக்காய் – பாதியளவு
- பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள் – சிறிதளவு
செய்முறை:
- சுரைக்காயை நன்றாக கழுவி தோலை சீவிக்கொள்ளவும்.
- இதனை சிறு சிறு துண்டுகளாக்கி பிரஷர் குக்கரில் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- மிதமான தீயில் 2 விசில் வரை வேகவிட்டு ஆறிய பிறகு அதனை மசித்துக் கொள்ளுங்கள்.
- இத்துடன் சீரகத்தூள் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
- அலர்ஜியை ஏற்படுத்தாத தன்மை கொண்ட சரியான உணவு இது.
- பிஞ்சான சுரைக்காயை வாங்குங்கள். காயின் மேல்பகுதியில் கரும்புள்ளிகள், கறைகள் இல்லாமல் பிரெஷ்ஷான காயை வாங்குவது நல்லது.
- இதில் 90 சதவீதம் தண்ணீர் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளது.
- மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் காய் இது.
இதில் கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட பல்வேறு சத்துகள் இருக்கின்றன.
“இதில் 90 சதவீதம் தண்ணீர் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளது”
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
மற்ற கூழ் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்
எந்த ஒரு புது உணவை கொடுப்பதாக இருந்தாலும் 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள்…
உங்கள் குழந்தைக்கு 6 மற்றும் 7 மாதங்களுக்கான உணவு அட்டவணை தேவையெனில் இங்கே கிளிக் செய்யுங்கள்.
மாத வாரியாக உங்களுக்கு டயட் சார்ட் தேவையெனில் எங்களை கூகுள் பிளஸ், ட்விட்டர், பின்ட்ரஸ்ட்டில் பின் தொடருங்கள். மை லிட்டில் மொப்பெட் பக்கத்தை, முகப்புத்தகத்தில் லைக் செய்யுங்கள்.
Leave a Reply