Thayir kichadi for babies:
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
தயிர் உடலுக்கு நல்லது… குழந்தைகள் உண்ணும் உணவில் தயிர் இருப்பதால் குழந்தைகளுக்கு நன்மையே. இதில் கால்சியம் நிறைந்துள்ளது. வயிற்றுக்குச் சிறந்த உணவு. பசும்பாலில் தயாரித்த தயிராக இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த ரெசிபியை செய்ய, அதிகம் புளிக்காத தயிராகப் பயன்படுத்துவது நல்லது.
8 மாதத்துக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்தத் தயிர் கிச்சடி ரெசிபியை செய்து தரலாம்.
தயிர் கிச்சடி
- அரிசி – 1 கப்
- சிறு பயறு – 2 டேபிள்ஸ்பூன்
- சீரகம் – ½ டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 5 இலைகள்
- தயிர் – ¼ கப்
- நெய் – தாளிக்க சிறிதளவு
செய்முறை
- அரிசியையும் சிறுபயறையும் நன்றாகக் கழுவி வேக வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் பிளெயின் கிச்சடி.
- பிளெயின் கிச்சடி ஆறியதும் அதில் தயிரைச் சேர்த்துக் கலக்கவும்.
- தவாவில் நெய் ஊற்றி, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.கடுகு வேண்டுமென்றால் சேர்த்து கொள்ளலாம்.
- மேலும், அதில் கறிவேப்பிலையைப் போட்டு தாளிக்கவும். (குழந்தைக்கு வாயில் சிக்காதபடி சிறிது சிறிதாகக் கிழித்துப் போடுங்கள்)
- தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கலாம்.
- இதே தாளித்த பாத்திரத்தில், தயிர் சேர்த்த கிச்சடியைக் கலந்து ஓரிரு நிமிடம் சூடேற்றி இறக்கிவிடவும்.
- வெதுவெதுப்பான சூட்டில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பலன்கள்
- தயிரில் உள்ள நல்ல பாக்டீரியா குழந்தைகளின் வயிற்றுக்கு நல்லது செய்யும்.
- கால்சியம் இருப்பதால் எலும்புகள், பற்கள் வளர்ச்சிக்கு உதவும்.
- உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வெப்பக் காலத்துக்கு மிகச்சிறந்த உணவு.
- செரிமானச் செயல்பாடுகள் சீராக நடக்கும்.
- மாவுச்சத்து, புரதம் இரண்டும் சேர்வதால் தசை வளர்ச்சிக்கு நல்லது.
- ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு இது.
- மதிய உணவாக இந்தத் தயிர் கிச்சடியைக் கொடுக்கலாம். இரவில் இதைச் செய்து கொடுப்பதைத் தவிர்க்கவும்.
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply