Sweet corn Recipe in Tamil: குழந்தைகளுக்கு நம் வழக்கமாக கொடுக்கும் இட்லி, தோசை போர் அடித்து விடக்கூடாது என்பதற்காக விதவிதமான சிறுதானிய ரெசிபிகளை அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சிறு தானியங்கள் உடலுக்கு நன்மை விளைவிக்கின்றன என்பதால் அவற்றை குழந்தைகள் எப்படி கொடுத்தால் சாப்பிடுவார்கள் என்பதற்காகவே யோசித்து நாங்கள் குழந்தைகளுக்காக சுவையான ரெசிபிகளாக அறிமுகப்படுத்துகின்றோம்.
அந்த வகையில் இன்று நாம் சிறுதானியத்தை விட்டு சற்றே வெளியே வந்து அதே நேரம் ஆரோக்கியத்திற்கும் குறைவில்லாத மற்றொரு ரெசிபியான ஸ்வீட் கார்ன் கீரை தட்டை என்ற ரெசிபியை பார்க்க போகின்றோம்.
பொதுவாக கீரையை பொரியலாக செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். ஆனால் ஸ்வீட் கார்ன் உடன் சேர்ந்து செய்து கொடுத்தால் கண்டிப்பாக விரும்பி உண்பார்கள்.
ஸ்வீட் கார்ன் என்பது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு சிற்றுண்டி. எனவே, அதனை வைத்து குழந்தைகளுக்கு எப்படி பிடித்தமான சிற்றுண்டி செய்து தரலாம் என்று யோசித்தபோது கிடைத்த ரெசிபி தான் இந்த ஸ்வீட் கார்ன் தட்டை.
உடலுக்கு ஆரோக்கியமானது என்பதோடு மட்டுமல்லாமல் இதை செய்வதற்கு மிகவும் மெனக்கிட தேவையில்லை. இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் ஸ்வீட் கார்ன் அடை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
ஸ்வீட் கார்னில் இயற்கையாகவே குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன, எனவே இதில் நிறைந்துள்ள நார் சத்துக்கள், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ரெசிபியை கொடுத்த பலனை கொடுக்கும்.
Sweet corn Recipe in Tamil:

Sweet corn Recipe in Tamil:
ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
- கார்போஹைட்ரேடுகள் நிறைந்துள்ளதால் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை அளிக்கின்றது.
- மேலும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு உணவினை எளிதில் செரிமானமாக செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- குழந்தைகளின் ஆரோக்கியமான கண் பார்வைக்கு தேவையான வேதிப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன.
- வைட்டமின் பி மற்றும் போலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க வல்லது.
- கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
- கீரையில் நிறைந்துள்ள இரும்பு சத்துக்கள் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து ரத்தசோகை ஏற்படாமல் தடுக்க கூடியது.
- இதில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- இதில் நிறைந்துள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே போன்றவை ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- கீரையில் நிறைந்துள்ள நார் சத்துக்கள் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் தோல் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- இத்தனை ஆரோக்கியமும் நிறைந்த கீரை மற்றும் ஸ்வீட் கான் வைத்து எப்படி தட்டை செய்வது என்பதை பார்க்கலாம்.
Sweet corn Recipe in Tamil:
- வேகவைத்த ஸ்வீட் கார்ன்- 1/2 கப்
- நறுக்கிய கீரை- 1/2 கப்
- கடலை மாவு-1/2 கப்
- மைதா மாவு- 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம்- கால் டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தண்ணீர்- அரை கப்
- நெய்- 1 டீ.ஸ்பூன்
Sweet corn Recipe in Tamil:
செய்முறை
- வேகவைத்த ஸ்வீட் கார்ன், நறுக்கிய கீரை, கடலை மாவு, மைதா மாவு, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பவுலில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
- தோசை கல்லை காயவைத்து தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும்.
- பிசைந்து வைத்த மாவினை தோசை கல்லில் வைத்து தட்டையாக தட்டவும்.
- பொன்னிறமாகும் வரை 2 முதல் 3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைக்கவும்.
- மற்றொருபுறம் திருப்பி போடவும்.
- தயிர் அல்லது தேங்காய் சட்னி கொண்டு பரிமாற சுவையாக இருக்கும்.
இதனை காலை டிபன் ஆக மட்டுமல்லாமல் மாலை நேரம் குழந்தைகள் பள்ளி விட்டு வீடு திரும்பும் பொழுது சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம். கீரையுடன் ஸ்வீட் கார்ன், சீரகம், மஞ்சள்தூள் சாப்பிட ருசியாக இருக்கும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டி கொடுத்த திருப்தியும் நமக்கு ஏற்படும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Sweet corn Recipe in Tamil:
Sweet corn Recipe in Tamil:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாமா?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு நன்கு மசித்து கொடுக்கலாம். இல்லையென்றால் கீரை மற்றும் ஸ்வீட் கானை மிக்சியில் நன்றாக அடித்து அதற்குப் பிறகு தட்டையாக தட்டிக் கொடுக்கலாம்.
வேறு காய்கறிகள் சேர்க்கலாமா?
நீங்கள் அழைக்கும் நபர் தீர்க்கலாம் துருவிய கேரட், பீட்ரூட் மற்றும் மசித்த பூசணிக்காய் ஆகியவற்றை சேர்ந்து கொடுக்கலாம்.
தொட்டுக் கொள்வதற்கு எது நன்றாக இருக்கும்?
தேங்காய் சட்னி கொண்டு அல்லது தயிரை தாளித்தோ தொட்டுக் கொண்டால் சுவையாக இருக்கும்.
ஸ்வீட் கார்ன் கீரை தட்டை
Ingredients
- வேகவைத்த ஸ்வீட் கார்ன்- 1/2 கப்
- நறுக்கிய கீரை- 1/2 கப்
- கடலை மாவு-1/2 கப்
- மைதா மாவு- 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம்- கால் டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தண்ணீர்- அரை கப்
- நெய்- 1 டீ.ஸ்பூன்
Leave a Reply