Sweetcorn Salad in Tamil:குழந்தைகளுக்கு கோடை காலத்தில் சுவையான,வித்தியாசமான ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்களா என்ன? அந்த ஸ்னாக்ஸ் ஹெல்த்தியாகவும் இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக செய்து கொடுப்போம் அப்படித்தானே!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கோடைகாலத்திற்கான சரியான தேர்வுதான் இந்த ஸ்வீட் கார்ன் சாலட்.உடல் நிலத்திற்கு ஆரோக்கியமான ஸ்வீட் கார்ன்,பழங்கள் மற்றும் காய்கறிகளும் கலந்துள்ளதுள்ளது.எல்லாவற்றிற்கும் மேலாக இதை எளிதாக செய்து கொடுக்கலாம்.
Sweetcorn Salad in Tamil
- ஸ்வீட் கார்ன் விதைகள் – 1 ½ கப்
- வெங்காயம் (நறுக்கியது)-1
- தக்காளி (நறுக்கியது) -1
- கொத்தமல்லி தழைகள் (நறுக்கியது) – 1 கைப்பிடி
- எலுமிச்சை சாறு – 1 பழம்
- மாதுளை விதைகள் – ¼ கப்
- வெண்ணெய் – 2 டீ.ஸ்பூன்
- சாட் மசாலா – சுவைக்கேற்ப (விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்)
- உப்பு -தேவையானளவு
இதையும் படிங்க : கேரட் அவல் பாயாசம்
Sweetcorn Salad in Tamil
செய்முறை
1) ஸ்வீட் கார்ன் விதைகளை நன்றாக கழுவி கொதிக்குக் தண்ணீரில் போடவும்.
2) 2-3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
3) பானில் பட்டரை ஊற்றி சூடாக்கவும்.வேகவைத்த ஸ்வீட் கார்ன் விதைகளை போட்டு 1-2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
4)நறுக்கிய வெங்காயம்,தக்காளி ,கொத்தமல்லி தழைகள்,மாதுளை விதைகள் சேர்த்து நன்று கிளறவும்.
5)அதனுடன் எலுமிச்சை சாறு ,உப்பு மற்றும் சாட் மசாலா சேர்க்கவும்.
ஸ்வீட் கார்ன் சாலட் பார்ப்பதற்கு வண்ண மையமாக இருப்பதால் குழந்தைகளை கவருமென்பதில் ஐயமில்லை.இதில் ஸ்வீட் கார்னிற்கு பதிலாக வேகவைத்த வேர்க்கடலை சேர்த்து கொடுக்கலாம்.மேலும் மாதுளை பழத்திற்கு பதிலாக ஆப்பிள்,திராட்சை மற்றும் உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான பழங்களை கலந்தும் கொடுக்கலாம்.
இதையும் படிங்க : பூச்சி கடிக்கான எளிமையான வீட்டு வைத்தியங்கள்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply