Thamarai Poo Vidhai Roast : வளரும் குழந்தைகளுக்கான புரோட்டீன் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஹெல்த்தியான ஃபிங்கர் ஃபுட்ஸ் (குழந்தைகள் உணவினை தனது கைகளால் எடுத்து உண்ணுதல்)ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மக்கானா என்ற பெயரே நம்மில் பலருக்கு புதிதாக இருக்கலாம்.ஆனால் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று.ஆம்! தாமரை மலரின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் பொரியையே நாம் மக்கானா என்று அழைக்கின்றோம்.மக்கானா பொரியின் பூர்வீகம் சீனா ஆகும்.வட இந்தியாவில் மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவுப்பொருட்களில் இதுவும் ஒன்று.உடல் நலத்திற்கு ஆரோக்கியமளிக்கும் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியது மக்கானா விதை.
வளரும் குழந்தைகளுக்கு தேவையான புரோட்டின் இதில் அதிகப்படியாக உள்ளது.மேலும் நார்ச்சத்துக்கள்,மெக்னீசியம்,பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவையும் உள்ளன.இதில் ஆன்டி-ஆக்சிடண்டுகள் அதிகமாக இருப்பதால் அழகு சாதன பொருட்களின் தயாரிப்பில் மக்கானா முதலிடம் வகிக்கின்றது. இதை தொடர்ந்து உண்பதால் சருமத்தையும் பிரகாசமடைய செய்கின்றது. நாம் இப்பொழுது ரெசிபியை காணலாம்.
Thamarai Poo Vidhai Roast :
- மக்கானா பொரி (தாமரை விதைகள்) – 1 கப்
- நெய் – 1 டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள் – இம்மியளவு
- மிளகு தூள் – இம்மியளவு
இதையும் படிங்க: 6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்
உங்கள் குழந்தைகளுக்கான சத்தான மக்கானா கீர்ரை வீட்டிற்கே தேடி வந்து தருகின்றோம்!
செய்முறை
1.மக்கானா விதைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். புழுக்கள் ஏதேனும் உள்ளதா என பார்க்கவும்.
2.பானை சூடாக்கி அதில் நெய் ஊற்றவும்.
3.மக்கானா விதைகளை நெய்யில் போட்டு மொறுமொறுப்பாகும் வரை சில நிமிடங்கள் வறுக்கவும்.
4.மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
5.மசாலா பொருட்கள் மாக்கானாவில் ஒட்டுமாறு நன்கு கிளறவும்.
6.வறுத்த மக்கானா விதைகளை காற்று புகாத டப்பாவில் போட்டு மூடவும்.
குழந்தைகளுக்கு முதலில் ஃபிங்கர் ஃபுட்ஸ் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது இந்த மக்கானா ரோஸ்டினை கொடுக்கலாம்.குழந்தைகளின் சருமத்தினை பொலிவடைய செய்யும்.பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு டேஸ்டியான ஸ்னாக்ஸ் ரெசிபியாக இருக்கும்.குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் உண்ணக்கூடிய ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி !
Leave a Reply